காபோன், செனகல், கத்தார் நாடுகளில் வெற்றிகரமான 9 நாள் பயணத்தை நிறைவு செய்த குடியரசு துணைத்தலைவர் திரு வெங்கையா நாயுடு இன்று மாலை இந்தியா திரும்பினார். காபோன், செனகல் ஆகிய நாடுகளுக்கு இந்தியாவைச் சேர்ந்த உயர்நிலை தலைவரின் முதலாவது பயணம் இதுவாகும். அதேபோல் இந்திய குடியரசு துணைத்தலைவர் கத்தார் நாட்டிற்கு மேற்கொண்ட முதலாவது பயணம் இதுவாகும். இந்த நாடுகளின் தலைநகரங்களான லிப்ரேவில்லே, டாக்கர், தோகா ஆகியவற்றில் திரு நாயுடுவை கவுரவிக்கும் வகையில் அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சிகளில் அவர் அந்நாடுகளின் வணிகத்துறையினர் மற்றும் இந்திய சமூகத்தினருடன் கலந்துரையாடினார்.




