சனி, 29 ஜனவரி, 2022

எதிர்கால மருத்துவத்திற்கு செயற்கை நுண்ணறிவும், டிஜிட்டல் மருத்துவமும் முக்கியமானவை என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்


 எதிர்கால மருத்துவத்திற்கு செயற்கை நுண்ணறிவும், டிஜிட்டல் மருத்துவமும் முக்கியமானவை என்று மத்திய  அறிவியல், தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் (தனி பொறுப்பு) புவி அறிவியல் இணை அமைச்சர் (தனி பொறுப்பு), பிரதமர் அலுவலகம், ஊழியர் நலன், மக்கள் குறை தீர்ப்பு, ஓய்வூதியங்கள், அணுசக்தி, விண்வெளித்துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

 ஜம்முவில் உள்ள அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கல்விக் கழகத்திற்குப் பயணம் செய்த அமைச்சர், உருவாகி வரும் புதிய கட்டிடங்களை ஆய்வு செய்ததோடு அண்மையில் கட்டப்பட்ட கட்டிடங்களை திறந்து வைத்தார். இந்த நிறுவனத்திற்கான தனித்துவ அடையாளத்தை உருவாக்க இத்தகைய துறைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் யோசனை தெரிவித்தார். தொலைதூர மருத்துவமும், ரோபோ அறுவை சிகிச்சையும் ஏற்கனவே பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன என்றும் இத்தகைய புதிய வழிமுறைகள் பெருந்தொற்று காலத்தில் மிகவும் பயன்பட்டன என்றும் அவர் கூறினார்.

ஜம்மு எய்ம்ஸ் மருத்துவமனையில் வெளிநோயாளிகள் பிரிவு விரைவில் தொடங்கப்படும் என்று தெரிவித்த டாக்டர் ஜிதேந்திர சிங், முதல் தொகுப்பினர் இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தேதியிலிருந்து இந்த வளாகத்தில் இருந்து பணியாற்றுவார்கள் என்றும் இரண்டாவது தொகுப்பினர் பின்னர் இவர்களை தொடர்வார்கள் என்றும் கூறினார். 30 உறுப்பினர் துறை வல்லுநர்கள் ஏற்கனவே இணைக்கப்பட்டிருப்பதாகவும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் 6 தளங்களை கொண்ட இந்த எய்ம்ஸ் மருத்துவமனை முழுமையாக செயல்படத் தயாராகிவிடும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக