ஞாயிறு, 1 மார்ச், 2020

"டெல்லி கலவரத்தை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்திடுக! " விடுதலைச் சிறுத்தைகள் தீர்மானம்


சென்னையில் மார்ச் 1, 2020 அன்று கூடிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. டெல்லி கலவரத்தை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்திடுக!

டெல்லியில் திட்டமிட்டு நடத்தப்பட்ட கலவரம் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிறப்புப் புலனாய்வு குழு அமைக்கப்பட வேண்டும். கலவரத்தில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்துக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். கலவரத்தில் சேதப்படுத்தப்பட்ட சொத்துகளை மதிப்பீடுசெய்து உரியவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும். கலவரத்தைத் தூண்டியவர்கள் மீதும் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த செயற்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

ஈரான் மற்றும் பல தீவுகளில் உள்ள இந்திய மீனவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படாமல் மீட்க வேண்டும் - ஜி.கே.வாசன்


ஈரான் மற்றும் பல தீவுகளில் உள்ள இந்திய மீனவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கும் அவர்களை பத்திரமாக நாட்டிற்கு அழைத்து வருவதற்கும் மத்திய அரசு உடனடியாக விரைவு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். - ஜி.கே.வாசன்

ஈரான் மற்றும் அருகில் உள்ள சில தீவுகளில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள சுமார் 900 இந்திய மீனவர்கள் நாடு திரும்புவதற்கு உண்டான விரைவு நடவடிக்கையை மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக உள்ள நாடுகளில் ஈரானும் ஒன்று என்பதால் அங்குள்ள இந்திய மீனவர்கள் நாடு திரும்ப கோரிக்கை வைத்துள்ளனர்.

மோடி - அமித்ஷா கூட்டணி ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து போராடுகிற காலம் மிக தொலைவில் இல்லை - கே.எஸ்.அழகிரி


மோடி - அமித்ஷா கூட்டணி ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து போராடுகிற காலம் மிக தொலைவில் இல்லை - கே.எஸ்.அழகிரி

நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து மந்த நிலையிலேயே நீடித்து வருவதால் பல்வேறு பொருளாதார பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. நடப்பு நிதியாண்டில் முதல் ஒன்பது மாதங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 5.1 சதவீதமாகவே இருந்து வருகிறது. கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிந்த காலாண்டில் வளர்ச்சி 7 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 4.7 சதவீதமாக சரிந்துள்ளது. கடந்த 2018 - 19 ஆம் ஆண்டில், இதே காலாண்டில் 5.6 சதவீதமாக இருந்தது.


தமிழ்நாடு சட்டமன்றத்திலும் ஜாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றிடுக! - கி.வீரமணி


மகாராட்டிரம், பீகாரைப் பின்பற்றி தமிழ்நாடு சட்டமன்றத்திலும்
ஜாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றிடுக! 
- கி.வீரமணி

தமிழ்நாடு சமூகநீதி மண் என்ற வரலாற்றை நிலை நிறுத்திடுக!

2020-2021 இல் நடைபெறவிருக்கும் நாட்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், ஜாதி வாரியான கணக்கெடுப்பு கட்டாயம் நடத்தப்படவேண்டும் என்பதை, தொடர்ந்து திராவிடர் கழகமும், முற்போக்கு சமூகநீதி அமைப்புகளும், கட்சிகளும் வற்புறுத்தி வருகின்றன!

ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு நீதி வேண்டும்: ஐ.நா.மன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும்! - வைகோ


ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு நீதி வேண்டும்;
ஐ.நா.மன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும்! - வைகோ அறிக்கை

இலங்கையில் ஈழத்தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட போர் மற்றும் இனப்படுகொலை குறித்து, பன்னாட்டு நீதிமன்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், 2015 செப்டம்பரில் ஐ.நா. பொதுப் பேரவை தீர்மானம் தொடர்பான அறிக்கை வெளியானது.

அதன்பின்னர் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானம் 30/1, நிறைவேற்றப்பட்டது.