வியாழன், 7 நவம்பர், 2019

திப்பு சுல்தான் வரலாற்றை நீக்க பாஜக வின் எடியூரப்பா அரசு முயற்சி - SDPI கண்டன ஆர்ப்பாட்டம்

கர்நாடக பாட நூலிருந்து சுதந்திர போராட்ட மாவீரன்  திப்பு சுல்தான் வரலாற்றை நீக்க பாஜக.,வின் எடியூரப்பா அரசு முயற்சி! - கண்டித்து யாத்கிர் மாவட்டத்தில் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!


கடந்த வாரம் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா “வரலாற்று பாட நூல்களிலிருந்து திப்பு சுல்தான் குறித்த பாடங்களை நீக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். இதுபோன்ற தலைப்புகளுக்கு பாடநூலில் இடமில்லை. 101% இதை நாங்கள் அனுமதிக்கப்போவதில்லை” என தெரிவித்திருக்கிறார்.


பாஜக முதலமைச்சரே இப்படி கூறிவிட்டபின் அவரது அமைச்சர்களும் கட்சியின் தலைவர்களும் திப்பு சுல்தான் மீதான வெறுப்பு அரசியலை துவக்கி உள்ளனர். கல்வியமைச்சர் எஸ். சுரேஷ் குமாரும் பாஜகவைச் சேர்ந்த ரஞ்சன் அப்பாசுவும் மாநிலத்திலிருந்து திப்பு சுல்தான் முழுமையாக துடைத்தெறியப்பட வேண்டும் என கூறியுள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் திப்பு சுல்தானின் பிறந்த நாள் விழாவை எஸ்.டி.பி.ஐ. கட்சி உள்ளிட்ட எதிர்கட்சிகள் கொண்டாடிவரும் நிலையில், சர்ச்சையை கிளப்பும் வகையில் பாஜக அரசு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

18-ஆம் நூற்றாண்டில் மைசூரை ஆண்ட திப்பு சுல்தான், ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு மாண்டவர். அவர் இஸ்லாமியர் என்பதாலேயே இந்துத்துவ கும்பல் அவர் மீதான வெறுப்பை உமிழ்ந்து வருகிறது. இது போன்ற அறிவிப்புகளால் உலகளாவிய அளவில் இந்தியாவின் மதிப்பை 18-ஆம் நூற்றாண்டிலேயே நவீன முறைப்படுத்தி உயர்த்திகாட்டிய சுதந்திர போராட்ட வீரரின் வரலாற்றை இருட்டடிப்பு செய்வதன் மூலம் இந்தியாவின் மதிப்பை உலக அரங்கில் இருந்து குறைக்க நினைக்கிறது பாஜக அரசு.

இதனை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட எதிர்கட்சியினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பாஜக அரசின் இந்த அறிவிப்பை திரும்பபெற வலியுறுத்தி கர்நாடக மாநிலம் யாத்கிர் மாவட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எஸ்.டி.பி.ஐ. கட்சி ஒருங்கிணைத்த இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தனது கண்டனங்களை பதிவு செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக