நிரப்பப்படாமல் காலியாக கிடக்கும் ஆசிரியர் பணிகள்: ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தலைவரை உடனே நியமிக்க வேண்டும்!
- DR .அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், அவற்றை மேற்கொள்ள வேண்டிய ஆசிரியர் தேர்வு வாரியம் முழுநேர தலைவர் இல்லாமல் முடங்கிக் கிடக்கிறது. ஆசிரியர்கள் நியமனம் சார்ந்த முக்கிய பதவி 3 மாதங்களாக காலியாக இருப்பது கல்வி வளர்ச்சிக்கு எந்த வகையிலும் உதவாது.




