தமிழ்நாட்டில் ஊரடங்கு ஆணை காரணமாக மூடப்பட்ட மதுக்கடைகளை மீண்டும் திறக்க அனைத்து தரப்பிலும் கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், தமிழக அரசு அதன் முடிவை தளர்த்திக் கொள்ளாததும், மதுக்கடைகளை நாளை திறக்க ஏற்பாடுகளை செய்து வருவதும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழக அரசின் இந்த முடிவு தவறான நேரத்தில் மேற்கொள்ளப்படும் மிகத் தவறான நடவடிக்கையாகும்.
புதன், 6 மே, 2020
கல்விக் கட்டணம் செலுத்த நெருக்கடி தரும் பள்ளிகள் மீது நடவடிக்கை தேவை!
கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக பெரும்பான்மையான மக்கள் வருவாய் இழந்து வாடி வரும் நிலையில், அடுத்த ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தை உடனடியாக செலுத்த வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோருக்கு தனியார் பள்ளிகள் நெருக்கடி அளிக்கத் தொடங்கியுள்ளன. பெற்றோரின் நிலைமையை புரிந்து கொள்ளாத தனியார் பள்ளிகள் நடவடிக்கை கண்டிக்கத்தக்கதாகும்.
மருந்துகளுக்காக நாடே பரிதவிக்கும் போது அமெரிக்காவுக்கு ஏற்றுமதியா?-சு.வெங்கடேசன் எம்.பி
கொரோனா இந்திய நாட்டின் சக்கரங்களையே சுழல விடாமல் நிறுத்தி வைத்திருக்கிற நேரம். மருத்துவ மனைகள் போதுமா? படுக்கைகள் போதுமா? வென்டிலேட்டர்கள் போதுமா? முக மறைப்புகள் போதுமா? சானிட்டைசர் போதுமா? இப்படி பல கேள்விகளால் பரிதவித்து நிற்கிறார்கள் அல்லும் பகலும் அயராது போராடும் மருத்துவர்கள்.
மாநில அரசுகளோ நிலமையை கையாள்வதில் திணறிக்கொண்டிருக்கின்றன.
லேபிள்கள்:
சு.வெங்கடேசன்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
முன்னாள் மத்திய நிதியமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான திரு ப. சிதம்பரம் அவர்கள் பதிவு.
முன்னாள் மத்திய நிதியமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான திரு ப. சிதம்பரம் அவர்கள் பதிவு.
1. மத்திய அரசு இன்று அறிவித்துள்ள நிவாரணத் திட்டத்தின் சில அறிவிப்புகள் நேற்று நான் முன் வைத்த 10 அம்ச திட்டத்தைப் பிரதிபலிக்கின்றன. அரசின் திட்டத்தைக் கவனத்துடன் வரவேற்கிறேன்
2. இன்றைய அறிவிப்பு ஓர் அடக்கமான திட்டம். இது போதாது என்று விரைவில் அரசு உணரும்
3 இத்திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு மூன்று மாதங்களுக்குத் தேவையான தானியம் வழங்கப்படும், இதனை வரவேற்கிறேன்
4. ஆனால் மக்களுக்குத் தேவையான ரொக்கப் பணம் வழங்கப்படவில்லை. சில பிரிவு மக்களை அரசு அறவே மறந்துவிட்டது
5. இத்திட்டத்தின் கீழ் மக்களுக்கு தரவிருக்கும் பணம் (தானியத்தின் மதிப்பு உட்பட) எங்கள் மதிப்பீட்டின் படி ரூ 1 லட்சம் கோடி. இது தேவைதான், ஆனால் போதவே போதாது
6. இன்னொன்றையும் கவனியுங்கள். குத்தகை விவசாயிகள், அனாதைகள், வேலைகளையும் ஊதியத்தையும் குறைக்கக் கூடாது என்ற அவசியம், வரிக் கெடுகளை ஒத்தி வைப்பது, வங்கித் தவணைகளை ஒத்திவைப்பது, ஜிஎஸ்டி வரியைக் குறைப்பது ஆகியவை பற்றி எதுவும் சொல்லப்படவில்லை
7. அரசு திட்டத்தின் இரண்டாம் பகுதியை அரசு விரைலில் அறிவிக்கும் என்று நம்புகிறேன்
லேபிள்கள்:
காங்கிரஸ்,
தமிழ்நாடு,
ப.சிதம்பரம்
ஊரடங்கின் மூலமாக கொரோனா நோயை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு முழு தோல்வி அடைந்துவிட்டது. - கே.எஸ்.அழகிரி
கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. ஆனால், தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கடுமையாக அதிகரித்து வருகிறது. ஊரடங்கின் மூலமாக கொரோனா நோயை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு முழு தோல்வி அடைந்துவிட்டது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


