வியாழன், 25 ஜூன், 2020

தமிழக பள்ளிக் கல்வித்துறை அடிக்கடி தடுமாறுவது ஏன்? 11ம் வகுப்பிற்கான பாடத்திட்ட மாறுதலை ஒத்தி வைக்க வேண்டும்! - கே. பாலகிருஷ்ணன்


தமிழக பள்ளிக் கல்வித்துறை அடிக்கடி தடுமாறுவது ஏன்? 
11ம் வகுப்பிற்கான பாடத்திட்ட மாறுதலை ஒத்தி வைக்க வேண்டும்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தல்!!

தமிழக பள்ளிக் கல்வித்துறை சமீப காலங்களில் முன்னுக்குப் பின்னான பல முரண்பட்ட திட்டங்களை அறிவிப்பதும், பின்னர் மக்களின் வற்புறுத்தல் காரணமாக அதை வாபஸ் பெறுவதும் தொடர்கதையாகி வருகிறது. இந்த வகையில் தற்போது நடப்பாண்டிற்கான (2020-21) 11ம் வகுப்பிற்கான பாடத்திட்டத்தில் மாறுதலை ஏற்படுத்தி புதிய குழப்பத்தை உருவாக்கியுள்ளது.

11ஆம் வகுப்புப் பாடத்திட்டம் மாற்றம்; தமிழக மாணவர்களுக்கு மிகப்பெரிய அநீதி! - வைகோ


11ஆம் வகுப்புப் பாடத்திட்டம் மாற்றம்;
தமிழக மாணவர்களுக்கு மிகப்பெரிய அநீதி! - வைகோ கண்டனம்

மத்திய பா.ஜ.க. அரசின் புதிய கல்விக் கொள்கைக்குத் தொடர்ந்து எதிர்ப்புகள் எழுந்து வரும் நிலையில், அதனை மறைமுகமாக அல்ல நேரடியாக நடைமுறைப்படுத்தும் திட்டத்தை ஓசை படாமல் எடப்பாடி பழனிச்சாமி அரசு செய்து வருகிறது.

நடப்புக் கல்வி ஆண்டில் 11 ஆம் வகுப்பில் மாணவர்கள் சேர்க்கைக்கான பாடப் பிரிவுகள் மூன்று பகுதிகளாக உருவாக்கப்பட்டுள்ளன. மொழிப்பாடங்கள் ஒன்று மற்றும் இரண்டு ஆகிய பகுதிகளைத் தவிர்த்து, எஞ்சியுள்ள மூன்றாம் பகுதியில் முக்கியப் பாடங்களுக்கு என்று நான்கு பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றிலும் மொத்தம் 300 மதிப்பெண்கள் இருக்கும் வண்ணம் மூன்றே பாடங்கள் (ஒவ்வொன்றுக்கும் தலா 100 மதிப்பெண்கள்) மட்டுமே இருக்கும் வகையில் புதிய பாடப் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு தலா பத்து லட்சம் ரூபாயினை முதலமைச்சர் நிவாரண நிதி வழங்க எடப்பாடி K பழனிசாமி உத்தரவு


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி K பழனிசாமி அவர்களது அறிக்கை
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல்நிலைய காவலர்கள் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு ஊரடங்குபணியாக சாத்தான்குளம் கடைவீதியில் கடந்த 19.06.2020 அன்று ரோந்தில் ஈடுபட்டிருந்தபோது, திரு.ஜெயராஜ் (வயது 58) என்பவர் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து அவரது கைப்பேசி கடையை திறந்து வைத்திருக்க, கடையின் முன்பு திரு.ஜெயராஜ், அவரது மகன் திரு.பென்னிக்ஸ் (வயது 31) மற்றும் சிலர் கூட்டமாக நின்றிருந்துள்ளனர். ரோந்து காவலர்கள் அவர்கள் கடையை மூடிவிட்டு, கலைந்து செல்லுமாறு கூறியபோது, மற்றவர்கள் உடனே கலைந்து சென்றுவிடட்டனர். திரு.ஜெயராஜ் மற்றும் திரு.பென்னிக்ஸ் ஆகியோர் கடையை மூட மறுத்துவிட்டதால், இச்சம்பவம் தொடர்பாக சாத்தான்குளம் காவல்நிலையத்தில் திரு.ஜெயராஜ் மற்றும் திரு.பென்னிக்ஸ் ஆகியோர் மீது வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது

புதன், 24 ஜூன், 2020

பிரதம மந்திரி முத்ரா திட்டத்தின் கீழ் 12 மாத காலத்துக்கு சிசுக் கடன்களை உரிய தவணை முறையில் திரும்பச் செலுத்தினால் 2 சதவீத வட்டி மானியம்.

பிரதம மந்திரி முத்ரா திட்டத்தின் கீழ் 12 மாத காலத்துக்கு சிசுக் கடன்களை உரிய தவணை முறையில் திரும்பச் செலுத்தினால் 2 சதவீத வட்டி மானியம்.
கடன்களை முறையாகத் திருப்பிச் செலுத்துவதற்கு ஊக்கம் அளிக்கப்பட வேண்டும்.

கோவிட்-19 காரணமாக ஏற்பட்ட சிக்கல்களில் இருந்து சிறிய அளவு வர்த்தக நிறுவனங்கள் மீண்டு வருவதற்கு இந்தத் திட்டம் உதவும்.

பிரதம மந்திரி திரு.நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதம மந்திரி முத்ரா திட்டத்தின் (PMMY) கீழ் தகுதி வாய்ந்த கடனாளர்கள் பெறும் அனைத்து சிசுக்கடன் தொகைக்கும் 12 மாதங்களுக்கு 2 சதவீத வட்டி மானியம் அளிக்கும் திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவை மாற்றியமைத்து சுயசார்பு கொண்ட நாடாகவும், தொழில்நுட்ப ரீதியாக முன்னேற்றம் அடைந்த நாடாகவும் உருவாக்க வேண்டும்


விண்வெளித்துறையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீர்திருத்தங்கள். விண்வெளி செயல்பாடுகளில் தனியார் துறை பங்களிப்புக்கு ஒப்புதல்.

விண்வெளிச் செயல்பாடுகள் அனைத்திலும், தனியார் துறை பங்கேற்பதை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் விண்வெளித்துறையில் நீண்டகாலப் பயனளிக்கும் சீர்திருத்தங்களுக்கு, பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவை மாற்றியமைத்து சுயசார்பு கொண்ட நாடாகவும், தொழில்நுட்ப ரீதியாக முன்னேற்றம் அடைந்த நாடாகவும் உருவாக்க வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்குத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.