புதன், 6 நவம்பர், 2019

பிரதமர் திரு.நரேந்திர மோடியை இன்று டெல்லியில் சந்தித்தார் தமாகா தலைவர் திரு.ஜி.கே.வாசன்

பிரதமர் திரு.நரேந்திர மோடியை இன்று டெல்லியில் சந்தித்தார் தமாகா தலைவர் திரு.ஜி.கே.வாசன்

பிரதமர் மோடியையும், மத்திய அரசு திட்டங்களையும், தமிழக அரசையும் ஆதரித்து வருகிறார். சமீபத்தில் சீன அதிபரை சந்திப்பதற்காக சென்னை வந்த பிரதமர் மோடியை ஜி.கே.வாசன் நேரில் சென்று வரவேற்றார். அப்போது தன்னை டெல்லியில் வந்து சந்திக்கும்படி மோடி அழைப்பு விடுத்ததாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.


இதற்கிடையே ஜி.கே.வாசனை பா.ஜனதாவில் சேர்க்க முயற்சிகள் நடந்ததாக கூறப்படுகிறது. தற்போது தமிழக பா.ஜனதாவில் தலைவர் பதவி காலியாக உள்ளதால் த.மா.கா.வை பா.ஜனதாவுடன் இணைத்து ஜி.கே.வாசனை தலைவராக்க அழைப்பு விடுத்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் பிரதமர் திரு.நரேந்திர மோடியை இன்று டெல்லியில் சந்தித்தார் தமாகா தலைவர் திரு.G.K.வாசன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் 

தமிழகத்தின் வளர்ச்சிக்கான பிரச்சனைகள் குறித்து பிரதமர் மோடியிடம் கூட்டணி கட்சி தலைவர் என்ற முறையில் பிரதமர் மோடியை சந்தித்து 20 நிமிடம் பேசினேன். மற்றும் கல்வி, விவசாயம், தொழில், வேலைவாய்ப்பு, தமிழுக்கான முக்கியத்துவம் குறித்து பிரதமரிடம் எடுத்துக் கூறினேன்

மத்திய, மாநில அரசுகள் மீதும் அதனை சார்ந்த கூட்டணி கட்சிகள் மீதும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது, அதனாலேயே இடைத்தேர்தலில் வெற்றி பெற்றோம். இடைத்தேர்தல் வெற்றி மக்களின் மனநிலை மாற்றத்தை காட்டுகிறது. என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக