சனி, 30 ஜூலை, 2022

கடந்த எட்டு ஆண்டுகளில், நாட்டின் நீதித்துறை உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான பணிகள் துரித கதியில் செய்யப்பட்டுள்ளன.- நரேந்திர மோடி


 பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நடைபெற்ற முதலாவது  அகில இந்திய மாவட்ட சட்ட சேவைகள் அதிகாரிகள் கூட்டத்தின் தொடக்க அமர்வில் உரையாற்றினார். இந்திய தலைமை நீதிபதி என்.வி.ரமணா, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நீதிபதி யு.யு.லலித், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், மத்திய அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு, இணையமைச்சர் திரு எஸ்.பி.சிங் பாகேல், மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள், மாநில சட்ட சேவைகள் ஆணையத்தின் நிர்வாகத் தலைவர்கள்  மற்றும் மாவட்ட சட்ட சேவைகள் ஆணையங்களின்  தலைவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 'இலவச சட்ட உதவிக்கான உரிமை' குறித்த நினைவு அஞ்சல் தலையையும் பிரதமர் வெளியிட்டார்.

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், இது விடுதலையின் அமிர்த கால நேரம். அடுத்த 25 ஆண்டுகளில் நாட்டை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும் தீர்மானங்களுக்கான நேரம் இது. எளிதாக தொழில் செய்வது போலவும், எளிதாக வாழ்வது போலவும், நாட்டின் இந்த அமிர்த யாத்திரையில் எளிதாக நீதி கிடைத்தலும் சமமாக முக்கியமானது, என்றார்.

ஞாயிறு, 24 ஜூலை, 2022

போதைப்பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க வலியுறுத்தி வரும் 30ஆம் தேதி தமிழகம் முழுவதும் பா.ம.க மாபெரும் போராட்டம்! - DR.S.ராமதாஸ்

 போதைப்பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க வலியுறுத்தி வரும் 30ஆம் தேதி தமிழகம் முழுவதும் பா.ம.க மாபெரும் போராட்டம்!  - DR.S.ராமதாஸ்

தமிழ்நாட்டில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே போதைப் பொருள் கலாச்சாரம் நாளுக்குநாள் அதிகரித்து வருவது பெரும் அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. போதைக் கலாச்சாரத்தால் மிகப்பெரிய பேரழிவை நோக்கி தமிழ்நாடு பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசும், காவல்துறையும் மேற்கொள்ளாதது ஏமாற்றமளிக்கிறது.

ஒற்றுமை, அமைதி, சமூக நல்லிணக்கம் ஆகிய இந்திய நாகரிக விழுமியங்களை மேம்படுத்த, ஆன்மீக மறுமலர்ச்சி அவசியம் – குடியரசு துணைத்தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு


 ஒற்றுமை, அமைதி மற்றும் சமூக நல்லிணக்கம் ஆகிய  உலகளாவிய விழுமியங்களை இந்திய நாகரிகம், நிலைநிறுத்துகிறது என்று குடியரசு துணைத்தலைவர்  திரு எம். வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.  இந்தப் பழமையான மதிப்புகளைப் பாதுகாக்கவும் பரப்பவும் ஆன்மீக மறுமலர்ச்சி அவசியம் என அவர் கூறினார்.

குடியரசு துணைத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ,  “பாடு, நடனமாடு,  பிரார்த்தனை செய் - ஸ்ரீல பிரபுபாதாவின் உத்வேகம் தரும் கதை” என்ற புத்தகத்தை வெளியிட்ட பின்னர் உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர், சுவாமி பிரபுபாதா போன்ற சிறந்த துறவிகள் மற்றும் ஆன்மீக குருக்களிடமிருந்து உத்வேகம் பெறவும், அவர்களின் குணங்களை இளைஞர்கள் உள்வாங்கவும் வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். சிறந்த மனிதர்களாக மாற ஒழுக்கம், கடின உழைப்பு, பொறுமை மற்றும் கருணை ஆகியவை முக்கியம் எனக்கூறிய அவர்,  "நீங்கள் எப்போதும் சாதி, பாலினம், மதம் மற்றும் பிராந்தியம் என்ற குறுகிய கருத்துக்களுக்கு அப்பால் உயர்ந்து சமுதாயத்தில் ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் அமைதியைக் கொண்டுவர உழைக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார். இஸ்கான் நிறுவனர் ஸ்ரீல பிரபுபாதரின் இந்த வாழ்க்கை வரலாற்று நூலை  டாக்டர் ஹிந்தோல் சென்குப்தா எழுதியுள்ளார்.

வியாழன், 21 ஜூலை, 2022

சென்னை புழுதிக்காடாக மாறுவதை சென்னை மாநகராட்சியும், தமிழ்நாடு அரசும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.- DR. அன்புமணி ராமதாஸ்


 மெட்ரோ ரயில், மழைநீர் வடிகால் பணிகள்: மக்களுக்கு நோயை ஏற்படுத்தும் புழுதியை 

கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும்! - DR. அன்புமணி ராமதாஸ்

சென்னை மாநகரில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் மழைநீர் வடிகால் கட்டுமானப் பணிகளால் வரலாறு காணாத புழுதி உருவாகி சென்னை மக்களை கடுமையாக பாதித்து வருகிறது. புழுதியையும், அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளையும் கட்டுப்படுத்துவது இந்த வளர்ச்சித் திட்டங்களின் ஓர் அங்கமாக சேர்க்கப்பட்டிருக்கும் போதிலும், அது பின்பற்றப்படாதது கண்டிக்கத்தக்கது.

ஸ்வாவ்லம்பான்' (தற்சார்பு) கடற்படையின் கண்டுபிடிப்புகள் மற்றும் உள்நாட்டு மயமாக்கல் நிறுவனத்தின் முதல் கருத்தரங்கம்


 ஸ்வாவ்லம்பான்' (தற்சார்பு) கடற்படை கண்டுபிடிப்புகள் மற்றும் உள்நாட்டு மயமாக்கல்(என்.ஐ.ஓ.ஓ) நிறுவனத்தின் முதல் கருத்தரங்கம் 18 - 19 ஜூலை 2022 அன்று புதுதில்லியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாண்புமிகு பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமை விருந்தினராக பங்கேற்றார். பாதுகாப்புத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு.ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இரண்டுநாள் கருத்தரங்கில், கடற்படை வீரர்கள், கல்வியாளர்கள், தொழில்துறையினர், கொள்கை வகுப்பவர்கள், சிந்தனையாளர்கள், மாணவர்கள் மற்றும் அரசு மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  தலைமையகத்தின் பணியாளர்கள் மற்றும் கடற்படையின் மற்ற பிரிவுகளை சேர்ந்தவர்கள் இணையவழியில் பங்கேற்பதற்காக நாடு முழுவதும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.