வெள்ளி, 8 நவம்பர், 2019

எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை லதா ரஜினிகாந்த் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.


1. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை இன்று (08.11.2019) சென்னை, தலைமைச் செயலகத்தில் திருமதி.லதா ரஜினிகாந்த் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.


2. மாண்புமிகு முதல்வர் அவர்களை அகில இந்திய தேசிய நல்லிணக்க கூட்டமைப்பின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் சந்தித்து அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு மதிப்பளித்து மத நல்லிணக்கத்தை காக்கும் வகையில் தமிழக அரசிற்கு முழு ஒத்துழைப்பை தொடர்ந்து அளிப்போம் என உறுதியளித்தனர்.

3. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களிடம் இன்று தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் 2018-2019-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் பங்கு ஈவுத் தொகையான ரூ.3.12 கோடிக்கான காசோலையினை மாண்புமிகு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அவர்கள் வழங்கினார்

4. மாண்புமிகு முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இரத்தினகிரி -அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில், ஆலங்குடி -அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரசுவாமி திருக்கோயில், பீர்க்கன்காரணை -அருள்மிகு சூராத்தம்மன் திருக்கோயில் ஆகியவற்றில் ரூ.2.06 கோடியில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்தார்.

5. மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வருடந்தோறும் நாள் முழுவதும் "இலவச லட்டு பிரசாதம்" வழங்கும் திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று காணொளிக் காட்சி மூலம் துவக்கி வைத்தார்.

6. மாண்புமிகு முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் இந்து சமய அறநிலையத் துறையில் நிலை-3 செயல் அலுவலர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்ட 96 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக