வெள்ளி, 8 நவம்பர், 2019

மருதாநதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட எடப்பாடி கே.பழனிசாமி ஆணையிட்டுள்ளார்

வேளாண் பெருங்குடி மக்களின் கோரிக்கையினை ஏற்று திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம், மருதாநதி அணையிலிருந்து 09.11.2019 முதல் பாசனத்திற்கான தண்ணீர் திறந்து விட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் ஆணையிட்டுள்ளார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் அறிக்கை 8.11.2019 திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம், மருதாநதி அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.

வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, மருதாநதி அணையிலிருந்து பாசனத்துக்கு 9.11.2019 முதல் நாட்களுக்கு தண்ணி பாசனத்திற்கு 9.11.2019 முதல் 90 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட நான்  ஆணையிட்டுள்ளேன்.

இதனால் திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம், மருதாநதி அணையிலிருந்து பாசனம் பெறும் 6583 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்
என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்  மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக