வியாழன், 28 நவம்பர், 2019

கூடங்குளம் போராளிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் - டி. ஆர். பாலு

கூடங்குளம் போராளிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் - மக்களவையில் டி. ஆர். பாலு வலியுறுத்தல்


முன்னாள் மத்திய அமைச்சரும், திராவிட முன்னேற்ற கழக நாடளுமன்ற குழுத் தலைவரும், திருப்பெரும்புதூர் மக்களவை உறுப்பினருமான திரு. டி. ஆர். பாலு, மக்களவையில் கூடங்குளம் அணு உலையின் பாதுகாப்பு குறித்து போராடிய மீனவர்களையும் பொதுமக்களையும் விடுதலை செய்ய வேண்டும் என குரல் எழுப்பினார்.

அணு உலைகளின் பாதுகாப்பற்ற தன்மையினால் உலகத்தில் உள்ள ஐம்பது
சதவீத மக்களின் உயிர்களும் உடைமைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தின் த்ரீ மைல் ஐலேண்ட்ஸ், ரஸ்யாவின் செர்னோபில், ஜப்பான் நாட்டின் புகுசிமா ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகளை விரிவாக எடுத்துக் கூறினார்.

மேற்குறிப்பிட்ட வளர்ந்த நாடுகளில் ஏற்பட்ட பேராபத்துகளால் லட்ச கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். இதுபோன்ற பேராபத்துகளை நாமும் சந்திக்க வேண்டியிருக்கும் என்று அச்சுறுத்தல் காரணமாக கூடங்குளம் பகுதியில் பல்லாயிரக்கணக்கான மீனவர்களும் பொதுமக்களும் ஏறத்தாழ நாற்பது நாட்களுக்கு மேல் அமைதியான முறையில் தொடர்ந்து போராட்டம் நடத்தினார்கள்,

ஆனால் மத்திய அரசும், தமிழக அரசும் 9,000க்கும் மேற்பட்ட பொது மக்கள் மீது தேச துரோக வழக்குகளையும் ஏனைய குற்றவியல் வழக்குகளையும் பதிவு செய்து சிரமத்திற்கு ஆளாகினர்.

குற்றவியல் தண்டனை சட்டம் 124-A ன்படி 8,956 நபர்கள் மீது தேச துரோக
வழக்குகளும் குற்றவியல் தண்டனை சட்டம் 121-A ன்படி 13,850 நபர்கள் மீது நாட்டிற்கு ஏதிராக போராடியதாக வழக்குகளும் பிரிவு 307ன் படி 18,143 நபர்கள் மீது கொலை முயற்சி வழக்குகளும் 15,565 நபர்கள் மீது பொது சொத்திற்கு சேதம் விளைவித்ததாகவும் வழக்குகள் புனையப்பட்டுள்ளனர்.

ஆனால் 2013ஆம் ஆண்டு ஜி சுந்தர்ராறன் அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக
உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் (வழக்கு எண் பி.ஏ. 4,440/2013) உச்ச
நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது.

போராட்டக்காரர்களுக்கு எதிரான குற்றவியல் வழக்குகள் அனைத்தும் திரும்பப்பெற வேண்டும் என்றும் கூடங்குளம் பகுதியில் அமைதி திரும்ப அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படுவதுடன் அணு உலையின் அவசியம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டுமெனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

இது குறித்து திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் தளபதி  மு.க. ஸ்டாலின் அவர்கள் தமிழக அரசு தொடர்ந்த அனைத்த வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும் என மத்திய அரசு அழுத்தம் தர வலியுறுத்தியுள்ளார்.

எனவே உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி மத்திய அரசு போராட்டகாரர்களை  உடனடியாக விடுவிக்க தமிழக அரசுக்கு அவையில் அமர்ந்து இருக்கும் மாண்புமிகு மூத்த அமைச்சர் ராஜ்நாத் சிங் இப்பிரச்னைக்குறித்து பதிலளிப்பதுடன் விரைவாக அறிவுறுத்த வேண்டும் என்றும் மக்களவையில் திருப்பெரும்புதூர் உறுப்பினர் திரு.டி.ஆர்.பாலு வலியுறுத்தினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக