சு.வெங்கடேசன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சு.வெங்கடேசன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் மாவட்டமாக மதுரை இருக்கிறது என்று இந்திய வானிலைத்துறையின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.- முதல்வருக்கு சு.வெங்கடேசன் கடிதம்


 காலநிலை பேரழிவால் வரக்கூடிய பத்தாண்டுகள் மானுடத்திற்கான இருத்தியலை உறுதிசெய்வதற்கான தசாப்பதமாக இருக்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலர் தெரிவித்துள்ளபடி,  மானுட வரலாற்றின் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த காலமாக இந்த காலம் இருக்கிறது.

இக்காலத்தில் பசுமையான தமிழகத்தை உருவாக்க, சூழலியல் பார்வையில் பல முன்னெடுப்புகளை செய்யும் உங்களுக்கு எனது அன்பான வாழ்த்துகள்.

திங்கள், 3 ஆகஸ்ட், 2020

ஐஐடிகளில் சமூக நீதிக்காக இன்னும் எவ்வளவு காலம் காத்திருப்பது? மத்திய கல்வி அமைச்சருக்கு சு.வெங்கடேசன் MP கடிதம்


ஐஐடிகளில் சமூக நீதிக்காக இன்னும் எவ்வளவு காலம் காத்திருப்பது?
மத்திய கல்வி அமைச்சருக்கு சு.வெங்கடேசன் MP கடிதம்

ஐ.ஐ.டி.களில் இளங்கலை/முதுகலைப்பட்டங்கள்/முனைவர் ஆய்வுப் பிரிவுகளில் மாணவர் அனுமதி மற்றும் ஆசிரியர், ஆசிரியரல்லாத நியமனங்கள் ஆகியவற்றுக்கான இடஒதுக்கீடு அமலாக்கம் பற்றிய குழு ஒன்றை மத்திய கல்வி நிறுவனங்கள் (அனுமதிகளில் இட ஒதுக்கீடு) சட்டம் 2006 மற்றும் மத்திய கல்வி நிறுவனங்கள் (ஆசிரியர் பதவிகளில் இட ஒதுக்கீடு) சட்டம் 2019 மற்றும் ஐ.ஐ.டி.களுக்கான இயக்குனரின் (23.4.20) ஆணை அமைத்து, இக்குழுவிற்கு புதுடெல்லி ஐ.ஐ.டி இயக்குனர் தலைவராகவும், சென்னை ஐ.ஐ.டியின் பதிவாளர் அமைப்பாளராகவும் இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

வியாழன், 23 ஜூலை, 2020

அமைச்சரும் அரசும் ஒன்றினைப் புரிந்து கொள்ள வேண்டும். எங்களின் நோக்கம் பீதியைக் கிளப்புவது அன்று; வருமுன் காக்க வேண்டும் - சு.வெங்கடேசன் MP


"நான் பீதி கிளப்புவதாகச் சொன்னீர்களே... 
இப்போது நிலை என்ன அமைச்சரே?"  - சு.வெங்கடேசன் MP

"ஜூன் 26ம் தேதி சில புள்ளிவிபரங்களின் அடிப்படையில் மதுரைக்கு முதல்வர் உடனடியாக உதவ வேண்டும்" என்ற அறிக்கையொன்றினை வெளியிட்டேன். அதற்கு மறுநாள் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் மதுரை வேளாண்மைக் கல்லூரியில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில், ”எம்.பி., முதல்வருக்குக் கடிதம் எழுதுவதாகச் சொல்லி, தேவையில்லாமல் மக்களிடம் பீதியைக் கிளப்புகிறார்” என்று கூறினார்.

சனி, 27 ஜூன், 2020

மதுரை மக்களைக் காக்க தமிழக முதல்வர் அவர்களே, நீங்கள் உடனடியாகத் தலையிட்டு இக்கோரிகைகளை நிறைவேற்றுங்கள். - சு.வெங்கடேசன் எம்.பி


மதுரை மக்களைக் காக்க
முதல்வரே, உடனே உதவுக! - சு.வெங்கடேசன் எம்.பி

மதுரையில் கொரோனாவின் தாக்குதல் தீவிரப்பட்டிருக்கிறது. நாள்தோறும் தொற்றாளர்களின் எண்ணிக்கை மூன்று இலக்கங்களில் வரத் தொடங்கியுள்ளது. இது மக்களுக்கு சற்றே பதட்டத்தையும் அச்சத்தையும் உருவாக்கியுள்ளது. இந்நிலையில் மாநில அரசின் செயல் மக்களுக்கு நம்பிக்கையூட்டுவதாக அமைய வேண்டும். தொற்று பரவினாலும் அதனைச் சந்திக்கும் நிலையில் மாவட்ட நிர்வாக அமைப்பும் சுகாதார அமைப்புகளும் இருக்கிறது என்ற நம்பிக்கையை உருவாக்க வேண்டும்.

மதுரை மாவட்டத்தில் தொற்று பரவும் (ஜூன் 22 தேதி புள்ளிவிபரங்களின் அடிப்படையில்) வேகமானது (Growth rate )  7.9% இருக்கிறதென்று மத்திய சுகாதாரத்துறையின் குறிப்பு தெரிவிக்கிறது. இதே வேகத்தில் இந்த பரவல் இருக்குமானால், ஜூலை 21ஆம் தேதி மதுரை மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கையானது  7883 ஆக இருக்கும் என்று வரையறுக்கிறது.

புதன், 6 மே, 2020

மருந்துகளுக்காக நாடே பரிதவிக்கும் போது அமெரிக்காவுக்கு ஏற்றுமதியா?-சு.வெங்கடேசன் எம்.பி


கொரோனா இந்திய நாட்டின் சக்கரங்களையே சுழல விடாமல் நிறுத்தி வைத்திருக்கிற நேரம். மருத்துவ மனைகள் போதுமா? படுக்கைகள் போதுமா? வென்டிலேட்டர்கள் போதுமா? முக மறைப்புகள் போதுமா? சானிட்டைசர் போதுமா? இப்படி பல கேள்விகளால் பரிதவித்து நிற்கிறார்கள் அல்லும் பகலும் அயராது போராடும் மருத்துவர்கள். 

மாநில அரசுகளோ நிலமையை கையாள்வதில் திணறிக்கொண்டிருக்கின்றன.

செவ்வாய், 24 மார்ச், 2020

இந்நிலையில் நாம் செய்ய வேண்டியது என்ன? மதுரை மக்களுக்கு அன்பான வேண்டுகோள்; சு.வெங்கடேசன்


மதுரை மக்களுக்கு அன்பான வேண்டுகோள்; - சு.வெங்கடேசன் MP

மதுரையில் முதல் கரோனா தொற்று ஊர்ஜிதப்படுத்தப் பட்டுள்ளது. "சமூக பரவல் இன்னும் இல்லை" என அரசு அதிகார இயந்திரங்கள் இன்னமும் சொல்லிக் கொண்டிருக்க, அறிவியலாளர்கள் ஆய்வு வட்டம் நாம் சமூக பரவல் நிலைக்கு வந்துவிட்டோம் என வலுவாய்ச் சொல்கிறார்கள்.

இந்நிலையில் நாம் செய்ய வேண்டியது என்ன?

இந்தியாவில் 40-50% மக்கள் இத்தொற்றுக்குள் செல்வர் என்பது உலக அறிஞர்கள் பலரின் கருத்து. அந்த அத்தனை பேரும் நோயாளிகள் ஆகப்போவது இல்லை. மிகச் சொற்பமான சதவீதம்தான் நோய்வாய்ப்பட போகிறது. அந்த சொற்பத்துக்குள் சிக்காமலிருக்க இப்போதைக்கான முதல் தீர்வு வெளியில் உலவுவதை நிறுத்துவது.

உலகெங்கும் வரும் ஆய்வு முடிவுகள் எல்லாம் இந்த இக்கட்டான சூழலிலும் நம்பிக்கை அளிப்பவையாகவே உள்ளன. நோபல் விஞ்ஞானியும் இங்கிலாந்தின் நோய்த் தடுப்பு பேராசிரியர் மைக்கேல் லெவிட்ட் " இலகுவாய் இதனை கடந்து போவோம்; இப்போதே வைரசின் உக்கிர வீரியம் குறையத் துவங்கியுள்ளதன் தெள்ளத் தெளிவான அடையாளங்கள் தெரிகின்றன" என்கிறார். அவர்தான் "சீனத்து வுகானின் 82000 பேர் தொற்று பெறுவர் ; 3250 பேர் உயிரிழப்பர்", என மிக தெளிவாக மருத்துவ அல்காரிதத்தில் அளவிட்டுச் சொன்னவர். 100% அவரது அனுமானம் உண்மையானது. அவர் நம் ஊர் ஜோசியர் அல்லர். மருத்துவ புள்ளியியல்பரவுநிலை ஆய்வாளர். அவர் சொல்வது சீக்கிரம் "இதனை கடந்து சென்றுவிடுவோம்; அதற்கு ஒரே இப்போதய தேவை சமூக இடைவெளி மட்டுமே.,"என்பதுதான்

உங்கள் அறிவீனத்துக்கு இந்த தேசம் மிகப்பெரிய விலைதரப்போகிறது.- சு.வெங்கடேசன்


உங்கள் அறிவீனத்துக்கு இந்த தேசம் மிகப்பெரிய 
விலைதரப்போகிறது.- சு.வெங்கடேசன் 

பல்லாயிரம் கோடி செலவில் சிலைகளும் கட்டிடங்களையும் அமைப்பதை விட கொரோனா போன்ற தொற்று வியாதிகளுக்கான சோதனைச் சாலைகளும், நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்க கட்டமைப்புகளையும் உருவாக்குவதே இன்றைய உடனடி தேவை.

2003 ஆம் ஆண்டு சார்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவம் பார்ப்பதற்காக சீன அரசாங்கம் ஏழு நாட்களில் பெய்ஜிங் நகரத்தில் Xiaotangshan மருத்துவமனையை கட்டிமுடித்தது. சீனா முழுவதும் கண்டறியப்பட்ட சார்ஸ் நோயாளிகளில் ஏழில் ஒரு பங்கு நோயாளிகள் இந்த மருத்துவமனையில் வைத்தியம் பார்த்துக்கொண்டனர். மருத்துவ வரலாற்றில் இது ஒரு அதிசயம் என்று உலகம் புகழ்ந்தது. அதன் தொடர்ச்சியாக இப்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில நாட்களில்  1,000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை சீன அரசாங்கம் ஹூபே மாகாணத்தின் உஹான் பகுதியில் அமைத்தது. அந்த மருத்துவமனையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மருத்துவம் பார்த்து இன்று இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு தயாராகவுள்ளது உஹான்.   

புதன், 12 பிப்ரவரி, 2020

தமிழ்நாட்டுக்கு ஆறு ரயில் இரட்டை வழிப்பாதைக்கான திட்டங்களுக்கு ஆறாயிரம் ரூபாய் தான் -


பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட தென் மேற்கு மற்றும் தென் மத்திய இரயில்வே திட்டங்களை, தமிழகத்தின் திட்டமாக தென்னக இரயில்வே எப்படி கூறுகிறது என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பி உள்ளார்.

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறுவதாவது : ”மத்திய பட்ஜெட்டில் தென்னக இரயில்வேயில் தமிழகத்துக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி குறித்து ஞாயிறன்று செய்தி வெளியிட்டிருந்தேன். இதனைத் தொடர்ந்து தென்னக இரயில்வேயின் முதன்மை மக்கள் தொடர்பு அலுவலர் பத்திரிகை குறிப்பு ஒன்றை (510/2019-20) வெளியிட்டுள்ளார்.

புதன், 8 ஜனவரி, 2020

உங்களால் ஒரே ஒரு அடியாவது முன்வர முடியுமா? வெளிச்சத்தை நோக்கியோ! உண்மையை நோக்கியோ! - சு.வெங்கடேசன் எம்.பி

உங்களால் ஒரே ஒரு அடியாவது முன்வர முடியுமா?
வெளிச்சத்தை நோக்கியோ! உண்மையை நோக்கியோ!
- சு.வெங்கடேசன் எம்.பி



டில்லியில் இருக்கும் ஊடக நண்பர் நடந்துகொண்டிருக்கும் அராஜகத்தை பதட்டத்தோடு சொன்னார். சிறிது நேரத்திலேயே வீடியோக்கள் வெளிவரத்துவங்கின.

ஞாயிறு, 5 ஜனவரி, 2020

இந்திய மருத்துவ சட்டத்தில் யுனானிக்கும் ,சித்த மருத்துவத்திற்கும் அநீதி இழைக்கப் பட இருக்கிறது - சு.வெங்கடேசன் எம்.பி


ஒரு நாகரிகச் சமூகத்தில் ஒரு துறை மட்டும்  தனித்து வளராது. அறிவியல், தத்துவம், மருத்துவம், பொறியியல் எல்லாம் ஒன்றோ டொன்று கொடுத்து வாங்கித்தான் வளரும். அதே போல அதனை அழிக்க நினைப்பவர்களும் ஒன்றினை  மட்டும் தனித்து அழிக்கமாட்டார்கள். அனைத்தின் மீதும் ஒருங்கிணைந்த  அழித்தொழிப்பினையே நிகழ்த்துவார்கள்.