ஞாயிறு, 25 ஜூலை, 2021

‘‘என்றும் பசுமைமாறா வடகிழக்கு’’ மரங்கள் நடுவதற்காக, ஒட்டுமொத்த சிரபுஞ்சியையும் அசாம் ரைபிள்ஸ் (Assam Rifles) படைப்பிரிவு தத்தெடுக்கவுள்ளது.- திரு.அமித்ஷா


 மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா, மேகாலயா பயணத்தின் 2வது நாளில், சோஹ்ரா(சிரபுஞ்சி) என்ற இடத்தில் பசுமை சோஹ்ரா காடு வளர்ப்பு பிரச்சாரத்தை இன்று தொடங்கிவைத்தார். பெருநகர  சோஹ்ரா குடிநீர் விநியோக திட்டத்தையும், திரு அமித்ஷா தொடங்கிவைத்தார்.  

இந்நிகழ்ச்சியில், வடகிழக்கு பகுதி மேம்பாட்டு அமைச்சர் திரு ஜி.கிஷன் ரெட்டி, இணையமைச்சர் பி.எல்.வர்மா, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங், மேகாலயா முதல்வர் திரு கான்ரட் சங்மா உள்பட மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.

மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் கோவாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை இந்திய முப்படையினர் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.


 மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் கோவாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை இந்திய முப்படையினர் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர். மகாராஷ்டிராவின் ரத்னகிரி, கோலாப்பூர் மற்றும் சங்கிலி மாவட்டங்களில் இந்திய ராணுவத்தின் காலாட்படைகள், பொறியாளர்கள், தொலைத்தொடர்பு, மீட்பு மற்றும் மருத்துவ குழுக்கள் அடங்கிய பணிக் குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். சிப்லன், ஷிரால், ஹட்காங்லே, பாலஸ் மிராஜ் பகுதிகளில் இந்தக் குழுவினர் பல்வேறு உயிர்களைக் காப்பாற்றியுள்ளனர்.

சனி, 24 ஜூலை, 2021

மத்திய அரசின் குறிப்பிடத்தக்க முடிவின்படி, 5 மருத்துவ உபகரணங்களுக்கான வர்த்தக விலையை தேசிய மருந்து விலை ஆணையகம் (NPPA) நிர்ணயித்துள்ளது.


 மத்திய அரசின் குறிப்பிடத்தக்க முடிவின்படி, 5 மருத்துவ உபகரணங்களுக்கான வர்த்தக எல்லையை ஜூலை 13 தேதியிட்ட அறிவிக்கையில்  தேசிய மருந்து விலை ஆணையகம் (என்பிபிஏ) நிர்ணயித்துள்ளது. இந்த ஐந்து உபகரணங்கள் பின்வருமாறு:

1.       பல்ஸ் ஆக்ஸிமீட்டர்

2.       ரத்த அழுத்தத்தைக் கண்காணிக்கும் இயந்திரம்

3.       நெபுலைசர்

4.       மின்னணு வெப்பமானி

5.       க்ளூகோமீட்டர்

சர்வதேச பிரச்சினைகளில் புத்தமத மாண்புகள் மற்றும் கொள்கைகளைக் கடைப்பிடிப்பது, மேம்பட்ட இடமாக உலகை மாற்றுவதற்கு உதவிகரமாக இருக்கும்.- குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த்


 சர்வதேச பிரச்சினைகளில் புத்தமத மாண்புகள் மற்றும் கொள்கைகளைக் கடைப்பிடிப்பது, மேம்பட்ட இடமாக உலகை மாற்றுவதற்கு உதவிகரமாக இருக்கும் என்று குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் கூறியுள்ளார்.

சர்வதேச புத்தமத கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த வருடாந்திர ஆஷாத பூர்ணிமா- தர்மசக்கர தின நிகழ்ச்சியில் இன்று (ஜூலை 24, 2021) காணொலி வாயிலாக வெளியிட்ட செய்தியில் அவர் இதனைத் தெரிவித்தார். புத்தர் அருளிய போதனைகளின் சாராம்சத்தில் நிலைத்திருப்பது மிகவும் அவசியம் என்றும், அதன் வேறுபட்ட விளக்கங்களால் பாதை மாறக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். இது சம்பந்தமாக சர்வதேச புத்தமத கூட்டமைப்பின் நோக்கங்கள் பாராட்டத்தக்கவை என்று அவர் குறிப்பிட்டார். மனித சமூகத்திற்கு சேவையாற்றுவதற்காக அனைத்து புத்த பாரம்பரியங்கள் மற்றும் அமைப்புகளுக்கான பொதுவான தளத்தை உருவாக்கிய இந்தக் கூட்டமைப்பின் முயற்சிகளையும் அவர் பாராட்டினார்.

அரசு ஊழியர்களின் ஓய்வு வயது மீண்டும் 58 ஆகக் குறைக்கப்பட வேண்டும் வேலை வாய்ப்பு பெருகட்டும், நம் இளைஞர்களின் துயரம் நீங்கட்டும்! - கி.வீரமணி

 தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பின் அபாய நிலை ஓய்வு வயதை அ.தி.மு.க. அரசு உயர்த்தியதன் பின்னணி என்ன?

இந்த நெருக்கடியிலிருந்து மீள தி.மு.க. அரசு செய்யவேண்டியது என்ன?

அரசு ஊழியர்களின் ஓய்வு வயது மீண்டும் 58 ஆகக் குறைக்கப்பட வேண்டும்

வேலை வாய்ப்பு பெருகட்டும் - நம் இளைஞர்களின் துயரம் நீங்கட்டும்!

 - கி.வீரமணி

தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பகங்களில் பதிவு செய்து வேலைக்காகக் காத்திருக்கும் இளைஞர்கள் - நடுத்தர வயதினர்களின் எண்ணிக்கை 67 லட்சத்து  76 ஆயிரமாக உள்ளது என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

இதில் பட்டதாரி மற்றும் வயது குறைந்த இளைஞர்களின் எண்ணிக்கை  சுமார் 12 லட்சம் ஆகும். மற்றும் சுமார் ஒன்றரை லட்சம் பேர் வேலைக்கு விண்ணப்பித்துக் காத்திருக்கும் மாற்றுத் திறனாளிகள்!