திங்கள், 24 மே, 2021
கொரோனா கொள்ளை நோய் தொற்றிலிருந்து தமிழகத்தை காத்திட காலதாமதமின்றி 10 கோடி தடுப்பூசிகளை அளித்திடுக. மத்திய அமைச்சருக்கு டி. ஆர். பாலு வேண்டுகோள்.
வெள்ளி, 21 மே, 2021
தமிழ்நாட்டுக்கு ஒரு கோடி கோவிட் தடுப்பூசிகள் வழங்கவும் - செங்கல்பட்டு ஆலையில் ரூ.300 கோடி முதலீட்டில் தடுப்பூசிகள் தயாரிக்கவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்த்தன் அவர்களிடம் திரு. T.R.பாலு MP கோரிக்கை
தமிழ்நாட்டுக்கு ஒரு கோடி கோவிட் தடுப்பூசிகள் வழங்கவும் - செங்கல்பட்டு ஆலையில் ரூ.300 கோடி முதலீட்டில் தடுப்பூசிகள் தயாரிக்கவும், திமுக பொருளாளர் திரு. T.R.பாலு MP அவர்கள், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்த்தன் அவர்களிடம் வைத்துள்ள கோரிக்கை விவரம்:
கொரோனா தொற்று இரண்டாவது அலை வேகவேகமாக பரவிவரும் சவாலான நிலையில் கழகத் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் ஆட்சி பொறுப்பேற்றுள்ள தி.மு.க. பல்வேறு பணிகளை அதிவேகத்துடன் மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக 18 முதல் 44 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் செயல்திட்டத்தை தமிழக அரசு துவக்கி உள்ளது. ஆனால், இதற்காக மத்திய அரசு வெறும் 13.85 லட்சம் ஊசிகளையே ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த ஒதுக்கீடு மிகவும் குறைவானது.
லட்சத்தீவு அருகில் காணாமல் போன நாகப்பட்டினத்தை சேர்ந்த ஒன்பது தமிழக மீனவர்களை மீட்கக்கோரி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் அவர்களிடம் திரு. டி.ஆர்.பாலு MP கடிதம்
லட்சத்தீவு அருகில் காணாமல் போன நாகப்பட்டினத்தை சேர்ந்த ஒன்பது தமிழக மீனவர்களை மீட்கக்கோரி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் அவர்களிடம், திமுக பொருளாளரும், நாடாளுமன்ற திமுக குழுத்தலைவருமான திரு. டி.ஆர்.பாலு MP அவர்கள் அளித்துள்ள கடித விவரம்:
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தலின்படி கடலோர பகுதியில் சமீபத்தில் காணாமல் போன தமிழக மீனவர்களை மீட்டுத்தர கோரி மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் அவர்களை இன்று (21.5.21) கழக பொருளாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான திரு. டி.ஆர்.பாலு அவர்கள் நேரில் சந்தித்து கடிதம் ஒன்றை அளித்துள்ளார்.






