சனி, 23 ஏப்ரல், 2022

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காகப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜம்மு-காஷ்மீருக்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

 


தேசிய பஞ்சாயத்து ராஜ் தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காகப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜம்மு-காஷ்மீருக்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். 2022 ஏப்ரல் 24 அன்று காலை 11:30 மணிக்கு நாட்டில் உள்ள அனைத்து கிராம சபைகளுடன் அவர் உரையாற்றுவார். சம்பா மாவட்டத்தில் உள்ள பாலி பஞ்சாயத்துக்கும் அவர் செல்லவிருக்கிறார். இந்தப் பயணத்தின்போது ரூ. 20,000 கோடி மதிப்பிலான பலவகை வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைக்கவும் அடிக்கல் நாட்டவும் உள்ளார். அம்ரித் சரோவர் திட்டத்தையும் அவர் தொடங்கி வைப்பார். இதன் பின்னர் மாலை 5 மணி அளவில் மும்பையில் மாஸ்டர் தீனாநாத் மங்கேஷ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பார். இங்கு அவர் முதலாவது லதா தீனாநாத் மங்கேஷ்கர் விருதினைப் பெற்றுக் கொள்வார்.

ஜம்மு-காஷ்மீரில் பிரதமர்

ரூ 3 ஆயிரத்து 500 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள வாணி கால் குவாசி கண்ட் சாலையில் கட்டப்பட்டுள்ள சுரங்க பாதையையும் பிரதமர் திறந்து வைப்பார் 8.45 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த சுரங்கப்பாதை வாணி கால் குவாசி கண்டு இடையேயான தூரத்தை 16 கிலோ மீட்டர் அளவுக்கு உழைக்கும் மேலும் பயண நேரமும் சுமார் ஒன்றரை மணி நேரம் குறையும் இது இரட்டை சுரங்கப்பாதை யாகும் ஒன்று இரு வழிகளிலும் பயணம் செய்வதற்கான து இவற்றில் 500 ஒவ்வொரு 100 மீட்டருக்கும் மீட்டர் தூரத்திலும் ஒன்றை ஒன்று கடந்து செல்லும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட சாலைகளாக இருக்கும் பராமரிப்பு மற்றும் அவசரகால வெளியிட்டதற்காக இந்த சுரங்கப்பாதை ஜம்மு விற்கும் காஷ்மீருக்கும் இடையேயான இடையே அனைத்து பருவத்திலும் தொடர்பை ஏற்படுத்த உதவும் இந்த இரண்டு பகுதிகளையும் நெருக்கமாக கொண்டு வரும்

ரூ 7,500 கோடி செலவில் கட்டப்படவுள்ள தில்லி - அமிர்தசரஸ் - கத்ரா என மூன்று விரைவுசாலைத் திட்டங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டுவார். இவை தில்லி - அமிர்தசரஸ் - கத்ரா ஆறுவழி விரைவுப்

பாதைக்கான நான்கு வழிப் பாதை இணைப்பாக இருக்கும்

தேசிய நெடுஞ்சாலை 44ல் உள்ள பல்சுவாவிலிருந்து குர்ஹா பைல்தரன், ஹிராநகர்; குர்ஹா பைல்தரன், ஹிராநகரிலிருந்து ஜாக், விஜய்பூர்; ஜாக், விஜய்பூரிலிருந்து குஞ்வினி, ஜம்மு என இருக்கும் இந்தப் பாதை ஜம்மு விமானநிலையத்தை இணைக்கும்.

ராட்லே மற்றும் க்வார் புனல் மின் திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுவார். கிஷ்த்வார் மாவட்டத்தின் செனாப் ஆற்றின் குறுக்கே ரூ. 5,300 கோடி செலவில் 850 மெகாவாட் உற்பத்தித் திறன்கொண்ட ராட்லே புனல் மின் நிலையம் அமைக்கப்படவுள்ளது.

கிஷ்த்வார் மாவட்டத்தின் செனாப் ஆற்றின் குறுக்கே ரூ. 4,500 கோடி செலவில் 540 மெகாவாட் உற்பத்தித் திறன்கொண்ட க்வார் புனல் மின் நிலையம் அமைக்கப்படவுள்ளது. இந்தப் பிராந்தியத்தின் மின் தேவைகளை எதிர்கொள்ள இந்த இரு திட்டங்களும் உதவும்.

பாலியில் 500 கிலோ வாட் உற்பத்தித் திறன் கொண்ட சூரிய மின்சக்தி திட்டத்தையும் அவர் தொடங்கி வைப்பார். இதன் மூலம் கரியமில வாயு வெளியேற்றம் இல்லாத முதலாவது பஞ்சாயத்தாக இது மாறியிருக்கிறது.

ஸ்வமிதா அட்டைகளைப் பயனாளிகளுக்குப் பிரதமர் வழங்கவிருக்கிறார். பல்வேறு வகைகளில் சாதனைகள் புரிந்ததற்கு விருதுகளை வென்றுள்ள பஞ்சாயத்துகளுக்குப் பரிசுத் தொகையை தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தன்று அவர் பரிவர்த்தனை செய்துவைப்பார். இந்தப் பகுதியின் கிராமப்புற பாரம்பரியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இன்டாக் புகைப்பட காட்சிக் கூடத்திற்கும் செல்லவிருக்கும் பிரதமர், ஊரகத் தொழில்துறை அடிப்படையில் மாதிரியாக வடிவமைக்கப்பட்டுள்ள நோக்கியா ஸ்மார்ட்பூருக்கும் செல்வார்.

நீர்நிலைகள் புனரமைப்பு செய்யப்படுவதை உறுதி செய்யும் விதமாக ஜம்மு-காஷ்மீர் பயணத்தின்போது அமிர்த சரோவர் எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைப்பார். நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 நீர்நிலைகளை உருவாக்குதல் அல்லது புனரமைத்தல் என்பதை இது நோக்கமாகக் கொண்டது. இது சுதந்திரத்தின் 75வது ஆண்டுப் பெருவிழாவை நோக்கிய அரசின் மற்றொரு சிறப்பு திட்டமாகும்.

மும்பையில் பிற்பகல் ஐந்து மணி அளவில் மாஸ்டர் தீனாநாத் மங்கேஷ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பார். இந்த நிகழ்ச்சியில் பிரதமருக்கு முதலாவது லதா மங்கேஷ்கர் விருது வழங்கப்படும். பாரதரத்னா லதா மங்கேஷ்கர் நினைவாக நிறுவப்பட்டுள்ள இந்த விருது தேசக் கட்டுமானத்திற்கு தலைசிறந்த பங்களிப்பு செய்த தனி நபர் ஒருவருக்கு ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக வழங்கப்படும்.


வீட்டு வசதி வாரிய வீடுகள்: தனியாருடன் சேர்ந்து கட்டினால் ஏழைகளுக்கு கிடைக்காது! - DR.S.ராமதாஸ்

 வீட்டு வசதி வாரிய வீடுகள்: தனியாருடன்

சேர்ந்து கட்டினால் ஏழைகளுக்கு கிடைக்காது! - DR.S.ராமதாஸ்

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகள் இனி தனியார் கட்டுமான நிறுவனங்களுடன் இணைந்து கூட்டு முயற்சியில் கட்டப்படும்; கூட்டு முயற்சி ஒப்பந்தத்தின்படி வீட்டு வசதி வாரியத்திற்கு கிடைக்கும் வீடுகளைக் கூட தனியார் கட்டுமான நிறுவனங்களிடம் விற்பனை செய்ய விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன என்று வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்திருக்கிறார். இந்தத்  திட்டம் செயல் வடிவம் பெற்றால் வீட்டு வசதி வாரியம் உருவாக்கப்பட்டதன் நோக்கமே சிதைந்து விடும்.

தமிழக சட்டப்பேரவையில் வீட்டு வசதித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்துப் பேசிய அவர்,‘‘வீட்டு வசதி வாரிய நிலங்களை தனியார் கட்டுமான நிறுவனங்களிடம் கொடுத்து கூட்டு முயற்சியில் வீடுகள் கட்டப்படும். அதற்காக தனியார் நிறுவனங்களுக்கு பணம் தரத் தேவையில்லை. மாறாக தனியார் நிறுவனங்கள் அவர்களுக்கான வீடுகளை எடுத்துக் கொண்டு மீதமுள்ள வீடுகளைத் தருவார்கள். அதை விற்று பணமாக்கினால் போதுமானது’’ என்று கூறியிருக்கிறார்.

அமைச்சர் முன்மொழிந்துள்ள திட்டம் வீட்டு வசதி வாரியத்தை தனியாரிடம் ஒப்படைப்பதை விட  மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். அமைச்சர் தெரிவித்துள்ள திட்டத்தை செயல்படுத்தினால் வீட்டு வசதி வாரியத்தின் செயல்பாடுகள் எளிமையாகும்; வீட்டு வசதி வாரியத்திற்கு லாபம் கிடைக்கும்; ஆனால், வீட்டு வசதி வாரியம் எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ, அது நிறைவேறாது; மாறாக வீட்டு வசதி வாரியமும் ஒரு வீட்டு வணிக நிறுவனமாக மாறி விடும். இது தேவையில்லை.

இந்தியா விடுதலை அடைந்த ஆண்டிலேயே தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் தொடங்கப்பட்டு விட்டது. வீட்டு வசதி வாரியத்தின் இணையதளத்தில், அதன் நோக்கமாக, ‘‘வீட்டுவசதி தேவைகளை பூர்த்தி செய்வதில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் ‘அனைவருக்கும் வீடு’ என்ற சிறந்த நோக்கத்துடன் முக்கிய பங்கு வகிக்கிறது. கட்டுமானத்தில் சமீபத்திய நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பொதுமக்களின் தேவைகளின் அடிப்படையில் பொருளாதாரத்தில் நலிவடைந்தோர் பிரிவு (EWS), குறைந்த வருவாய் பிரிவு (LIG), மத்திய வருவாய் பிரிவு (MIG) மற்றும் உயர் வருவாய் பிரிவினருக்கு (HIG) வீடுகள் வழங்கிட சிறந்த நோக்கத்துடன் செயல்படுகின்றது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் வீடு என்ற இலக்கை இதுவரை எட்ட முடியவில்லை என்றாலும் கூட, அந்த இலக்கை நோக்கி வீட்டு வசதி வாரியம் பயணிக்கிறது என்பதை மறுக்க முடியாது. வீட்டு வசதி வாரியத்தின் மூலம் வீடுகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதால் ஏழைகளாலும் வீடுகள் வாங்க முடிகிறது. எடுத்துக்காட்டாக சென்னையின் பல பகுதிகளில் தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள் ஒரு சதுர அடி ரூ.15,000 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டால், வீட்டு வசதி வாரிய வீடுகள் ரூ.7,000 முதல் ரூ.8,000 என்ற அளவில், பாதி விலையில் விற்கப்படுகின்றன. வீட்டு வசதி வாரிய வீடுகளில் வாகன நிறுத்தம் போதிய அளவில் இல்லாமை உள்ளிட்ட சில வசதிகள் குறைவாக இருந்தாலும் கூட கொடுக்கும் பணத்திற்கு அதிக மதிப்பாக உள்ளது. ஏழை, நடுத்தர மக்களின் வீட்டுக் கனவை நிறைவேற்றுகிறது.

 கூட்டு முயற்சியில் தனியாருடன் இணைந்து கட்டப்பட்டால் வீடுகளில் சில வசதிகள் கூடுதலாக இருக்கலாம். ஆனால், அந்த வீடுகளின் விலைகள் ஏழைகளால் வாங்க முடியாத அளவுக்கு விண்ணைத் தொடும் உயரத்தில் இருக்கும். சென்னை உள்ளிட்ட நகரங்களில் தனியார் நிறுவனங்களின் வீடுகளை  உயர்வகுப்பினரால் மட்டுமே வாங்க முடியும். கூட்டு முயற்சி திட்டம் செயல்படுத்தப்பட்டால், ஏழைகளின் வீட்டுக் கனவு கலைந்து விடும். அதிலும் குறிப்பாக, நிலம் கொடுத்ததற்கு ஈடாக வீட்டு வசதி வாரியத்திற்கு வழங்கப்படும் வீடுகளையும் கட்டுமான நிறுவனத்திடமே வாரியம் விற்கும் விதி செயல்படுத்தப்பட்டால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் சென்னை போன்ற மாநகரங்களில் வீடு வாங்குவதை மறந்து விடலாம்.

தனியார் கட்டுமான நிறுவனங்களுடன் கூட்டு முயற்சியில் வீடுகளை கட்டுவதற்காக வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமி கூறியுள்ள காரணத்தை ஏற்க முடியாது. வீட்டு வசதி வாரிய வீடுகளை ஒப்பந்ததாரர்கள் மூலம் தரமாக கட்ட முடியவில்லை என்பதால் தான், கூட்டு முயற்சியில் வீடு கட்டும் திட்டத்தை செயல்படுத்த தீர்மானித்ததாக அவர் தெரிவித்திருக்கிறார். தனியார் நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது, இந்தியாவில் தலைசிறந்த பொறியாளர்கள் வீட்டு வசதி வாரியத்தில் உள்ளனர். அவர்களை வைத்துக் கொண்டு தனியாருக்கு இணையான தரத்துடன் வீடுகளை கட்ட முடியவில்லை என்று கூறுவது நம்மை நாமே குறைத்து மதிப்பிடுவதாகும். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் நினைத்தால் தனியார் நிறுவனங்களை விட தரமான, அழகான வீடுகளை, குறைந்த செலவில் கட்டித் தர முடியும்.

எனவே, தனியார்துறை கூட்டு முயற்சியில் வீட்டு வசதி வாரிய வீடுகளை கட்டும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். வீட்டு வசதி வாரியமே அதன் மேற்பார்வையில் தரமான வீடுகளைக் கட்டி, ஏழை & நடுத்தர மக்களுக்கு கட்டுபடியாகும் விலையில் தொடர்ந்து வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.


திங்கள், 18 ஏப்ரல், 2022

டி.என்.பி.எஸ்.சி போட்டித் தேர்வை ஆங்கிலத்தில் மட்டும் நடத்துவதா? - DR. அன்புமணி ராமதாஸ்



 டி.என்.பி.எஸ்.சி போட்டித் தேர்வை

ஆங்கிலத்தில் மட்டும் நடத்துவதா? - DR.அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வரும் ஜூன் 19-ஆம் தேதி நடத்தப்படவிருக்கும்  குழந்தை பாதுகாப்பு அதிகாரி பணிக்கான போட்டித் தேர்வின் முதல் தாள் ஆங்கிலத்தில் மட்டும் தான் நடத்தப்படும் என்றும் குறிப்பிட்ட 5 பாடங்களில் பட்டம் பெற்றவர்கள் மட்டும் தான் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழை தாய்மொழியாகக் கொண்ட மாநிலத்தில் அம்மொழியை புறக்கணித்து விட்டு போட்டித் தேர்வு நடத்துவது கண்டிக்கத்தக்கது.

மதிப்பு அடிப்படையிலான நெறிமுறை சார்ந்த அரசியலுக்கான தேவையைக் குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தியுள்ளார்


 இந்திய ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும், வலுப்படுத்தவும் மதிப்பு அடிப்படையிலான நெறிமுறை சார்ந்த அரசியலுக்கான தேவையைக் குடியரசு துணைத் தலைவர் திரு.எம்.வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

ஆந்திரப்பிரதேசத்தின் கிருஷ்ண மாவட்ட பஞ்சாயத்தின் முன்னாள் தலைவர் மறைந்த திரு.பின்னாமநேனி கோடீஸ்வரராவின் உருவச்சிலையை மசூலிப்பட்டினத்தில் திறந்து வைத்து பேசிய அவர், பொது வாழ்க்கையில் தரம் தாழ்ந்து வருவது குறித்து கவலை தெரிவித்தார். மக்கள் பிரதிநிதிகள் தங்களின் அரசியல் எதிர்ப்பாளர்களை தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசுவதை நிறுத்த வேண்டுமென்று திரு.நாயுடு வலியுறுத்தினார். முக்கியமான தேச விஷயங்களின் மீது சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் பொதுக் கருத்தை உருவாக்குவது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். வளர்ந்து வரும் அரசியல்வாதிகள் பல்வேறு விஷயங்கள் மீது கோட்பாட்டு அடிப்படையிலான நிலையை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

மத்திய அரசு உத்தேசித்துள்ளவாறு ஜி.எஸ்.டி வரி விகிதம் உயர்த்தப்பட்டால் அது மக்களால் தாங்க முடியாத விலைவாசி உயர்வுக்கும், தொழில்துறை வீழ்ச்சிக்கும் வழிவகுக்கும்.- DR.S.ராமதாஸ்

 ஜி.எஸ்.டி வரிகள் உயர்த்தப்பட்டால் மக்கள்

பாதிக்கப்படுவர்: தொழில் வீழ்ச்சியடையும்! - DR.S.ராமதாஸ்

இந்தியாவில் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறை அறிமுகம் செய்யப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடையவிருக்கும் நிலையில், வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. மத்திய அரசு உத்தேசித்துள்ளவாறு ஜி.எஸ்.டி வரி விகிதம் உயர்த்தப்பட்டால் அது மக்களால் தாங்க முடியாத விலைவாசி உயர்வுக்கும், தொழில்துறை வீழ்ச்சிக்கும் வழிவகுக்கும்.