புதன், 6 மே, 2020

முன்னாள் மத்திய நிதியமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான திரு ப. சிதம்பரம் அவர்கள் பதிவு.


முன்னாள் மத்திய நிதியமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான திரு ப. சிதம்பரம் அவர்கள் பதிவு. 

1. மத்திய அரசு இன்று அறிவித்துள்ள நிவாரணத் திட்டத்தின் சில அறிவிப்புகள் நேற்று நான் முன் வைத்த 10 அம்ச திட்டத்தைப் பிரதிபலிக்கின்றன. அரசின் திட்டத்தைக் கவனத்துடன் வரவேற்கிறேன் 

2. இன்றைய அறிவிப்பு ஓர் அடக்கமான திட்டம். இது போதாது என்று விரைவில் அரசு உணரும் 

3 இத்திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு மூன்று மாதங்களுக்குத் தேவையான தானியம் வழங்கப்படும், இதனை வரவேற்கிறேன் 

4. ஆனால் மக்களுக்குத் தேவையான ரொக்கப் பணம் வழங்கப்படவில்லை. சில பிரிவு மக்களை அரசு அறவே மறந்துவிட்டது 

5. இத்திட்டத்தின் கீழ் மக்களுக்கு தரவிருக்கும் பணம் (தானியத்தின் மதிப்பு உட்பட) எங்கள் மதிப்பீட்டின் படி ரூ 1 லட்சம் கோடி. இது தேவைதான், ஆனால் போதவே போதாது

6. இன்னொன்றையும் கவனியுங்கள். குத்தகை விவசாயிகள், அனாதைகள்,  வேலைகளையும் ஊதியத்தையும் குறைக்கக் கூடாது என்ற அவசியம், வரிக் கெடுகளை ஒத்தி வைப்பது, வங்கித் தவணைகளை ஒத்திவைப்பது, ஜிஎஸ்டி வரியைக் குறைப்பது ஆகியவை பற்றி எதுவும் சொல்லப்படவில்லை

7. அரசு திட்டத்தின் இரண்டாம் பகுதியை அரசு விரைலில் அறிவிக்கும் என்று நம்புகிறேன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக