வெள்ளி, 28 ஜனவரி, 2022

படையில் இருந்து விலக்கப்பட்ட குக்ரி போர்க்கப்பல், டையு நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.


 உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்தியக் கடற்படையின் முதல் ஏவுகணை ஏந்திய  போர்க்கப்பலான ஐஎன்எஸ் குக்ரி (பி49),  தாத்ரா & நாகர் ஹவேலி மற்றும் டாமன் & டையூ நிர்வாகத்திடம் 26 ஜனவரி 2022 அன்று ஒப்படைக்கப்பட்டது.

நேர்த்தியாக நடைபெற்ற விழாவில் படையில் இருந்து விலக்கப்பட்ட ஐஎன்எஸ் குக்ரியை தாத்ரா & நாகர் ஹவேலி மற்றும் டாமன் & டையூ மற்றும் லட்சத்தீவுகள் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகியான திரு பிரஃபுல் படேலிடம் ரியர் அட்மிரல் அஜய் வினய் பவெ ஒப்படைத்தார்.

இந்திய கடற்படை இசைக்குழுவினரின் கண்கவர் நிகழ்ச்சியும், நங்கூரமிடப்பட்ட கடற்படைக் கப்பல்களின் ஒளியூட்டலும் இந்நிகழ்ச்சியில் இடம்பெற்றன.

கப்பலை ஒப்படைப்பதற்கு முன், சேவையில் இருந்தபோது கப்பல் செய்த சாதனைகள் மற்றும் அதன் திறன்கள் குறித்து  திரு பிரபுல் படேலிடம் விளக்கப்பட்டது.

பொதுமக்கள் பார்வையிடுவதற்காக குக்ரியை அருங்காட்சியகமாக மாற்ற டையூ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. தற்போதுள்ள குக்ரி நினைவகத்துடன் இணைந்து இந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக