மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா, மேகாலயா பயணத்தின் 2வது நாளில், சோஹ்ரா(சிரபுஞ்சி) என்ற இடத்தில் பசுமை சோஹ்ரா காடு வளர்ப்பு பிரச்சாரத்தை இன்று தொடங்கிவைத்தார். பெருநகர சோஹ்ரா குடிநீர் விநியோக திட்டத்தையும், திரு அமித்ஷா தொடங்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில், வடகிழக்கு பகுதி மேம்பாட்டு அமைச்சர் திரு ஜி.கிஷன் ரெட்டி, இணையமைச்சர் பி.எல்.வர்மா, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங், மேகாலயா முதல்வர் திரு கான்ரட் சங்மா உள்பட மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.




