புதன், 2 செப்டம்பர், 2020

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுங்க கண்டன உயர்வை ரத்து செய்ய வேண்டும்.- ஜி.கே.வாசன்


 

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுங்க கண்டன உயர்வை ரத்து செய்ய வேண்டும்.- ஜி.கே.வாசன்

தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் , தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் , சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது . 

தமிழ்நாட்டில் அரசுத்துறை பதவி உயர்வில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். - DR.S.ராமதாஸ்

பதவி உயர்வில் பிற்படுத்தப்பட்டோருக்கு 
இட ஒதுக்கீடு வழங்க சட்டத் திருத்தம்! - DR.S.ராமதாஸ்

தமிழ்நாட்டில் அரசுத்துறை பதவி உயர்வில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் விதத்தில் மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது. இதனால் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பதவி உயர்வுக்கு ஏற்பட்டுள்ள பெரும் தடையை அகற்றத் தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.

மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு செல்லும்: உச்சநீதிமன்ற தீர்ப்பு புதிய சமூகநீதி வரலாறு படைக்கும்! - DR.அன்புமணி ராமதாஸ்



மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு  இட ஒதுக்கீடு செல்லும்: உச்சநீதிமன்ற  தீர்ப்பு புதிய சமூகநீதி வரலாறு படைக்கும்!
 - DR. அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் மருத்துவ மேற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில், ஊரகப் பகுதிகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசுக்கு உரிமை உண்டு என்றும், இது தொடர்பான இந்திய மருத்துவக் குழுவின் விதிகள் செல்லாது என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பு சமூகநீதி வரலாற்றில் புதிய மைல்கல்லாக அமையும் என்பதில் ஐயமில்லை.

இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தைப் பாதுகாப்போம்! - வைகோ அறிக்கை



இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தைப் பாதுகாப்போம்!
 - வைகோ அறிக்கை

இந்தியாவின் காப்பீட்டுத் துறையில் கோடான கோடி மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள எல்.ஐ.சி. நிறுவனம் செப்டம்பர் 1 ஆம் நாள், 65 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.

வெறும் 5 கோடி ரூபாய் முதலீட்டில் 1956 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் நாள், எல்.ஐ.சி நிறுவனம் தொடங்கப்பட்டது.

செவ்வாய், 1 செப்டம்பர், 2020

பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகத்தில் 'ரேட் பேசி தகுதிகள் விற்கப்பட்டதா' என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை தீவிர விசாரணை நடத்திட வேண்டும்.- திரு. துரைமுருகன் MLA

 "பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகத்தில் 'ரேட் பேசி தகுதிகள் விற்கப்பட்டதா' என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை தீவிர விசாரணை நடத்திட வேண்டும்" - திரு. துரைமுருகன் MLA 

பழம்பெரும் பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் வரும் ஆறு கல்லூரிகளில் தகுதியில்லாதவர்கள் உதவிப் பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டிருப்பது மிகவும் வேதனை தருகிறது. 

மறைந்த பேராசிரியர் பெருந்தகை, என்.வி.என். சோமு, முரசொலி மாறன், நான் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அரசியல் பிரமுகர்களும், நீதிபதிகளும் படித்த புகழ்பெற்ற இந்தக் கல்லூரிகளில்;