செவ்வாய், 2 ஜூன், 2020

திராவிடம் பேசி, சாதியை ஒழிக்க புறப்பட்டவர்கள்தான் சாதியை வளர்ப்பதில் முன்னனியில் நிற்கிறார்கள். - டாக்டர் K. கிருஷ்ணசாமி


நான்கு வருணங்களை உருவாக்கி சாதிய துவேசத்தை வளர்த்தவர்கள் பார்ப்பனர்கள். எனவே, சாதி ஒழிய பார்ப்பனர்களை ஒழிக்க வேண்டும் என்று ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கு மேலாக இயக்கம் கண்டு ஆட்சிக்கு வந்தனர். சாதி வளர்ப்பின் அடையாளம் பார்ப்பனர்கள், சாதி ஒழிப்பின் அடையாளம் திராவிடர்கள்; பார்ப்பனியம் வருண, சாதி பேதங்களை உள்ளடக்கியவை, திராவிடம் என்பது வருண, சாதி பேதங்கள் அற்றவை; பார்ப்பனியம் ஏற்றத் தாழ்வுடையது,  திராவிடம் ஏற்றத் தாழ்வற்றது; பார்ப்பனியம் மூடநம்பிக்கைகள் உடையது, திராவிடம் மூடநம்பிக்கைகளை உடைப்பது; பார்ப்பனியம் அந்நியமானது, திராவிடம் சுதேசி; பார்ப்பனர்கள் வெளியில் இருந்து குடியேறியவர்கள் என்பது போன்ற கொள்கை முத்துகளை தமிழ் மண்ணிலே விதைத்து.

திங்கள், 1 ஜூன், 2020

திரைப்படத் தொழிலாளர்களுக்கு 6,000 குடியிருப்புகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது முதற்கட்டமாக 1000 குடியிருப்புகள் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று அடிக்கல் நாட்டினார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இசைமேதை நல்லப்ப சுவாமி அவர்களின் நினைவு தூணினை திறந்து வைத்தார்கள்.

மேலும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் மூலமாக செங்கல்பட்டு மாவட்டம், பையனூரில் திரைப்படத் தொழிலாளர்களுக்கு சொந்த வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக 1000 குடியிருப்புகள் கட்டும் பணிக்கும் அடிக்கல் நாட்டினார்கள்.

வீரபாண்டிய கட்டபொம்மன் மரபில் வந்தவரும், ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர் இசை ஞான குருவாக விளங்கியவரும், இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது மகாகவி பாரதியார் போல் ஆங்கில அரசால் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டவரும், கரகரப்பிரியா ராகத்தில் சக்கரவர்த்தி என்று போற்றப்படுபவர், மகாகவி பாரதியார் கவிதைகள் எழுத ராகங்களை எடுத்துக் கொடுத்தவரும், பல்வேறு பட்டங்களும், பரிசுகளும் பெற்றவரும், வாழ்நாள் முழுவதும் இசைக்காகவே தம்மை அர்ப்பணித்துக் கொண்டவருமான இசைமேதை நல்லப்ப சுவாமி அவர்களின் நினைவை போற்றும் வகையில், 2018-2019 ஆம் ஆண்டிற்கான செய்தி மற்றும் விளம்பரத் துறை மானியக் கோரிக்கையின் போது, “இசை அறிஞர்களாலும், வித்வான்களாலும், இசை மகா சமுத்திரம் என்றும், மாமேதை என்றும் போற்றிப் புகழப்பட்ட இசைமேதை நல்லப்பசுவாமி அவர்களுக்கு தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் நினைவுத் தூண் அமைக்கப்படும்” என்று தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இசைமேதை நல்லப்பசுவாமி அவர்களின் நினைவு தூணினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று திறந்து வைத்தார்கள்.

தேவைக்கேற்ப புதிய மற்றும் தரம் உயர்த்தப்பட்ட துணை மின் நிலையங்களை அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு அமைத்து வருகிறது.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் இன்று (1.6.2020) தலைமைச் செயலகத்தில், எரிசக்தித் துறையின் சார்பில் நாமக்கல் மாவட்டம் - திருச்செங்கோடு வட்டம், ஏமப்பள்ளியில் 10 கோடியே 28 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 110/22 கி.வோ. துணை மின் நிலையத்தை காணொலிக்காட்சி (Video Conferencing) மூலமாகத் திறந்து வைத்தார்கள். மேலும், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், கோயம்புத்தூர், தஞ்சாவூர், சேலம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 224 கோடியே 91 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 15 துணை மின் நிலையங்கள் திறந்து வைத்தார்கள்.

மின்பாதையில் ஏற்படுகின்ற மின் இழப்பையும், மின்பராமரிப்பு செலவினங்களையும் குறைத்து, ஒவ்வொரு பகுதிக்கும் தேவைப்படுகின்ற உச்சகட்ட மின் தேவையை நிறைவு செய்யும் வகையில் சரியான மின் அழுத்தத்தின் சீரான மின்சாரம் மக்களுக்கு வழங்க கூடுதல் துணை மின் நிலையங்கள் அமைப்பது அவசியமாகும் என்பதைக் கருத்தில் கொண்டு, தேவைக்கேற்ப புதிய மற்றும் தரம் உயர்த்தப்பட்ட துணை மின் நிலையங்களை மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு அமைத்து வருகிறது.

