வெள்ளி, 8 நவம்பர், 2019

மருதாநதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட எடப்பாடி கே.பழனிசாமி ஆணையிட்டுள்ளார்

வேளாண் பெருங்குடி மக்களின் கோரிக்கையினை ஏற்று திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம், மருதாநதி அணையிலிருந்து 09.11.2019 முதல் பாசனத்திற்கான தண்ணீர் திறந்து விட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் ஆணையிட்டுள்ளார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் அறிக்கை 8.11.2019 திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம், மருதாநதி அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.

வைகை அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட ஆணை - எடப்பாடி கே.பழனிசாமி

வைகை அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் ஆணையிட்டுள்ளார்.

மதுரை, இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் உள்ள வேளாண்
பெருங்குடி மக்களிடமிருந்து வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக
தண்ணீர் திறந்து விடுமாறு கோரிக்கைகள் வந்துள்ளன. 

JEE நுழைவுத்தேர்வை தமிழில் நடத்த வேண்டும் - TTV. தினகரன்

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான JEE நுழைவுத்தேர்வை தமிழில் நடத்த வேண்டும்:
தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!
- TTV. தினகரன் MLA
(பொதுச்செயலாளர், அமமுக.)

மத்திய அரசின் ஐ.ஐ.டி (IT) உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான பொது நுழைவுத் தேர்வை (JEE Main) தமிழ் மொழியிலும் நடத்திட வேண்டும். இதற்குரிய நடவடிக்கைகளை பழனிசாமி அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வுகளை தமிழிலும் நடத்த மத்திய அரசு முன்வர வேண்டும்! - DR. S. ராமதாஸ்

ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வுகளை தமிழிலும்
நடத்த மத்திய அரசு முன்வர வேண்டும்!
- DR. S. ராமதாஸ் அறிக்கை.
(நிறுவனர், பாமக.)

ஐ.ஐ.டி. என்றழைக்கப்படும் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட தொழில்நுட்பப் படிப்புகளில் சேருவதற்கான கூட்டு நுழைவுத் தேர்வு இந்த ஆண்டும் இந்தி, ஆங்கிலத்துடன் குஜராத்தி மாநில மொழியிலும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழுக்கு எதிரான இந்த சமூக அநீதியை நியாயப்படுத்த தேசிய தேர்வு முகமை அளித்துள்ள விளக்கங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவையாகும்.

வியாழன், 7 நவம்பர், 2019

இழி சொற்களை ஏற்க மாட்டோம்; அவை எங்கிருந்து புறப்பட்டதோ, அந்த இடத்திற்கே போய்ச் சேர்ந்து விடும். - மு.க.ஸ்டாலின்.

தியாகம் செய்து அரசியலுக்கு வந்து, மக்கள் தரும்
பதவிப் பொறுப்புகளை அடைந்தவர்களுக்கு தான்,
தியாகத்தைப் புரிந்து கொள்ளும் அறிவும் பக்குவமும்,
கொச்சைப்படுத்தாத சிந்தனையும் வரும்
- மு.க.ஸ்டாலின்.
(தலைவர், திமுக.)

திரும்ப வராதது காலம்: திருத்தி எழுதப்பட முடியாதது வரலாறு. எவ்வளவு படித்திருந்தாலும், சிலருக்குதீ இந்த அடிப்படை புரியாது. சுமார் 44 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின்தியாக வரலாற்று நிகழ்வுகளை, அவருடைய அரசியல் லாப நோக்கில், வக்கிர எண்ணத்துடன், திருத்தி எழுத எத்தனிக்கிறார், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்,