புதன், 6 நவம்பர், 2019

"முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம்" எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம்” குறித்து
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

"முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம்”, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் 18.7.2019 அன்று அறிவிக்கப்பட்டு, 19.8.2019 அன்று சேலம் மாவட்டத்தில் துவக்கி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் இந்தத் திட்டத்தின் கீழ் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பொது மக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றனர்.

இத்திட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, மாண்புமிகு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின்
தலைமையில் இன்று (6.11.2019) தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 9,72,216 மனுக்கள் புறப்பட்டு அதில் 5,11,186 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது மனுக்கள் பல்வேறு காரணங்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. மீதமுள்ள 23,538 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து இந்த வார இறுதிக்குள் முடிவு செய்ய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.

ஏற்றுக்கொள்ளப்பட்ட மனுக்களில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித் தொகை வழங்க 1,43,993 மனுக்களும், பட்டா மற்றும் நிலம் சார்ந்த 1,83,682 மனுக்களும், கிராமம் / நகரம் உட்கட்டமைப்பு சார்ந்த 50,488 மனுக்கள், பொது விநியோகத் திட்டம் குறித்து 10,108 மனுக்களும், சமூக நலத் துறை தொடர்பாக 12,136 மனுக்களும், அடிப்படை வசதிகள் பொது சுகாதாரம் !
போக்குவரத்து சார்ந்த 12,979 மனுக்களும், வேளாண்மை / கால்நடை துறை ! மீன் வளத் துறை சார்ந்த 6,137 மனுக்களும், சான்று நகல்கள் வேண்டி 274 மனுக்கள், ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலம் சார்ந்த 7,671 மனுக்கள், பல்வேறு வகை சான்றுகள் வேண்டி 7,685 மனுக்களும், இராணுவத்தினர் சார்ந்த 1476 மனுக்களும், முதலமைச்சர் உழவர் பாதுகாப்புத் திட்டம் சார்ந்த 1486 மனுக்கள், இயற்கை பேரிடர் சார்ந்த 1,121 மனுக்களும், கல்வித் துறை சார்ந்த 827 மனுக்களும், சட்டம் ஒழுங்கு / புகார் தொடர்பாக 616 மனுக்களும், மீனவர் நலம் சார்ந்த 385 மனுக்கள், பிறப்பு பதிவு சார்ந்த 121 மனுக்களும், முன்னாள் படைவீரர் சார்ந்த 46 மனுக்கள், பிற மனுக்களாக 69,975 மனுக்களும் அடங்கும்.

முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் தொடர்பாக மேற்கொள்ளப்பட
வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,

* நிலுவையில் உள்ள மனுக்கள் மீது துரித நடவடிக்கை  மேற்கொண்டு 15.11.19க்குள் தீர்வு காணவும்; பல்வேறு காரணங்களால் ஏற்றுக்கொள்ளப்படாத மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மறு ஆய்வு செய்து ஏற்றுக்கொள்ள வாய்ப்புள்ள இனங்களில் உரிய தீர்வு காணவும்; தீர்வு கண்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட மனுக்களின் பயனாளிகளுக்கு வட்ட அளவில் குறைதீர்வு கூட்டங்கள் ஏற்பாடு செய்து அந்தந்த மாவட்ட மாண்புமிகு அமைச்சர்கள் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்கள், - மேலும் இம்மனுக்கள் மீதான வட்டார அளவிலான குறை தீர்வு கூட்டம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வரும் 9.11.19 அன்று சேலம் மாவட்டம், எடப்பாடி தாலுக்கா, கொங்கணாபுரம் ஒன்றிய அலுவலகத்தில் தொடங்கி வைக்கவும், அதைத் தொடர்ந்து மாவட்டம்தோறும் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் தலைமையில் 20.11.19 ஆம் தேதிக்குள் வட்டார அளவில் கூட்டம் நடத்தப்பட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டு அதற்கான நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்ளும் வகையில் வருவாய்த் துறை நடவடிக்கை எடுக்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டார்கள்.

இக்கூட்டத்தில், மாண்புமிகு வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல்
தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் திரு. ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் திரு. க.சண்முகம், இ.ஆ.ப., வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் (பொறுப்பு) திரு. ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., முதன்மைச்செயலர் / வருவாய் நிருவாக ஆணையர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., இயக்குநர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) திரு. ந.வெங்கடாசலம், இ.ஆ.ப., ஆகிய உயர் அலுவலர்கள் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக