பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நடைபெற்ற முதலாவது அகில இந்திய மாவட்ட சட்ட சேவைகள் அதிகாரிகள் கூட்டத்தின் தொடக்க அமர்வில் உரையாற்றினார். இந்திய தலைமை நீதிபதி என்.வி.ரமணா, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நீதிபதி யு.யு.லலித், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், மத்திய அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு, இணையமைச்சர் திரு எஸ்.பி.சிங் பாகேல், மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள், மாநில சட்ட சேவைகள் ஆணையத்தின் நிர்வாகத் தலைவர்கள் மற்றும் மாவட்ட சட்ட சேவைகள் ஆணையங்களின் தலைவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 'இலவச சட்ட உதவிக்கான உரிமை' குறித்த நினைவு அஞ்சல் தலையையும் பிரதமர் வெளியிட்டார்.
கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், இது விடுதலையின் அமிர்த கால நேரம். அடுத்த 25 ஆண்டுகளில் நாட்டை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும் தீர்மானங்களுக்கான நேரம் இது. எளிதாக தொழில் செய்வது போலவும், எளிதாக வாழ்வது போலவும், நாட்டின் இந்த அமிர்த யாத்திரையில் எளிதாக நீதி கிடைத்தலும் சமமாக முக்கியமானது, என்றார்.




