புதன், 7 அக்டோபர், 2020

விவசாயத்திற்கு தேவையான உரம் , பூச்சி மருந்துகள் , உபகரணங்கள் வேளாண் விற்பனை நிறுவனங்களில் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். - ஜி.கே.வாசன்

 விவசாயத்திற்கு தேவையான உரம் , பூச்சி மருந்துகள் , உபகரணங்கள் வேளாண் விற்பனை நிறுவனங்களில் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். - ஜி.கே.வாசன் 

காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது . இயற்கையின் அருளால் விவசாய பணிகள் குறித்த நேரத்தில் தொடங்கப்பட்டு இருப்பது விவசாயிகளிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது .

 " காலத்தே பயிர் செய் ” என்ற பழமொழிக்கு ஏற்ப நாம் விவசாயப் பணியை தொடங்கினாலும் , பயிர் செழித்து வளர வேண்டுமென்றால் அதற்கான முறையான உரங்கள் இடவேண்டும் . 

அப்போழுதான் நாம் எதிற்பார்க்கும் மகசூல் கிடைக்கும் . தற்பொழுது காவிரி டெல்டா மாவட்டங்களில் , உரங்கள் வேளாண் விற்பனை நிலையங்களில் தேவைக்கு ஏற்ப கிடைக்கவில்லை . 

அதனால் உழவுப் பணியை தொடங்கினாலும் தொடர் பணி முற்றுபெறாமல் இருக்கிறது . விவசாயிகளின் அவசரத் தேவையையும் , உரம் தட்டுப்பாட்டையும் தனியார்துறையினர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு விலையை உயர்த்துகின்றனர் . “ 

உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது ” என்ற பழமொழிக்கு ஏற்ப பல்வேறு விவசாய செலவிற்கு இடையில் உரம் தட்டுப்பாடாலும் , விலையேற்றத்தாலும் , விவசாயத்தில் வருமானம் எதுவும் மிஞ்சாது என்ற நிலைதான் ஏற்படும் . 

தற்பொழுது காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் 1.5 லட்சம் ஏக்கர் நிலத்தில் விவசாயப் பணி துவங்கப்பட்டுள்ளது . ஆகவே அவற்றின் தேவைக்கு ஏற்ப தமிழக அரசு காலதாமதம் இன்றி அனைவருக்கும் தட்டுப்பாடு இல்லாமல் உரம் கிடைக்கு வழிவகை செய்ய வேண்டும் . 

முன்னேற்பாட்டுடன் அனைத்து வேளாண் விற்பனை மையங்களிலும் விவசாய இடுபொருள்கள் , பூச்சி மருந்துகள் மற்றும் வேளாண் உபகரணங்கள் கிடைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக