புதன், 31 ஜூலை, 2019

பிக்பாஸ் போடு ஆட்டம் போடு டாஸ்கில் நடந்த சுவையான சுவாரசியங்கள்

பிக்பாஸ் போடு ஆட்டம் போடு டாஸ்கில் நடந்த சுவையான சுவாரசியங்கள்



37வது நாள் துள்ளுவதோ இளமை என்ற எம்.ஜி.ஆர் பாடலுடன் இன்றைய நாள் துவங்கியது. இதை தொடர்ந்து  முகின் தான் மற்ற போட்டியாளர்களுக்கு ரேப் சாங் கற்றுக்கொடுத்தார். சாண்டி நச்சுனு ஒரு பாடலை பாடினார். பின்னர் அபிராமி காதலா நட்பா என்று  ரேப் சாங் பாடினார். இவருக்கு போட்டியாக ரேஷ்மா மற்ற போட்டியாளர்களைக் கொண்டு ரேப் சாங் பாடினார்.

இன்றைய நாளில் போட்டியாளர்களுக்கு ல்க்‌ஷூரி பட்ஜெட்டுக்கான போடு ஆட்டம் போடு என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது.  இதன் விதிமுறைகளை மதுமிதா அனைவருக்கும் படித்து காட்டினார். 

இந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் அனைவரும் கொடுக்கப்பட்டுள்ள கதாபாத்திரத்திற்கான உடைகளை அணிந்து கொண்டு, அவர்களுக்கு என்று போடப்படும் பாடலுக்கு நடனம் ஆட வேண்டும். பாடல் ஒலித்த 15 வினாடிக்குள் மேடை ஏறி ஆட வேண்டும்.  இல்லையேன்றால் ல்க்‌ஷூரி பட்ஜெட்டுக்கான பாய்ண்ட் குறைக்கப்படும்.

சேரன் – ரஜினிகாந்த் (ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்)
அபிராமி – பத்மினி (மறைந்திருந்து பார்க்கும் மர்ம என்ன)
சாண்டி – சிம்பு (தத்தை தத்தை தத்தை இவன் மன்மதன்)
சரவணன் – விஜயகாந்த் (கடைவீதி கலகலக்கும்)
கவின் – அஜித் (ஆலுமா டோலுமா ஐசாலக்கடி மாலுமா),
முகென் – விஜய் (போக்கிரி பொங்கல்)
தர்ஷன் – கமல் (சகலகலா வல்லவன்)
லோஸ்லியா – திரிஷா (கட்டு கட்டு கீரை கட்டு)
ரேஷ்மா - ரம்யா கிருஷ்ணன் (வை ராஜா வை)
மதுமிதா - சரோஜா தேவி (ஒரு பெண்ணை பார்த்து நிலவை),
ஷெரின் - குஷ்பு (போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி)
சாக்‌ஷி - தமன்னா (தஞ்சாவூர் ஜில்லாக்காரி)

குரூப் டான்ஸ் (அனைவரும் மேடையின் பக்கத்தில் ஆட வேண்டும்) - ஊத்திக்கிண்ணு கடிச்சிக்கவா கடிச்சுக்கிட்டு ஊத்திக்கவாஎன்று பாடல் கொடுக்கப்பட்டது. 

முதலில் குரூப் டான்ஸ்க்கான (ஊத்திக்கிண்ணு கடிச்சிக்கவா கடிச்சுக்கிட்டு ஊத்திக்கவா) பாடல் ஒலித்தது. ஆனால், அபிராமியால்  வந்து ஆட முடியாததால் வார்னிங் கொடுக்கப்பட்டு மதிப்பெண்கள் குறைக்கப்பட்டது. 




  • இதனை தொடர்ந்து வேட்டி தூக்கி கட்டி கொண்டு கழிவறை சென்ற சரவணனின் விஜயகாந்த் கெட்டப்புக்கான (கடைவீதி கலகலக்கும் )என்ற பாடல் ஓலித்தது . இந்தப் பாடலுக்கு  சரவணன் விஜயகாந்த் போல ஆடினார்.





  • அடுத்தாக ரஜினியின் ராமன் ஆண்டாலும் என்ற பாடலுக்கு சேரன் அவரது ஸ்டைலில் ஆடினார். இதற்கு மற்ற போட்டியாளர்கள் உற்சாகம் கொடுத்ததோடு, அவருக்கு பாராட்டும் தெரிவித்துள்ளனர். 