அந்த வகையில், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், ஏமப்பள்ளியில் 10 கோடியே 28 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 110/22 கி.வோ. துணை மின் நிலையத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று காணொலி காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்கள்.

நாட்டு மக்கள் அனைவரும் அரசின் விதிமுறைகளை, வழிமுறைகளை 100 சதவீதம் கடைபிடிக்க வேண்டும். - ஜி.கே.வாசன்


மத்திய மாநில அரசுகள் கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும், பொருளாதாரத்தை உயர்த்துவதற்கும் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றிபெற வேண்டுமென்றால் நாட்டு மக்கள் அனைவரும் அரசின் விதிமுறைகளை, வழிமுறைகளை 100 சதவீதம் கடைபிடிக்க வேண்டும்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு.ஜி.கே.வாசன் அறிக்கை

மத்திய மாநில அரசுகள் கொரோனாவுக்கு எதிராக, நாட்டின் பொருளாதாரம் உயர தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருவது மக்கள் நலன் காக்கும் வகையில் அமைந்திருக்கிறது. மத்திய, மாநில அரசுகளின் விவேகமான, விரைவான நடவடிக்கைகளால் கொரோனா பரவலும், பாதிப்பும் கட்டுப்படுத்தப்படுகிறது.
 ஆயினும் அதற்கு எதிரான போர் இன்னும் தொடர வேண்டியுள்ளது.

கொரோனோ வைரஸ் பரவலை தடுப்பதற்காக மார்ச் 24 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட ஊரடங்கு தொடர்ந்து அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு 4 முறை அமல்படுத்தப்பட்டது. 

4 ஆம் கட்ட ஊரடங்கு நேற்று 31.05.2020 முடிவடைந்தது. இந்த 4 ஊரடங்கு காலமான 69 நாட்களில் மக்கள் ஊரடங்கு உத்தரவை கடமை உணர்வோடு கடைபிடித்ததற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இதனைத் தொடர்ந்து இப்போது 5 ஆவது முறையாக மீண்டும் ஊரடங்கு ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

மத்திய அரசு நாடு முழுமைக்கும், தமிழக அரசு மாநிலம் முழுமைக்கும் ஊரடங்கு தொடர்பான விதிமுறைகளையும், வழிமுறைகளையும், தளர்வுகளையும் அறிவித்திருக்கிறது. இச்சூழலில் தமிழக அரசு ஊரடங்கு தொடர்பாக 8 மண்டலங்களாகப் பிரித்து தளர்வுகளுடன் கூடிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

ஆறு ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் படுபாதாளத்தில் மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். - கே.எஸ்.அழகிரி


பிரதமராக மோடி பதவியேற்று 6 ஆண்டுகள் நிறைவு பெறுவதை பா.ஜ.க.வினர் கொண்டாடுகின்றனர். இதுகுறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் சாதனை கடிதம் எழுதியுள்ளார். உண்மையிலேயே அவர்கள் கொண்டாடும் அளவுக்கு இந்த ஆறு ஆண்டுகளில் புரிந்த சாதனைகள் என்ன ? இந்தியாவில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதா  ? இதுகுறித்து ஆய்வு செய்து விமர்சிக்க வேண்டியது ஒரு பொறுப்புள்ள எதிர்கட்சியின் கடமையாகும்.

கடந்த 2014 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அயல்நாட்டில் இருந்து கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் ரூபாய் 15 லட்சம் செலுத்துவோம், விவசாயிகளின் விளை பொருளுக்கு உற்பத்தி செலவோடு 50 சதவீதம் கூடுதலாக விளை பொருளுக்கு விலை நிர்ணயம் செய்து வருமானத்தை இரட்டிப்பாக்குவோம், வேலையில்லா திண்டாட்டத்தைப் போக்க ஆண்டுக்கு இரண்டு கோடி பேர்களுக்கு என ஐந்தாண்டுகளுக்கு 10 கோடி பேர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் வழங்குவோம் என பலவிதமான வாக்குறுதிகளை வழங்கி, மக்களின் வாக்குகளை பெற்று பா.ஜ.க. ஆட்சியில் அமர்ந்தது. ஆனால், முதல் ஐந்தாண்டுகளில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. 

தேர்தலில் சாதனைகளை சொல்லி வாக்குகளை கேட்காமல் மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி, வாக்குகளைப் பெற்று மீண்டும் 2019 இல் பிரதமராக மோடி பதவியேற்றார். கடந்த ஆறு  ஆண்டுகளில் மோடி ஆட்சியில் நிகழ்ந்தது சாதனைகளா ? வேதனைகளா ? என்பதை ஆய்வு செய்தால் மிகுந்த ஏமாற்றமே ஏற்படுகிறது.