வெள்ளி, 28 ஜனவரி, 2022

இந்தியக் கடற்படை மற்றும் இந்தியா இன்ஃபோலைன் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்


 இந்தியக்  கடற்படை வேலை வாய்ப்பு நிறுவனம் (ஐஎன்பிஏ) மற்றும் இந்தியா இன்ஃபோலைன் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் ஆகியவை 27 ஜனவரி 2022 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. முன்னாள் கடற்படை வீரர்களை இந்தியா இன்ஃபோலைன் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட்டில் பணியமர்த்துவதற்காக இந்தப்  புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

இந்தியக்  கடற்படைப்  பணியாளர் சேவைகளின் கட்டுப்பாட்டாளர் வைஸ் அட்மிரல் சூரஜ் பெர்ரி மற்றும் இந்தியா இன்ஃபோலைன் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் செயல் இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு மோனு ராத்ரா ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

முன்னாள் படைவீரர்களுக்கு அவர்களின் தகுதிகள், அனுபவம் மற்றும் சேவைக் காலத்தில் பெற்ற திறன்களுக்கு ஏற்ப வாய்ப்புகளை வழங்குவதை இந்தியா இன்ஃபோலைன் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்திய கடற்படை வேலைவாய்ப்பு முகமையின் முயற்சிகளைப் பாராட்டிய திரு மோனு ராத்ரா, நாட்டிற்குத் தங்கள் சேவையை வழங்கிய வீரர்களுக்கான வேலைவாய்ப்புகளைக் கண்டறிய அவை உதவுவதாக கூறினார்.

வைஸ் அட்மிரல் சூரஜ் பெர்ரி கூறுகையில், “நமது படைவீரர்கள், நமது நாட்டிற்கு செய்த சேவைக்குப் பிறகு வேலைவாய்ப்புகளைப்  பெறுவதை எளிதாக்குவதற்கு இந்தியக்  கடற்படை வேலைவாய்ப்பு முகமை உறுதிபூண்டுள்ளது,” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக