செவ்வாய், 31 மே, 2022

‘ஆபரேஷன் செம்மரக்கட்டை’-ன் மூலம் ரூ.11.70 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை வருவாய் புலனாய்வு பிரிவு கைப்பற்றியுள்ளது


 அகமதாபாத்தின் சபர்மதியில் உள்ள உள்நாட்டு சரக்குப் பெட்டக முனையத்தில் இருந்து ஷார்ஜாவுக்கு கடத்தப்படவிருந்த 14.63 மெட்ரிக்டன் எடையுள்ள செம்மரக்கட்டைகளை வருவாய் புலனாய்வு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். இதன் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ.11.70 கோடியாகும். நாட்டின் இயற்கை பாரம்பரியத்தை பேணி பாதுகாப்பது என்ற உறுதிப்பாட்டின்படி, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2014 முதல் நமது நாடு அரசியல் உறுதியை காண்கிறது. சீர்திருத்தங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. - பிரதமர் திரு.நரேந்திர மோடி


 ஐதராபாதில் உள்ள இந்திய வணிகவியல் பள்ளியின் 20 ஆண்டுகள் நிறைவு விழாவில் பங்கேற்ற பிரதமர் திரு.நரேந்திர மோடி, 2022-க்கான வணிகவியல் முதுநிலைக் கல்வி பயின்றோருக்கு பட்டமளிக்கும் விழாவில் உரையாற்றினார்.

இந்தக் கல்வி நிறுவனம் தற்போதைய புகழை அடைவதற்கு பங்களிப்பு செய்த அனைவருக்கும் புகழாரம் சூட்டினார். 2021-ல் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் இந்தக் கல்வி நிறுவனத்தை நாட்டுக்கு அர்ப்பணித்ததை அவர் நினைவுகூர்ந்தார். அதன் பிறகு 50,000-க்கும் அதிகமான அதிகாரிகள் இந்திய வணிகவியல் பள்ளியில் பட்டம் பெற்றுள்ளனர். இன்று இந்த நிறுவனம் ஆசியாவிலேயே முதன்மையான வணிகவியல் பள்ளியாக விளங்குகிறது. இங்கிருந்து பட்டம் பெற்றவர்கள் முதன்மையான நிறுவனங்களில் பணியாற்றுகிறார்கள் என்றும்  நாட்டின் வணிகத்திற்கு ஊக்கமளித்து வருகிறார்கள் என்றும் அவர் கூறினார். இங்கு பயின்ற மாணவர்கள் நூற்றுக்கணக்கான புதிய தொழில்களை தொடங்கி யுனிகார்ன்களை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். “இது ஐஎஸ்பி-ன் சாதனை என்றும், இது ஒட்டு மொத்த தேசத்திற்கு பெருமை சேர்ப்பதாகும்” என்றும் அவர் கூறினார்.

திங்கள், 30 மே, 2022

பா.ஜ.க. கொடுத்த வாக்குறுதிகள் எதையும் கடந்த 8 ஆண்டுகாலத்தில் நிறைவேற்றவில்லை. ஆனால், மக்கள் விரோத நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருவதையே மோடி ஆட்சி உறுதி செய்கிறது. - கே.எஸ். அழகிரி


 2014 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பா.ஜ.க.வின் சார்பில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என்று கூறி பொறுப்பேற்ற பிரதமர் மோடி, மே 30 ஆம் நாளன்று 8 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கருப்புப் பணத்தை ஒழிப்போம் என்று கூறினார்கள். கருப்புப் பணத்தை ஒழிக்க பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்து ரூபாய் 5 லட்சம் கோடி கருப்புப் பணம் கைப்பற்றப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், 96 சதவிகித ரொக்க பணம் வங்கிகளுக்கே திரும்பவும் வந்துவிட்டது. இதனால் 140 பேர் உயிரிழந்தனர். 35 லட்சம் பேர் வேலையிழந்தனர். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.25 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. இதுதான் மோடியின் கருப்புப் பண ஒழிப்பினால் கிடைத்த பலனாகும்.

புதன், 25 மே, 2022

இந்தியா-பங்களாதேஷ் கடற்படை கூட்டுப்பயிற்சி போங்கோசாகர் தொடங்கியது

இந்தியா-பங்களாதேஷ் கடற்படை இடையேயான மூன்றாவது போங்கோசாகர் கூட்டுப்பயிற்சி பங்களாதேஷில் உள்ள மோங்கலா துறைமுகத்தில் மே 24, 2022-ல் துவங்கியது. துறைமுகப் பயிற்சி மே 24, 25 ஆகிய நாட்களிலும், அதைத் தொடர்ந்து கடற்பயிற்சி வங்கக்கடலின் வடக்குப் பகுதியில் மே 26, 27 ஆகிய நாட்களிலும் நடைபெறுகிறது.  இருநாட்டு கடற்படையின் திறனை மேம்படுத்தும் நோக்கில் போங்கோசாகர் கூட்டுகடற்படை பயிற்சி நடைபெறுகிறது.

செவ்வாய், 24 மே, 2022

விலை உயர்வை தாங்க முடியாது: சமையல் எரிவாயு மானியத்தை மீண்டும் வழங்குக! - DR.S.ராமதாஸ்



விலை உயர்வை தாங்க முடியாது: சமையல்
எரிவாயு மானியத்தை மீண்டும் வழங்குக! - DR.S.ராமதாஸ்

சமையல் எரிவாயுவுக்கான மானியம் நிறுத்தப்பட்டது, நிறுத்தப்பட்டது தான் என்றும், அதை மீண்டும்  வழங்க வாய்ப்பே இல்லை என்று மத்திய அரசின் உயரதிகாரிகள் கூறியுள்ள கருத்துகள் பேரதிர்ச்சி அளிக்கின்றன. சமையல் எரிவாயு விலை மாதாமாதம் உயர்த்தப்பட்டு வரும் நிலையில், அதை சமாளிக்க மீண்டும் மானியம் வழங்கப்படாவிட்டால் அது ஏழை, நடுத்தர மக்களை பெருந்துயரத்தில் ஆழ்த்தி விடும்.