  • 3வது தாக தல அஜித்தின் வேதாளம் படத்தின் ஆலுமா டோலுமா என்ற பாடலுக்கு கவின் மங்காத்தா உடையில் நடனம் ஆடினார்.







 இதற்கிடையே விஜய் வேஷத்தில் இருந்த முகின் அவர்கள் அஜித்தாக இருக்கும் கவினுக்கு கையில் வாட்ச் ஒன்றை பரிசாக கட்டிவிட்டார்.





  • 4வது ஆக விஜய் – த்ரிஷா கூட்டணியில் வந்த கில்லி படத்தின் கட்டு கட்டு கீரை கட்டு என்ற பாடல் ஒலித்தது . இந்த பாடலுக்கு த்ரிஷாவாக இருந்த லாஸ்லியா சூப்பராக ஆடினார்.


  • 5வது தத்தை தத்தை தத்தை என்ற பாடல் ஒலித்தது. இந்த பாடலுக்கு சிம்புவாக இருந்த சாண்டி மாஸ்டர் மற்ற போட்டியாளர்களும் சூப்பராக ஆடினார்.


  • 6வது ஒரு பெண்ணை பார்த்து நிலவை என்ற பாடல் ஒலித்தது. சரோஜா தேவியாக உடை அணிந்திருந்த மதுமிதா அந்த காலகட்டத்திற்கு ஏற்ப சரோஜா தேவி போல டான்ஸ் ஆடினார். ஆனால் தாமதமாக வந்து ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கடைசியில் இலங்கை மற்றும் மலேசியாவின் கலாச்சாரம், மக்கள், உணவு, திருவிழா, சினிமா பற்றி லோஸ்லியா மற்றும் முகின் ஆகியோர் பகிர்ந்துகொண்டனர். 

செவ்வாய், 30 ஜூலை, 2019

பிக்பாஸ் ஓபன் நாமினேஷன் ; கதறி அழுத போட்டியாளர்கள்

மீரா மிதுன் வெளியே போயிட்டார், இனிமே யாரு கன்டென்ட் கொடுப்பா ? என்ற பலரது கேள்விக்கு பிக்பாஸ் ஓபன் நாமினேஷன் பிராசஸ் மூலமாக தக்க பதிலடி கொடுத்துள்ளார்.



இதுவரை கன்பெக்‌ஷன் ரும்க்குள் நடந்து வந்த இந்த நாமினேஷன் பிராசஸ் முதல் முறையாக அனைவரது முன்னிலையிலும் நடந்து இருக்கிறது. இந்த வாரம் எலிமினேஷனுக்கு மது (6) , கவின் (6)  ரேஷ்மா (4) சாக்க்ஷி (3)  மற்றும் அபிராமி (2) என ஐந்து பேர் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளனர்.

சேரன் கடந்த வாரம் மக்களால் பாதுகாக்கப்பட்டுள்ளதால், அவரை இந்த வாரம் ரேஷ்மாவை தவிர யாரும் நாமினேட் செய்யவில்லை. ரேஷ்மா  நாட்டாமை டாஸ்க்கில் யார் மீதோ காட்ட வேண்டிய கோபத்தை என் மீது காட்டியதால் சேரனை நாமினேட் செய்கிறேன் என்று கூறினார். குறிப்பாக கடந்த நாட்களில் சேரன் மீது அதிருப்தியில் இருந்த கவின், சரவணன், சாத்தான் என்று கூறிய சாண்டி மாஸ்டர் ஆகியோர் யாரும் நாமினேட் செய்யவில்லை.

கவினை இந்த வாரம் பெண்களில் லாஸ்லியாவை தவிர ரேஷ்மா, அபிராமி, ஷெரின், மதுமிதா மற்றும் சாக்‌ஷி முதல் முறையாக கவினை நாமினேட் செய்தனர். அதுபோல ஆண்களில் சேரன் மட்டுமே நாமினேட் செய்தார். மேலும் சாக்‌ஷி தன்னை நாமினேட் செய்த காரணத்தால் அதிருப்தியில் இருத்தார். கவின் சென்ற வாரம் சாக்‌ஷியை நாமினேட் செய்தார் என்பது குறிப்பிடதக்கது.

மதுமிதாவை கடந்த இரண்டு வாரங்களுக்கு பிறகு நாமினேஷன் செய்யப்பட்டுள்ளார். ஆண்களில் கவின், சாண்டி, முகின், தர்ஷன் மற்றும் பெண்களில் அபிராமி, லாஸ்லியாவும் நாமினேட் செய்தனர்.



ரேஷ்மா முதல் முறையாக நாமினேட் செய்யப்பட்டுள்ளார். அவரை முகின், தர்ஷன், சேரன், கவின் ஆகியோர் நாமினேட் செய்தனர். முகின் ரேஷ்மாவை ஒருவரிடம் ஒரு விஷயத்தை கேட்டு அதனை மற்றொருவரிடம் சொல்லும் போது தவறாகவே சொல்கிறார் என்று கூறி நாமினேட்  செய்தார். ரேஷ்மாவும் முகின், தர்ஷன் ஆகியோர் தன்னை நாமினேட் செய்த காரணத்தால் கண்ணீர் சிந்தி அழுதார்.

சாக்‌ஷியை மதுமிதா, லாஸ்லியா, மற்றும் சரவணன் ஆகியோர் நாமினேட் செய்தனர். மேலும் கவினுக்கும் – சாக்‌ஷிக்கும் இடையிலான காதலுக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. சாக்‌ஷி மன அழுத்தம் காரணமாக ஷெரினிடம் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

அபிராமியை சாண்டி மற்றும் சரவணன் நாமினேட் செய்தனர். அபிராமி தன்னை இந்த வாரமும் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளதால் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.


சாண்டி வெளியே வரும் போது அவருக்கு கண்டிப்பாக ஜெயில் காத்திருக்கிறது.

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் இருந்து சாண்டி வெளியே வரும் போது அவருக்கு கண்டிப்பாக ஜெயில் காத்திருக்கிறது. 



பிக்பாஸ் ஓபன் நாமினேஷன் ; கதறி அழுத போட்டியாளர்கள்

வசந்த பாலன் தனது பெஸ்புக் இவ்வாறு பதிவிட்டுள்ளார் :

நடன இயக்குநர் சாண்டியை நான் அறிந்ததில்லை. ஜெயில் திரைப்படத்தில் ஒரு நடனக்காட்சி இருந்தது. ஜீவி நடன இயக்குநராக யாரை போடப்போகிறீர்கள் என்று கேட்டார்.பட்ஜெட்டுக்குள் யார் வருகிறார்கள் என்று பார்த்து போட வேண்டும் என்றேன். சர்வம் தாள மையம் திரைப்படத்தில் சாண்டி திறமையாக நடனக்காட்சிகள் அமைத்தார் என்று பரிந்துரை செய்தார்.

இசையமைப்பாளரைத் தாண்டி இப்ப ஹீரோ வேற..,
அவர் சொல் தட்ட முடியுமா. உடனே சாண்டியிடம் பேசுங்கள் என்று என் தயாரிப்பு மேலாளரிடம் கூறினேன். நம் பட்ஜெட்டுக்குள் வருவாரா என்று கேட்கச்சொன்னேன். சாண்டி எந்த நிபந்தனையின்றி எங்கள் பட்ஜெட்டிற்குள் எல்லாவற்றுக்கும் சம்மதித்தார். படப்பிடிப்புக்கு முன் இரண்டு முறை சந்தித்தேன்.நடனக்காட்சியை விவரித்தேன். அமைதியாக பதிலுரைத்தார். படப்பிடிப்பிலும் அமைதியாக தன் வேலையை பார்த்து கொண்டிருப்பார்.நான் தான் அதிகம் கத்திக்கொண்டு இருந்தேன். அந்த நாட்களில் எனக்கு அவரை பற்றி எந்த மதிப்பீடும் உருவாகவில்லை. இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சி பார்க்கும் போது  எத்தனை ஜனரஞ்சகமான கலைஞன் என்று தோன்றுகிறது.

வாழ்த்துகள் சாண்டி.
வென்று வாருங்கள்.
ஜெயில் காத்திருக்கிறது.


நீங்கள் விடுத்த சவாலில் ஜெயித்து விட்டீர்கள். நீங்கள் போட்டியிலிருந்து வெளியேறுவதற்கு முன்பாக என்னை வெளியேறிவிட்டீர்கள் - மீரா மிதுன்

மதுவுக்கும் , சேரனுக்கும் அநீதி இழைத்த கமல்ஹாசன்

கவின் சேரனுக்கு எதிராக செயல்பட எட்டு முக்கிய காரணங்கள்.

அபிராமி மற்றும் லோஸ்லியா தங்களை நடுநிலையாக காட்டி கொள்ள விரும்பி செய்யும் நாடகம்.

