செவ்வாய், 18 ஏப்ரல், 2023

மத்திய அமைச்சர் திரு.நிதின் கட்கரி, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச போக்குவரத்து அமைச்சர்களுடன் ஆலோசனை


 மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச போக்குவரத்து அமைச்சர்களுடன் புதுதில்லியில்  ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை முதன்மை செயலாளர், மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் இந்தியா கலாச்சார மறுமலர்ச்சியின் சகாப்தத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. - பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்


 பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் இந்தியா கலாச்சார மறுமலர்ச்சியின் சகாப்தத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் சோம்நாத்தில் சௌராஷ்டிரா- தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் உரையாற்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்   இதனைத் தெரிவித்தார்.  நாட்டின் நூற்றாண்டு கால பழமை மிகுந்த பாரம்பரியங்களும், கலாச்சாரங்களும்  மக்களை இணைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அவர் கூறினார்.  இந்தியாவின் ஆழமாக வேரோடிய பாரம்பரியங்கள் அதன் வலிமையையும், ஒற்றுமையை பிரதிபலிப்பதுடன்,  எந்த சவாலையும் எதிர்நோக்கி உறுதியுடன் நிற்கும் திறனைப் பெற்றுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

விண்வெளியில் தொடக்கம் முதல் இறுதி வரையிலான திறனைக் கட்டமைத்துள்ள மிகச் சில நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது.- டாக்டர் ஜிதேந்திர சிங்


இந்தியா விண்வெளிப் பொருளாதாரத்தில்  வளர்ந்து வருகிறது என்று ஜி-20 விண்வெளிப் பொருளாதாரத் தலைவர்கள் கூட்டத்தின் தொடக்க அமர்வில் உரையாற்றிய மத்திய அறிவியல்,  தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை  இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். 

இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவத்தின் கீழ், ஜி-20 விண்வெளிப் பொருளாதாரத் தலைவர்கள் கூட்டத்திற்கு மத்திய அரசின் விண்வெளித்துறை ஏற்பாடு செய்திருந்தது.

உள்ளூர் கிராமப்புற பஞ்சாயத்துகளில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 31.5 லட்சத்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகளில் 46 சதவீதம் பேர் மகளிர். - திரௌபதி முர்மு


 குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, புதுதில்லியில் தேசிய பஞ்சாயத்து விருதுகளை வழங்கி பஞ்சாயத்துகள் ஊக்கப்படுத்துதல் குறித்த தேசிய மாநாட்டை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், கடந்த பல ஆண்டுகளாக நகர்ப்புறம் விரைவாக வளர்ச்சியை அடைந்து வரும் நிலையில், பெரும்பாலான மக்கள் இன்றும் கிராமங்களில் வசித்து வருவதாக கூறினார். நகரங்களில் வசிப்பவருக்கும், கிராமங்களுடன் தொடர்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  கிராமங்களின் வளர்ச்சி நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

ஞாயிறு, 16 ஏப்ரல், 2023

சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு மட்டும் உரிய சுதந்திரம் அளிக்கப்பட்டிருந்தால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இருந்திருக்காது.- மத்திய இணையமைச்சர் DR. ஜிதேந்திர சிங்


 ஜம்மு - காஷ்மீரில் சர்தார் வல்லபாய் பட்டேலினால் முடிக்கப்படாத பணியை பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றியுள்ளதாக மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற "ஒரே பாரதம் உன்னத பாரதம்" என்ற விழாவில் தலைமையேற்றுப் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், சுதந்திரத்திற்குப் பிறகு 560-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒருங்கிணைப்பதில் சர்தார் வல்லபாய் பட்டேல் முக்கியப் பங்காற்றியதாகவும், துரதிர்ஷ்டவசமாக, ஜம்மு - காஷ்மீரைக் கையாள பட்டேலுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார். சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு மட்டும் உரிய சுதந்திரம் அளிக்கப்பட்டிருந்தால், இந்தியாவின் வரலாறு வேறுவிதமாக இருந்திருக்கும் என அவர் கூறினார். ”பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இருந்திருக்காது, ஜம்மு - காஷ்மீர் முழுவதும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்திருக்கும், இந்த பிரச்சினை இவ்வளவு  ஆண்டுகளாக நீடித்திருக்காது” என்றார்.

