வியாழன், 7 நவம்பர், 2019

கஷ்மீரில் ஜனநாயகத்தை மீட்டெடுப்போம்!

கஷ்மீரில் ஜனநாயகத்தை மீட்டெடுப்போம்! 


கஷ்மீரில் 370-35Aவை பறித்து மாநிலத்தின் சுயாட்சியை கேள்வி குறியாக்கியிருக்கும் பாஜக அரசை கண்டித்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பில் மாபெரும் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விமன் இந்தியா மூவ்மெண்டின் தேசிய நிர்வாகிகளும், ராஜ்ஸ்தான் மாநில நிர்வாகிகளும் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக விமன் இந்தியா மூவ்மெண்டின் தேசிய தலைவர் மெஹ்ருன்னிஷா கான், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத்தலைவர் வழக்கறிஞர் சர்ஃபுதீன் அஹமது, தேசிய பொதுச்செயலாளர் முஹம்மது ஷஃபி, தேசிய செயலாளர் சீதாராம் கோஹிவால், யாஸ்மின் ஃபரூக்கி, டாக்டர் மெஹபூப் ஆவாத் செரீஃப், ராஜஸ்தான் மாநில தலைவர் முஹம்மது ரிஸ்வான் கான், விமன் இந்தியா மூவெம்ண்டின் மாநில தலைவர் ஃபரீதா, இந்திய பெண்கள் தேசிய கூட்டமைப்பின் தேசிய செயலாளர் அன்னி ராஜா, மனித உரிமைகள் கூட்டமைப்பின் ராஜஸ்தான் மாநில தலைவர் டி.சி.ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.

மத்திய அரசின் தொடர்ச்சியான சர்வாதிகார போக்கிற்கு எதிராக பல்வேறு சமூக இயக்க தலைவர்களும், மதசார்பற்ற அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு பாஜக அரசிற்கு எதிரான தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக