சனி, 29 ஜனவரி, 2022

வெப்பம், புகை ஆகியவற்றை வெளியேற்றும் கூடுதல் வசதிகள் இருந்தால், இத்தகைய காயங்களைத் தவிர்க்க முடியும்.

 டைப்- III பேருந்துகளில் தீ எச்சரிக்கை அமைப்பு மற்றும் தீ பாதுகாப்பு நடைமுறைகளை அறிமுகப் படுத்துவதற்கான அறிவிக்கையை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஜனவரி 27-ம் தேதி வெளியிட்டுள்ளது. இதற்காக ஏஐஎஸ்-135-ல் திருத்தம் செய்யப்படுகிறது.

தற்போதைக்கு ஏஐஎஸ்-135ன்படி, பேருந்து என்ஜின் பகுதியில்  ஏற்படும் தீ எச்சரிக்கை அமைப்பு , தீத்தடுப்பு நடைமுறைகளுக்கான அறிவிக்கை உள்ளது. பயணிகள் பகுதியில் தீ விபத்தால் காயம்  ஏற்படுவதற்கு அதிக அளவிலான வெப்பமும், புகையுமே காரணம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வெப்பம், புகை ஆகியவற்றை வெளியேற்றும் கூடுதல் வசதிகள் இருந்தால், இத்தகைய காயங்களைத் தவிர்க்க முடியும்.

பயணிகள் பகுதியில் வெப்பத்தை 50 டிகிரிக்குள் கட்டுப்படுத்தும் வகையில் தீவிர தீப்  பாதுகாப்பு நடைமுறைகளைக் கொண்ட பேருந்து வடிவமைப்பை மேற்கொள்ள இது வழிவகுக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக