செவ்வாய், 7 ஜூன், 2022

இந்திய வம்சா வழியினரின் வெற்றி என்பது இந்தியா மற்றும் இந்தியர்கள் பற்றிய உலகின் கண்ணோட்டத்தை மாற்றியுள்ளது. - குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு


 காபோன், செனகல், கத்தார் நாடுகளில் வெற்றிகரமான 9 நாள் பயணத்தை நிறைவு செய்த குடியரசு துணைத்தலைவர் திரு வெங்கையா நாயுடு இன்று மாலை இந்தியா திரும்பினார். காபோன், செனகல் ஆகிய நாடுகளுக்கு இந்தியாவைச் சேர்ந்த உயர்நிலை தலைவரின் முதலாவது பயணம் இதுவாகும். அதேபோல் இந்திய குடியரசு துணைத்தலைவர் கத்தார் நாட்டிற்கு மேற்கொண்ட முதலாவது பயணம் இதுவாகும். இந்த நாடுகளின் தலைநகரங்களான லிப்ரேவில்லே, டாக்கர், தோகா ஆகியவற்றில் திரு நாயுடுவை கவுரவிக்கும் வகையில் அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சிகளில்  அவர் அந்நாடுகளின் வணிகத்துறையினர் மற்றும் இந்திய சமூகத்தினருடன்  கலந்துரையாடினார்.

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதில் தமிழக அரசால் செய்யப் படும் ஒவ்வொரு நாள் தாமதமும் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம்.- DR . அன்புமணி ராமதாஸ்

 ஆன்லைன் சூதாட்டத்தடை: அவசர சட்டம்

பிறப்பிக்கக் கோரி ஜூன் 10 போராட்டம்! - DR . அன்புமணி ராமதாஸ்

ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் வேட்டைக்காடாக தமிழ்நாடு மாற்றப்பட்டு வரும் நிலையில்,  அதைத் தடுக்க தமிழ்நாடு அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளவில்லை என்பது மிகவும் வேதனையளிக்கிறது. ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதில் தமிழக அரசால்  செய்யப் படும் ஒவ்வொரு நாள் தாமதமும் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும்.

சென்னை ஐ.ஐ.டி.யில் இப்போது நிரப்பப்படாத 25 பணியிடங்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த பின்னடைவு பணியிடங்களும் அடையாளம் காணப்பட வேண்டும்.- DR.S.ராமதாஸ்



 சென்னை ஐஐடி: பின்னடைவு பணியிடங்களை

நிரப்புவதிலும் சமூகநீதியை மறுப்பதா? - DR.S.ராமதாஸ்

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் உள்ள 49 உதவிப் பேராசிரியர் பின்னடைவு பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட ஆள்தேர்விலும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. உச்சநீதிமன்றமும், மத்திய அரசும் எத்தனை முறை எச்சரித்தாலும் கூட இட ஒதுக்கீட்டை செயல்படுத்த ஐ.ஐ.டி நிர்வாகங்கள் மறுப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

இந்தியா மண்ணைப் பாதுகாப்பதற்கான ஐந்து அம்சத் திட்டத்தைக் கொண்டுள்ளது. - பிரதமர் திரு.நரேந்திர மோடி


 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பிரதமர் கூட்டத்தில் திரண்டிருந்தவர்களுக்கு  வாழ்த்து தெரிவித்தார். 'மண்ணைக் காப்போம்' இயக்கத்தைப் பாராட்டிய பிரதமர், விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் போது, நாடு  புதிய உறுதிமொழிகளை எடுத்துக்கொண்டிருக்கும் நேரத்தில், இத்தகைய இயக்கங்கள் புதிய முக்கியத்துவம் பெறுவதாகக் கூறினார். கடந்த 8 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட  முக்கிய திட்டங்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் கோணத்தில் இருப்பதாக அவர் திருப்தி தெரிவித்தார். தூய்மை இந்தியா இயக்கம்,  கழிவுகளிலிருந்து செல்வம் தொடர்பான திட்டம், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் உபயோகம் குறைப்பு, ஒரு சூரியன் ஒரு பூமி, எத்தனால் கலக்கும் திட்டம் ஆகியவை சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான இந்தியாவின் பல பரிமாண முயற்சிகளுக்கு எடுத்துக்காட்டுகள் என்று  அவர் சுட்டிக்காட்டினார். 

திங்கள், 6 ஜூன், 2022

உத்தரப்பிரதேச சட்டமன்ற இருஅவைகளின் சிறப்பு அமர்வில் குடியரசுத்தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்


லக்னோவில் உத்தரப்பிரதேச சட்டமன்ற இருஅவைகளின் சிறப்பு அமர்வில் குடியரசுத்தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் இன்று (ஜூன் 6, 2022) உரையாற்றினார்.

 இந்த நிகழ்வில் உரையாற்றிய குடியரசுத் தலைவர், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் மிகப்பெரிய சட்டமன்ற உறுப்பினர்களிடையே உரையாற்றுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. உத்தரப்பிரதேசத்தின் சமூக, கலாச்சார, பொருளாதார, புவியியல் பன்முக தன்மை அதன் ஜனநாயகத்தை மேலும் வளமுள்ளதாக மாற்றுகின்றன. இந்த மாநிலத்தின் 20 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு மிகவும் நல்ல உதாரணமாக விளங்குகிறது என்று அவர் கூறினார்.