புதன், 6 நவம்பர், 2019

கோமுகி நதி அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட எடப்பாடி கே.பழனிசாமி ஆணை

கோமுகி நதி அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட எடப்பாடி கே.பழனிசாமி ஆணை 
1. விழுப்புரம் மாவட்டம் கோமுகி நதி அணையிலிருந்து 8.11.2019 முதல் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் ஆணையிட்டுள்ளார்.


2. மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களிடம், மத்திய சுற்றுலாத்துறையால் "Tamil Nadu Tour and Hospitality Association" சங்கத்திற்கு வழங்கப்பட்ட தேசிய விருதினை அச்சங்கத்தின் துணைத் தலைவர் திரு.ஆர்.வெற்றிவேல் அவர்கள் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

3. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை இன்று (6.11.2019) தலைமைச் செயலகத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.இல.கணேசன் அவர்கள் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

4. மாண்புமிகு முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் பி.டி.லீ செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை சார்பில் தேனி, தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி, திருச்சி வேளாண் கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு கல்வி மற்றும் விடுதி கட்டணங்களுக்கான ஒப்புதல் கடிதங்கள் மற்றும் காசோலைகளை வழங்கினார்.

5. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் புதிதாக தெரிவு செய்யப்பட்ட 365 மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 7 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

6. அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் அனைத்து முக்கிய அரசு மருத்துவமனைகளிலும் காவல் துறையின் உதவியை காலதாமதமின்றி பெற்றிட #HotLine வசதி முதற்கட்டமாக, திருவள்ளூர், தாம்பரம் அரசு மருத்துவமனைகளில் துவக்கி வைக்கப்பட்டது.

7. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ரூ.10 கோடியில் நிறுவப்பட்டுள்ள "பெட் சிடி ஸ்கேன் கருவி" சேவையை துவக்கி வைத்து, செங்கல்பட்டில் சர்வதேச யோகா (ம) இயற்கை மருத்துவ அறிவியல் மையத்திற்கு மாண்புமிகு முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் காணொளிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.

8. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை சின்னத்திரை நடிகர் சங்கத்தின் நடிகர்கள் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.


9. மாண்புமிகு முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள், 4-வது உலக கோப்பை வளையப்பந்து வாகையர் போட்டியில் பதக்கங்கள் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.10 லட்சம் மற்றும் 2018-ஆம் ஆண்டு சதுரங்க விளையாட்டில் சர்வதேச மாஸ்டர் பட்டம் வென்ற வீரருக்கு ரூ.3 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார்.

10. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள், சென்னையில் தேசிய அளவிலான வளைகோல்பந்து வாகையர் விளையாட்டுப் போட்டிகளை நடத்திய ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு அமைப்பின் நிர்வாகிகளுக்கு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். 

11. புதுடில்லியில் (4.10.2019) நடைபெற்ற விழாவில் மூத்த குடிமக்களுக்கான நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழகத்திற்கு வழங்கப்பட்ட தேசிய விருதை மாண்புமிகு முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களிடம் மாண்புமிகு அமைச்சர் V.சரோஜா அவர்கள் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக