வெள்ளி, 25 ஜூன், 2021

மருத்துவக் கல்விக்கான அகில இந்தியத் தொகுப்பில் மத்திய அரசு நினைத்திருந்தால் எப்போதோ OBC வகுப்புக்கு இட ஒதுக்கீடு வழங்கியிருக்கலாம். ஆனால், அதை மத்திய அரசு செய்யவில்லை.- DR.S.ராமதாஸ்

 மருத்துவக்கல்வி: அகில இந்திய தொகுப்பில்

ஓ.பி.சி ஒதுக்கீட்டை தாமதிக்கக் கூடாது! - DR.S.ராமதாஸ்

மருத்துவக் கல்விக்கான அகில இந்தியத் தொகுப்பில் தமிழ்நாட்டில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு  இட ஒதுக்கீடு வழங்கத் தயாராக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. ஆனால், அதற்காக மத்திய அரசு முன்வைத்திருக்கும் நிபந்தனை, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை விட, அதை தாமதப்படுத்தும் நோக்கம் கொண்டதாகவே தோன்றுகிறது. இது சிறிதும் நியாயமற்றதாகும்.

தி.மு.க. அரசின் இந்த முறையான செயல்பாடுகளுக்கு சமூகநீதியில் அக்கறையுள்ள அத்தனைத் தரப்பினரும் ஆதரவுக்கரம் நீட்டுவதே - சமூகநீதிக்கு ஆற்றும் அருந்தொண்டாக இருக்க முடியும்.- கி.வீரமணி


தி.மு.க. இடம்பெற்ற காங்கிரஸ் ஆட்சியின் (யுபிஏ)போதுதான் ‘நீட்’ வந்தது என்று கிளிப்பிள்ளைப் பாடம் படிக்கவேண்டாம்!

அப்பொழுதே தி.மு.க. எதிர்த்து வழக்குத் தொடுத்தது - ‘நீட்’ செல்லாது என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பும் பெறப்பட்டது!

தி.மு.க. மேற்கொள்ளும் சட்ட ரீதியான முயற்சிகளுக்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவுக்கரம் நீட்டுவதே முக்கியம்! - கி.வீரமணி

‘நீட்’ தொடர்பான விவாதங்கள் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று (23.6.2021) நடந்துள்ளன. தி.மு.க. தேர்தல் அறிக்கையில், ‘நீட்’டை நீக்குவதுபற்றி கூறப்பட்டுள்ளதுபற்றி (தேர்தல் அறிக்கை வரிசை எண். 160) எல்லாம் பேசப்பட்டுள்ளது.

அன்றுமுதல் தி.மு.க. எதிர்ப்பு

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் (21.12.2010) ‘நீட்’ கொண்டுவரப்பட்ட காலத்திலேயே - அதில் அங்கம் வகித்த தி.மு.க. கடுமையாக எதிர்த்து வந்துள்ளது என்பது முக்கியமான உண்மையாகும்.

வியாழன், 24 ஜூன், 2021

உணவு பதப்படுத்துதல் துறையில், உற்பத்தியுடன் தொடர்புடைய ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் ரூ.11 ஆயிரம் கோடி செலவழிக்கப்படும். - மத்திய வேளாண் துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர்


 உணவு பதப்படுத்துதல் துறையில், உற்பத்தியுடன் தொடர்புடைய ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ்  ரூ.11 ஆயிரம் கோடி செலவழிக்கப்படும் என மத்திய வேளாண் துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார்.

வடக்கு மண்டல உணவு பதப்படுத்துதல், 3வது உச்சி மாநாட்டை இந்திய தொழில் கூட்டமைப்பு(சிஐஐ) காணொலி காட்சி மூலம் நடத்தியது. இதில் மத்திய வேளாண் துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் கலந்து கொண்டு பேசியதாவது:  

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு ஒட்டுமொத்த நாடும் ஆதரவளித்து, ஊக்கமளிக்கவேண்டும் என்பது பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையாகும்.- விளையாட்டு அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு


 டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துக் கொள்ளும் இந்திய ஒலிம்பிக் குழுவின் தீம் பாடலை மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு, ஒலிம்பிக் தினத்தை முன்னிட்டு புதுதில்லியில் அறிமுகப்படுத்தினார். விளையாட்டு அமைச்சக செயலாளர் திரு ரவி மிட்டல், இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் திரு நரிந்தர் பாத்ரா, அதன் பொதுச் செயலாளர் திரு ராஜீவ் மேத்தா, இந்திய விளையாட்டு ஆணையகத்தின் தலைமை இயக்குநர் திரு சந்தீப் பிரதான் மற்றும் இதர உயர் அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த தீம் பாடலை பிரபல பின்னணி பாடகர் திரு மோகித் சவுகான் இசையமைத்துப் பாடியுள்ளார். அவரது மனைவி திருமதி பிராத்தனா கஹிலோட் இந்தப் பாடலை எழுதியுள்ளார்.

தனித்து இருந்தால் நம்மால் வளர்ச்சியை அடைய முடியாது, ஒற்றுமையாக இருந்தால் நம்மால் சாதிக்க முடியும்.- திரு மன்சுக் மாண்டவியா


 மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த கடல்சார் மாநில மேம்பாட்டு கவுன்சிலின் 18-வது கூட்டத்திற்கு மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு மன்சுக் மாண்டவியா காணொலிக் காட்சி வாயிலாக இன்று தலைமை தாங்கினார்.

மத்திய மற்றும் மாநில அரசுகள் பயன்பெறும் வகையிலும், சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றவும் ஒரு தேசிய திட்டத்தை வடிவமைப்பது தான் கடல்சார் மாநில மேம்பாட்டுக் கவுன்சிலின் முக்கிய நோக்கம் என்று கூட்டத்தின் போது அமைச்சர் தெரிவித்தார். நாட்டின் வளர்ச்சி, மாநிலங்களின் வளர்ச்சியை சார்ந்திருப்பதாகவும், கூட்டாட்சி அமைப்பிற்கு சிறந்த எடுத்துக்காட்டாக இந்தக் கவுன்சில் விளங்குவதாகவும் அவர் தெரிவித்தார். “தனித்து இருந்தால் நம்மால் வளர்ச்சியை அடைய முடியாது, ஒற்றுமையாக இருந்தால் நம்மால் சாதிக்க முடியும்”, என்று அமைச்சர் மேலும் கூறினார்.