சேரன் சிறையில் அடைக்க படமால் இருக்க நாடகம் போடும் லோஸ்லியா

திங்கள், 29 ஜூலை, 2019

நீங்கள் விடுத்த சவாலில் ஜெயித்து விட்டீர்கள் - மீரா மிதுன்

நீங்கள் விடுத்த சவாலில் ஜெயித்து விட்டீர்கள். நீங்கள் போட்டியிலிருந்து வெளியேறுவதற்கு முன்பாக என்னை வெளியேறிவிட்டீர்கள்


மீரா மிதுன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். முந்தைய நாள் நிகழ்ச்சியில் சேரனுக்கு ஆதரவான கருத்துக்களை கமல்ஹாசன் பேசும் போது பார்வையாளர்கள் மத்தியில் இருந்து பலத்த ஆரவாரம் எழுந்தது. அப்போதே மீராவுக்கு இந்த வாரம் வெளியேற்றப்படலாம் என சந்தேகம் எழுந்தது. அதனால் சாண்டிக்கும் மீராவுக்கு  ஒரு உரையாடல் நிகழ்ந்தது. ஆனால் அப்போதும் சேரன் மீதான தன்னுடைய கருத்தை மீரா மிதுன் மாற்றிக்கொள்ளவே இல்லை. பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த மீரா மிதுன் மிகவும் பதட்டமாக காணப்பட்டார். 

கமல்ஹாசன் நிகழ்ச்சியில் தோன்றி எலிமிமேஷனுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள போட்டியாளர்களை ஒவ்வொரையும் காப்பாற்றி, கடைசியில் மீராவை வாங்க பேசலாம் என அழைத்த உடன் பார்வையாளர்கள் மத்தியில் ஆரவாரம் எழுந்தது.  பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்து மீரா வெளியேறிய போது சேரனை பார்த்து “நீங்கள் விடுத்த சவாலில் ஜெயித்து விட்டீர்கள். நீங்கள் போட்டியிலிருந்து வெளியேறுவதற்கு முன்பாக என்னை வெளியேறிவிட்டீர்கள்” என்றார் மீரா. இதை கேட்டு அதிர்ந்து போன சேரன், நான் எப்ப சொன்னேன் என்று கூறி திகைத்து நின்றார். 

ஹவுஸ்மேட்களிடம் இருந்து விடைப் பெற்று பிக்பாஸ் மெடலை உடைத்து  பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். பின்பு கமல்ஹாசனை சந்தித்தார் மீரா. அவரிடம் உரையாடிய கமல், தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வது தான் மனிதன். அது போல உங்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டால் நீங்களும் வெற்றியாளர் தான். என்று அறிவுரை கூறி வெளியேற்றினார்.







கவினால் பாதிக்கப்பட்ட லாஸ்லியா மீள்வாரா ?

கவினால் பாதிக்கப்பட்ட லாஸ்லியா மீள்வாரா ?



கவின் பிக்பாஸ் 3 சீசன் ஆரம்பம் முதலே நான்கு பேரை காதலிப்பதாக கூறி வந்தார். இதற்கு காரணமாக அவர் சொன்னது ஜாலியாக மற்றும் மக்கள் பொழுதுப்போக்கு அம்சமாக அமையும் என்று கூறினார். ஆனால் அதற்கான எல்லையை கவின் வகுக்க வில்லை,அனைவரிடம் நெருக்கம் காட்டி வந்தார். இதை தவறாக உணர்ந்த சாக்க்ஷி தன்னை காதலிப்பதாக உணர்ந்தார். இதனை தன் நெருங்கிய நண்பர்கள் ஆன ஷெரின் மற்றும் அபிராமியுடன் பகிர்ந்து கொள்ள அவர்களுக்கு கவின் காதல் ரசம் பேச்சை ரசிக்கவில்லை, அதனால் விலகி நட்புடன் மட்டும் பழகி வந்தனர். ஆனால் இதனை லாஸ்லியா அறியாமல் கவின் தன்னிடம் மட்டும் தான் அதிகம் நெருக்கம் காட்டுகிறார், என நம்பி பழகி வந்தார்.

