புதன், 7 அக்டோபர், 2020

எல்இடி (LEDs )விளக்குகளில் இருந்து வெளிப்படும் வெள்ளை நிறத்தின் தன்மையை மேம்படுத்தும் தொழில்நுட்பத்தை நேனோ அறிவியல் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்

வெள்ளை ஒளி உமிழும் டையோட்கள் (எல்.ஈ.டி) ஒரு பொதுவான ஒளி மூலமாக தயாரிப்பதில் எதிர்கொள்ளும் முக்கிய சவால் வண்ண தரம். உயர்தர வெள்ளை ஒளியை உருவாக்குவதற்கான வழிமுறைகளைத் தேடும் விஞ்ஞானிகள் வெள்ளை எல்.ஈ.டிகளை வடிவமைக்க உதவும் முக்கியமான எதிர்வினை நுண்ணறிவுகளைக் கண்டுபிடித்துள்ளனர்.

விவசாயத்திற்கு தேவையான உரம் , பூச்சி மருந்துகள் , உபகரணங்கள் வேளாண் விற்பனை நிறுவனங்களில் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். - ஜி.கே.வாசன்

 விவசாயத்திற்கு தேவையான உரம் , பூச்சி மருந்துகள் , உபகரணங்கள் வேளாண் விற்பனை நிறுவனங்களில் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். - ஜி.கே.வாசன் 

காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது . இயற்கையின் அருளால் விவசாய பணிகள் குறித்த நேரத்தில் தொடங்கப்பட்டு இருப்பது விவசாயிகளிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது .

கோவிட் -19 ஐ நிர்வகிப்பதற்கான ஆயுர்வேதம் மற்றும் யோகாவை அடிப்படையாகக் கொண்ட தேசிய மருத்துவ மேலாண்மை நெறிமுறை டாக்டர் ஹர்ஷ் வர்தன் வழங்கினார்


கோவிட் -19 ஐ நிர்வகிப்பதற்கான ஆயுர்வேதம் மற்றும் யோகாவை அடிப்படையாகக் கொண்ட தேசிய மருத்துவ மேலாண்மை நெறிமுறை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் மற்றும் ஆயுஷிற்கான மத்திய மாநில (ஐசி) ஸ்ரீ ஸ்ரீபாத் யெசோ நாயக் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர். இன்று. என்ஐடிஐ ஆயோக் துணைத் தலைவர் டாக்டர் ராஜீவ் குமார் மெய்நிகர் நிகழ்வை வழங்கினார்.

மத்திய அரசின் தொல்லியல் துறையில் உயர்தனிச் செம்மொழி ‘தமிழ்’ புறக்கணிப்பு! - வைகோ கண்டனம்


 மத்திய அரசின் தொல்லியல் துறையில்

உயர்தனிச் செம்மொழி ‘தமிழ்’ புறக்கணிப்பு! - வைகோ கண்டனம்

மத்திய அரசின் தொல்லியல் துறையின் சார்பில், பண்டிட் தீன்தயாள் உபாத்தியாயா தொல்லியல் நிறுவனம் உத்திரப் பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் இயங்கி வருகின்றது. இந்நிறுவனம், தொல்லியல் துறை சார்ந்த 2 ஆண்டு முதுகலைப் பட்டயப் படிப்புக்கான குறிப்பு ஆணையை வெளியிட்டு, முதுகலைப் பட்டம் பெற்று இருப்போர் விண்ணப்பிக்கலாம் என்று ஏடுகளில் விளம்பரம் செய்து உள்ளது. 

தமிழக ஆளுனர் இனியும் தாமதிக்காமல், மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு அடுத்த ஓரிரு நாட்களில் ஒப்புதல் அளிக்க வேண்டும்.- DR.S.ராமதாஸ்



மருத்துவப் படிப்பில் அரசு மாணவர்களுக்கு 
இட ஒதுக்கீடு: புதிய சட்டத்திற்கு ஒப்புதல் 
வழங்க ஆளுனர் தாமதிக்கக் கூடாது! - DR.S.ராமதாஸ்

தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு  7.5% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டம் பேரவையில் நிறைவேற்றப்பட்டு, இன்றுடன் 21 நாட்கள் ஆகும் நிலையில், அச்சட்டத்திற்கு ஆளுனர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. மாணவர்கள் நலன் சார்ந்த விஷயத்தில் ஆளுனர் தேவையின்றி காலதாமதம் செய்வது கண்டிக்கத்தக்கது ஆகும்.