சனி, 15 ஏப்ரல், 2023

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் புதுமை கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சி மூலம் நாட்டை மேம்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.-மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங்


 அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் நாட்டை மேம்படுத்த புதிய யோசனைகளைக் கொண்டு வரவும், இந்தியாவை பாதுகாப்பான மற்றும் வலிமையானதாக மாற்றுவதற்கான முயற்சிகளில் அரசுக்கு உதவுமாறும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 2023 ஏப்ரல் 15-ம் தேதியன்று உதய்பூரில் ஜனார்தன் ராய் நகர் ராஜஸ்தான் வித்யாபீடத்தின் (பல்கலைக்கழகமாக கருதப்படும்) 16-வது பட்டமளிப்பு விழாவில் மத்திய அமைச்சர் உரையாற்றினார். வருங்காலத்தில் அனைத்துத் துறைகளிலும் தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரிக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

விலங்கு தொற்றுநோய்க்கான தயாரிப்பு முயற்சிகள் மற்றும் உலக வங்கியின் நிதியுதவியுடன் ஆரோக்கியத்திற்கான விலங்கு சுகாதார அமைப்பு.


 விலங்கு தொற்றுநோய்க்கான தயார்நிலை முன்முயற்சி மற்றும் உலக வங்கியின் நிதியுதவியுடன் கூடிய “ஆரோக்கியத்திற்கான விலங்கு சுகாதார அமைப்பு ஆதரவு” ஆகியவை விலங்கு தொற்றுநோய்களை முழுமையான முறையில் நிவர்த்தி செய்வதற்கான விரிவான முயற்சிகள்: மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர்

மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு. பர்ஷோத்தம் ருபாலா, விலங்கு தொற்றுநோய்க்கான தயாரிப்பு முயற்சி மற்றும் உலக வங்கியின் நிதியுதவியுடன் கூடிய ஆரோக்கியத்திற்கான விலங்கு சுகாதார அமைப்பு ஆதரவை இன்று தொடங்கி வைத்தார். விலங்கு மற்றும் மனித ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஜூனோடிக் நோய்களை மையமாகக் கொண்டு, விலங்கு தொற்றுநோய்களுக்கான இந்தியாவின் தயார்நிலை மற்றும் முன்னெடுப்புகளை மேம்படுத்துவதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முயற்சி கால்நடை சேவைகள் விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஆகியவற்றை மேம்படுத்த உதவும்.

உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் 2023 வசந்தகால கூட்டங்களை முன்னிட்டு இந்தியாவின் தலைமையில் ஜி20 அமைப்பின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் இரண்டாவது கூட்டம்


 உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் 2023 வசந்தகால கூட்டங்களை முன்னிட்டு இந்தியாவின் தலைமையில் ஜி20 அமைப்பின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் இரண்டாவது கூட்டம் ஏப்ரல் 12 மற்றும் 13-ஆம் தேதிகளில் நடைபெற்றது. மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் திரு சக்திகாந்த தாஸ் ஆகியோர் இந்தக் கூட்டத்திற்குத் தலைமை வகித்தார்கள். ஜி20 உறுப்பு நாடுகள், 13 சிறப்பு அழைப்பு நாடுகள் மற்றும் பல்வேறு சர்வதேச மற்றும் பிராந்திய நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 350 பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர்.

Logo வடிவமைப்பாளர்களுக்கு ரூ.51,000 பரிசாக கிடைக்க அரிய வாய்ப்பு.


 நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு துறை (டிஏஆர்பிஜி) அதன் மையப்படுத்தப்பட்ட மக்கள் குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பின் இணைய தளத்திற்கு (சிபிஜிஆர்ஏஎம்எஸ்) CPGRAMS .

சிபிஜிஆர்ஏஎம்எஸ் (CPGRAMS) என்பது அரசின் சேவைகளில் ஏற்படும் குறைகள் தொடர்பான புகார்களில் பதிவு செய்யும் 24 மணிநேர இணையதளமாகும். மத்திய மற்றும் மாநில அரசுகளின் அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளும் இதில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.