மதுவுக்கும் , சேரனுக்கும் அநீதி இழைத்த கமல்ஹாசன்

கமல் வரும் நாளான எலிமினேஷன் நாட்களில் லாஸ்லியா பேசும் பொது மக்கள் செய்யும் ஆரவாரத்தை கவனித்த கவின் லாஸ்லியாவிடம் அதிகம்  நெருக்கம் காட்டினார். இதனை அறியாத லாஸ்லியாவும் கவினுடன் நெருக்கமாக நட்புக்கு மேல் புனித தன்மை பழகி வந்தார். பிக்பாஸ் ஹவுஸ்மேட்களும் கவினையும் லாஸ்லியாவையும் இணைத்து காலாய்த்து கொண்டு இருந்தனர். இதனை கவினும், லாஸ்லியாவும் உள்ளுர மகிழ்ந்தனர். லாஸ்லியா கவினை அண்ணா என்று அழைப்பதும், கவின் வருந்துவது போல நடித்து பின்பு காதலில் உருகுவது போன்று பேசுவதும், வாடிக்கையாக இருந்து வந்தது இதன் பொருட்டு லாஸ்லியா மனதளவில் கவினுடன் நெருங்கி நட்புக்கு மேல்புனித தன்மையுடன் பழகி வந்தனர்.

பில்டப் கொடுக்கும் கமல் ; மீராவிடம் புஸ்வானம் ஆவார்

கவின் லாஸ்லியாவின் ஜோடியை கண்டு சாக்க்ஷி பொசசிவ் ஆனார், சாக்க்ஷியும் கவின் தன்னிடம் காட்டிய நட்புக்கு மேல் புனித தன்மையுடன் லாஸ்லியாவிடம் நெருக்கம் காட்டி வருகிறார் என்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்பு சில நேரங்களில் கோபம் அடைந்தும் மற்றும் மனம் உடைந்தும் காணப்பட்டார். இதனை பார்த்து கொண்டிருந்த ஹவுஸ்மேட்களும் கவின் மீது அதிருப்தி அடைந்தனர்.

கவின் சேரனுக்கு எதிராக செயல்பட எட்டு முக்கிய காரணங்கள்

இதனை உணர்ந்த கவினும் சாக்க்ஷியை சமாதானம் செய்ய முயற்சித்தார், இதனை லாஸ்லியாவும் தவறாக உணர்ந்தார். அதனால் லாஸ்லியா கவினுடன் சென்று “ நாம் பழக்கத்தால் சாக்க்ஷி மனம் வருந்துவதால் நீ என்னிடம் பேசமால் இரு”  என கூறி வந்தார். இதனால் இரண்டு லட்டு சாப்பிட நினைத்த கவினுக்கு கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை. இது லாஸ்லியாவிற்கும் மனதளவில் பாதிப்பாக அமைந்தது. பின்பு லாஸ்லியாவிற்கு கவினுக்கும் சாக்க்ஷிக்கும் இருக்கும்  நட்புக்கு மேல் புனித தன்மையுடன் இருந்த உறவு அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதனால் கவினுடன் பேசமால் தவிர்த்தார்.


பின்னர் கவின் அழுது புலம்பி இரண்டு நாள் சோகமாக சுற்றி  லாஸ்லியா, சாக்க்ஷி இருவரையும் சமாதானம் செய்தார். மேலும் இருவரிடமும் நட்பாக பழகி வருவதாக கூறினார். லாஸ்லியாவும் கவினிடம் மன்னிப்பு கூறினார். ஆனால் லாஸ்லியா நட்புக்கு மெல் புனித உறவால் பாதிக்கப்பட்டு கடந்த வாரம் மிகவும் சோகமாக காணப்பட்டார், டாஸ்கில் கவனமின்றி மனம் போன போக்கில் செயல் பட்டார். இதனை கமலும் நேற்று சுட்டி காட்டினார். இன்று அபிராமியுடன் பேசுகையில் கூறியதாவது தான் மனதளவில் பாதிக்க ப்பட்டுள்ளதாகவும் அதில் இருந்து மீண்டுவர தான் முயற்சித்து வருகிறேன். என்று கூறினார். பழைய லாஸ்லியாவை காண மக்கள் ஆர்வமாக உள்ளனர்.

அபிராமி மற்றும் லோஸ்லியா தங்களை நடுநிலையாக காட்டி கொள்ள விரும்பி செய்யும் நாடகம்.

வாரம் ஒருவரை டார்கேட் செய்யும் மீரா மிதுன் , இந்த வாரம் பலியான சேரன்

சேரன் சிறையில் அடைக்க படமால் இருக்க நாடகம் போடும் லோஸ்லியா