திமுக எம்.பி.க்களுக்கு தலைமைச் செயலாளர் அவமரியாதை. திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர். பாலு கடும் கண்டனம்
இன்று (13.5.2020) மாலை 5.00 மணி அளவில் சென்னையை சேர்ந்த திமுக மக்களவை உறுப்பினர்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் நானும் தமிழக அரசு தலைமை செயலாளர் சண்முகம் அவர்களை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து, எதிர்க்கட்சித் தலைவர் தளபதி அவர்களின் ஒன்றிணைவோம் வா வேண்டுகோளுக்கு செவி சாய்த்து அரசு உதவி கோரி ஒரு லட்சம் மக்கள் சமர்ப்பித்த கொரோனா கொள்ளை நோய் நிவாரண மனுக்களை ஒப்படைக்கவும் அந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கோரியும் சந்தித்தோம்.
நானும் திரு. தயாநிதி மாறன் அவர்களும் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்லால் முன்னாள் மத்திய அரசின் கேபினட் அமைச்சர்களாக பல்லாண்டுகள் பதவி வகித்தவர்கள் என்பதை சற்றும் கருத்தில் கொள்ளாமல் அதிர்ச்சியூட்டும் வகையில் மரியாதை குறைவாக தலைமை செயலாளர் சண்முகம் அவர்கள் நடந்து கொண்டார். அதைப்போலவே உடன் சென்ற ஏனைய இரு நாடளுமன்ற உறுப்பினர்களையும் குறைந்த பட்ச வரவேற்பு முறைகளைக் கூட பின் பற்றாமல் அவமதித்துள்ளார்.
இருப்பினும் பாரளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் அரசுக்கு உறுதுணையாகவும் தமிழகம் முழுவதும் உள்ள மக்களின் குறைகளைக் கேட்டறிந்து உரிய நிவாரணம் வழங்கிடும் நோக்கோடு கழகத் தலைவர் அவர்களின் நேரடி பார்வையில் விளக்கியதோடு செயல்படுத்தப்படும் திட்டம் கீழ் பற்றி பெறப்பட்ட இத்திட்டத்தின் பல்லாயிரம் மனுக்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் நிர்வாகிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள விவரத்தை தெரிவித்ததோடு அரசு நேரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய ஒரு லட்சம் மனுக்களை தலைமைச் செயலாளரிடம் அளித்து உரிய நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டி வேண்டுகோள் விடுத்தோம்.
ஆனால், தலைமைச் செயலாளர் திரு சண்முகம் அவர்கள் உரிய கவனம் எதுவும் செலுத்தாமல் சோபாவில் அமர்ந்து தொலைக்காட்சி பார்ப்பதில் கவனம் செலுத்திய வண்ணம் இருந்தது மட்டுமல்ல, கலாநிதி வீராசாமி எம். பி.யின் வேண்டுகோளை ஏற்று, பேச்சு வார்த்தைக்கு இடையூறாக இரைச்சலுடன் ஒலித்துக் கொண்டிருந்த டி.வி.யின் ஒலி அளவு குறைக்கச் சென்ற ஊழியரையும் தடுத்து விட்டார்.
தலைமை செயலாளரின் இந்த மெத்தனப் போக்கை பொறுத்துக் கொண்டு நானும் மனுக்கள் மீதான நடவடிக்கையை விரைந்து வேண்டியதன் அவசியத்தையும் அவசரத்தையும் சுட்டிக் காட்டி ஓரிரு நாட்களில் அதற்கான நடவடிக்கை காலக்கெடுவில் எடுக்க வலியுறுத்தியும் தெரிவிக்க வேண்டினேன். இதற்கு பதிலளித்த தலைமை செயலாளர் சண்முகம் போதிய ஊழியர்கள் இல்லாத நிலையில் மனுக்கள் மீது எப்போது நடவடிக்கை எடுக்க முடியும் என்று சொல்லமுடியாது என்று கூறினார். மேலும் மிகுந்த பதற்றத்துடன் தான் ஒரு மாநிலத்தின் தலைமை செயலாளர் என்பதையும் வந்துள்ளவர்கள் ஒருகோடிக்கும் மேற்பட்ட மக்களின் பாராளுமன்ற பிரதிநிதிகள் என்பதையும் மறந்து அவர்களை எடுத்தெறிந்து பேசும் விதமாக 'திஸ் ஈஸ் தி ப்ராப்ளம் வித் யூ பீப்பிள் " ( உங்களை போன்ற ஆட்களிடம் இது தான் பிரச்சனை) என்று ஏகவசனத்தில் பொறுப்பற்ற முறையில் உரத்த குரலில் கூறினார்.
இருப்பினும், நாங்கள் அனைவரும் அமைதி காத்து எழுந்து புறப்படும் முன் மீண்டும் தலைமைச் செயலாளர் சண்முகம் அவர்களிடம் - சார், தயவு செய்து விரைந்து நடவடிக்கை எடுங்கள் கோடிக்கணக்கான ஏழை எளிய மக்கள் அரசின் உதவிக்கு தவித்துக் கொண்டிருக்கிறார்கள்" என்று கூறினோம். ஆனால், தலைமைச் செயலாளர் திரு சண்முகம் - என்ன வெளியில் போய் பிரஸ்ஸை பார்க்க போகிறீர்களா? பிரஸ்காரர்களுடன் எதை வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள் என்று இறுமாப்புடன் கூறினார்.
கொரோனா தொற்றில் அல்லல்படும் கோடானு கோடி தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுக்க சென்ற உறுப்பினர்களாகிய எங்களை கண்ணியக் குறைவாக நடத்தியதோடு, வேண்டுமென்றே அவமரியாதை செய்த தலைமைச் செயலாளர் சண்முகம் அவர்களை வன்மையாக கண்டிப்பதுடன் அவர் தனது தகாத செயலுக்கு உடனடியாக வருத்தமும் மன்னிப்பும் தெரிவிக்க வேண்டும். நாடாளுமன்ற இல்லையென்றால், இப்பிரச்சினையை எடுத்துச் சென்று உரிய நடவடிக்கை உரிமைக்குழுவுக்கு தலைமைச் செயலாளர் மீது எடுக்கப்படும் என்று நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் என்ற அடிப்படையில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
எதிர்கட்சி தலைவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று சொன்ன எடப்பாடிக்கு ஏற்ற தலைமை செயலாளராகவே ஜாடிக்கு ஏற்ற மூடி என்பதை போலவே திரு. சண்முகம் அமைந்திருக்கிறார் என்பதை நேரில் உணர்ந்திட முடிந்தது
இவர்களெல்லாம் ஜனநாயக கட்டமைப்பை, கண்ணியம் காத்திடும் முறையில், பணியாற்றினார்களா என்பதே சந்தேகமாக இருக்கிறது!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக