வெள்ளி, 4 மார்ச், 2022

மத்திய அரசின் ஆபரேஷன் கங்கா திட்டத்தின் ஒரு பகுதியாக, உக்ரைனில் இருந்து சுமார் 200 மாணவர்கள் மற்றும் இந்தியர்கள், இந்தியாவிற்கு திரும்ப அழைத்து வரப்பட்டுள்ளனர்.


 மத்திய அரசின் ஆபரேஷன் கங்கா திட்டத்தின் ஒரு பகுதியாக, உக்ரைனில் இருந்து சுமார் 200 மாணவர்கள் மற்றும் இந்தியர்கள், இந்தியாவிற்கு திரும்ப அழைத்து வரப்பட்டுள்ளனர்.

 தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அவர்களை மத்திய ரசாயன உரத்துறை இணையமைச்சர் திரு பகவந்த் கூபா வரவேற்றார்.  இவர்களை ஏற்றி வந்த இன்டிகோ சிறப்பு விமானம் இன்று காலை தில்லி வந்திறங்கியது.

தற்சார்பு இந்தியா மற்றும் இந்தியாவில் உற்பத்தி என்பதற்கு பல முக்கிய அம்சங்களை பட்ஜெட் கொண்டிருக்கிறது.- பிரதமர் திரு நரேந்திர மோடி


 தொழில்துறை மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தகத்துறை (டிபிஐஐடி) ஏற்பாடு செய்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழி கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். பிரதமரால்  உரை நிகழ்த்தப்பட்ட பட்ஜெட்டுக்குப் பிந்தைய எட்டாவது இணையவழிக் கருத்தரங்காகும் இது.  இந்தக் கருத்தரங்கிற்கு  உலகத்துக்காக இந்தியாவில் உற்பத்தி என்பது மையப் பொருளாக இருந்தது.

இளைஞர்கள், தாங்கள் தேர்வு செய்த துறைகளில், அறிவாற்றல் மற்றும் நிபுணத்துவத்தை பெறுவதற்கு, போட்டிகளை எதிர்கொண்டு வெற்றியடைய வேண்டும்.- திரு எம் வெங்கையா நாயுடு


 இளைஞர்கள், தாங்கள் தேர்வு செய்த துறைகளில், அறிவாற்றல் மற்றும் நிபுணத்துவத்தை பெறுவதற்கு, போட்டிகளை எதிர்கொண்டு வெற்றியடைய வேண்டுமென்ற உறுதிப்பாட்டுடன்  கடினமாக உழைக்க வேண்டுமென குடியரசு துணைத்தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு ஆலோசனை கூறியுள்ளார்.

விஜயவாடாவில் சொர்ணபாரத் அறக்கட்டளையின் மூலம் தொழில் பயிற்சி பெறுவோரிடையே இன்று உரையாற்றிய அவர், இளைஞர்கள் பெரிய அளவில் கனவுகண்டு, தங்களது இலக்குகளை அடைய கட்டுப்பாட்டுடனும், நடைமுறை சார்ந்த முறையில் அர்ப்பணிப்பு உணர்வுடனும் பாடுபடுமாறு கேட்டுக் கொண்டார்.

புதிய மதுக்கடைகளை திறக்கும் முடிவை கைவிட்டு, ஏற்கனவே உள்ள மதுக்கடைகளை மூடி, மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்.- DR. அன்புமணி ராமதாஸ்

 படிப்படியாக மதுவிலக்கு என கூறிவிட்டு,

புதிய மதுக்கடைகளை திறக்க துடிப்பதா? - DR. அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் புதிதாக மதுக்கடைகளை திறப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், அது குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மறு ஆய்வு செய்வதை கட்டாயமாக்கி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டிருப்பதாக  தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. மேலோட்டமாக பார்த்தால் மதுக்கடைகளை திறக்கும் விஷயத்தில் மக்களின் உணர்வுகளுக்கு தமிழக அரசு மதிப்பளிப்பது போல தோன்றினாலும், இது இனிப்பு கலக்கப்பட்ட நஞ்சு என்பது தான் உண்மை. மது வணிகத்தை அதிகரிக்க அரசு துடிப்பதையே இது காட்டுகிறது.

வியாழன், 3 மார்ச், 2022

பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான 19-வது ராணுவ ஒத்துழைப்பு கூட்டத்தை இந்தியா மற்றும் அமெரிக்கா ஆக்ராவில் நடத்தின


 இந்திய-அமெரிக்க ராணுவ ஒத்துழைப்புக் குழுவின் (எம்சிஜி) 19-வது பதிப்புக் கூட்டம்  மார்ச் 01-02, 2022ல்  உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஆக்ராவில்  நடைபெற்றது.