சனி, 6 ஆகஸ்ட், 2016

உலக அகதி நாள்

உலக அகதி நாள்
உலக அகதி நாள் (World Refugee Day), ஆண்டுதோறும் ஜூன் 20-ம் நாளன்று நினைவுகூரப்பட்டு வருகின்றது.
2000 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் சிறப்புத் தீர்மானமொன்றின்படி, அகதிகளுக்கான தமது ஆதரவினை வெளிப்படுத்தும் முகமாக, உலக அகதிகள் தினமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆபிரிக்க அகதிகள் நாள் ஜூன் 20 இல் கொண்டாடப்படுவதால் இந்நாள் உலக அகதிகள் நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. பல்வேறு மோதல்களுக்குள் சிக்கி அகதிகளாக தாம் வசிக்கும் நாட்டினுள், பிற நாடுகளிலென இடம்பெயர்ந்து பல்வேறு துன்பங்களுக்குள்ளாகி வாழ்ந்துவரும் அகதிகள் பற்றிய விழிப்புணர்வினை உலக மக்களிடத்தில் ஏற்படுத்துவதே இந்நாளின் முக்கியமான நோக்கமாகும்.
அன்றைய நாள் உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெறும் பல்வேறு போர்களால் அரசியல், சமூகச் சூழல்களால் அகதிகளாக அல்லலுறும் அகதிகளை நினைவு கூரும் வகையில் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், கருத்தரங்குகள், இசை நிகழ்ச்சிகள், நினைவஞ்சலி நிகழ்வுகளெனப் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் (UNHCR) ஒவ்வோர் ஆண்டும் இந்நிகழ்வுகளுக்கான கருப்பொருளைத் தீர்மானிக்கிறது.

வெள்ளி, 15 ஜூலை, 2016

பெருந்தலைவர் காமராஜர்

வாழ்க்கை வரலாறு

பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் விருதுநகரிலே ஒரு வியாபாரக் குடும்பத்திலே பிறந்தவர் ஆவார். அந்தக் காலத்தில் அந்த ஊருக்குப் பெயர் விருதுப்பட்டி.
காமராஜர் தாயார் பெயர் சிவகாமி அம்மாள். தந்தையின் பெயர் குமாரசாமி நாடார். அவர் விருதுப்பட்டியிலே தேங்காய் மொத்த வியாபாரம் செய்து வந்தார். சிவகாமி அம்மாளுக்கு இரண்டு சகோதரர்கள். ஒருவர் கருப்பையா நாடார். – இவர் துணிக்கடை வைத்திருந்தார். மற்றொருவர் பெயர் காசிநாராயண நாடார். இவர் திருவனந்தபுரத்திலே மரக்கடை வைத்து நடத்தி வந்தார்.
1903- ஆம் வருடம், ஜுலை மாதம் 15-ஆம் தேதி, காமராஜர் பிறந்தார். அவருக்கு குல தெய்வமான காமாட்சியம்மாளின் பெயரையே முதலில் சூட்டினார்கள்.
கண்ணனைப் பாரதி ”கண்ணம்மா” ஆக்கி அழைத்துப் பாடிப் பரவசப்பட்டதுபோல் ஆணாகப் பிறந்த காமராஜரை ”காமாட்சி” ஆக்கி அனைவரும் அழைத்து மகிழ்ந்தார்கள்.
தாயார் சிவகாமி அம்மாள் மட்டும், தன் செல்லக் குழைந்தையை ”ராஜா” என்றே அழைத்து வந்தாள். நாளடைவில் காமாட்சி என்ற பெயர் மாறி, ‘காமராஜ்’ என்று ஆனது.
காமராஜருக்குப் பின்னர், சிவகாமி அம்மாள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.நாகம்மாள் என்று அந்தக்குழந்தைக்குப் பெயர் சூட்டினார்கள். காமராஜரும் தங்கையிடம், அன்பும் பாசமும் கொண்டிருந்தார்.
காமராஜர் தனது பள்ளிப் படிப்புக்காலங்களிலேயே, இளம் வயதிலேயே, விருதுப்பட்டியில் நடந்த பொதுக்கூட்டங்களுக்குப் போகலானார். ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்டு கொண்டிருந்த காலம் அது. காமராஜர் இளம் வயதில் கேட்ட பொதுக் கூட்டங்களே அவரைப் பிற்காலத்தில் சுதந்திரப் போராட்ட வீரராகக் மாற்றியது.
”தந்தையொடு கல்விபோம்” – என்பதற்கு ஒப்ப, காமராஜரின் தந்தை குமாரசாமி நாடாரின் மறைவிற்குப் பின் காமராஜரின் பள்ளிப்படிப்பு முற்றுப்பெற்றது. வியாபாரங்களில் ஈடுபட்டார். முதலில் துணிக்கடையிலும், பின்னர் திருவனந்தபுரத்தில் மரக்கடை வைத்து நடத்திய காசியாராயண நாடார் மரக்கடையிலும் சிறிது காலம் வியாபாரத்தில் ஈடுபட்டார். அவரது கவனமெல்லாம் தேச விடுதலையிலேயே இருந்தது. வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண்டார். உப்புச் சத்தியாகிரகத்தில் பங்கு பெற்றார்.
காலப்போக்கில் காமராஜர், சத்தியமூர்த்தி தொண்டனாகி, காங்கிரஸ் பேரியக்க உறுப்பினராகி முழு நேரத் தேசப்பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். விடுதலைப் போரில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
கள்ளுக்கடை மறியல், அந்நியத் துணிகள் பகிஷ்காரம், கொடிப் போராட்டம், உப்பு சத்தியாக்கிரகம், சைமன் கமிஷன் எதிர்ப்பு ஆகியவற்றில் காமராஜர் பங்கேற்றுச் சிறை தண்டனை பெற்றார்.. அடுத்தடுத்துப் போராட்டங்கள் அனைத்திலும் ஈடுபட்டு பலமுறை சிறை தண்டனைகளை அனுபவித்தார் காமராஜர்..
தமிழ்நாடு காங்கிரஸில், ”காமராஜர் காங்கிரஸ்” என்ற நிலை உருவாகியது. காமராஜர் தனது தியாகத்தாலும், சலியாத உழைப்பாலும், தொண்டுகளினாலும் உயர்ந்த நிலையை அடைந்தார்.
1952-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காமராஜர் சாத்தூர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். சுமார் பன்னிரண்டு ஆண்டுகாலம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்து தமிழ்நாட்டிலே காங்கிரஸ் பேரியக்கத்திற்குப் பெரும் செல்வாக்கை ஏற்படுத்தித் தந்தார்.
1954- ஆம் ஆண்டு காமராஜர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் ஆனார். தலைவர் பதவியைத் துறந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் துறந்தார். குடியாத்தம் தொகுதியில் சட்டசபைக்குத் தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். மேல்சபை உறுப்பினராகி அவர் முதல் அமைச்சர் பதவியை வகித்திருக்கலாம். குறுக்கு வழியில் உள்ளே புகுந்து கொள்ள என்றும் விரும்பாத பெருந்தலைவரே கு. காமராஜர்.
இங்கே நான் காமராஜர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராகிச் செய்த சாதனைகளையே பட்டியலிட்டு காட்ட முன் வந்திருக்கிறேன். அதிகம் படிக்காத பெருந்தலைவர் காமராஜர் கல்விக்குச் செய்த சாதனைகள் எண்ணிலடங்காதவைகளாகும். ஏழை, எளியவர், உயர்ந்தவர், தாழ்ந்தோர், ஆக எல்லோருக்கும் கல்வி-இலவசக் கல்வி – பட்டி, தொட்டிகளில் எல்லாம் பள்ளிக்கூடங்கள் – இலவச மதிய உணவுச் சீருடைகள், இப்படிப் பலதிட்டங்களைத் தீட்டி அமுல்படுத்தினார் காமராஜர். தமிழகத்தில் கல்விச் செல்வம் பெருகியது. கிராமங்கள் தோறும் ஓராசியர் பள்ளிகள் திறக்கப்பட்டன.
கல்விக் கேள்விகளில் மட்டும் சிறந்து விளங்கினால் போதுமா? நாட்டிலே பஞ்சம், பசி, வேலையில்லாத் திண்டாட்டங்கள் விலகி விடுமா? சிந்தித்தார் காமராஜர். திட்டங்கள் தீட்டினார். நாட்டிலே புதுப் புதுத் தொழிற்சாலைகளை நிறுவச்செய்தார். தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.
காமராஜரின் திட்டங்களால் தமிழ்நாடு முன்னணியில் நின்றது. காமராஜரின் கல்வித் திட்டங்கள் நிறைவேற உடனிருந்து பாடுபட்டவர் அந்நாள் பள்ளிக் கல்வி இயக்குனர் திரு.நெ.து. சுந்தரவடிவேலு ஆவார்.
அதேபோல், காமராஜரின் தொழிற்திட்டங்கள் நிறைவேறக் காரணகர்த்தாவாக இருந்தவர் அன்றைய தொழில் அமைச்சர் திரு. ஆர். வெங்கட்ராமன் ஆவார்.
1957 – ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் அமோக வெற்றிப்பெற்றது. பெருந்தலைவர் காமராஜரே மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சரானார்.
ஒன்பது ஆண்டுகாலம் தமழக முதலமைச்சராக இருந்த பெருந்தலைவர் காமராஜர், தான் கொண்டு வந்த கே. பிளான் மூலம் தானே முதலமைச்சர் பதவியைத் துறந்தார். அகில இந்திய காங்கிஸ் தலைவரானார்.
பெருந்தலைவர் காமராஜர் ஆண்ட காலத்தைத் தமிழ்நாட்டின் பொற்காலம் என்பார்கள். அந்தக் காலத்தை உங்கள் பார்வைக்கும், படிப்புக்கும் கொண்டு வருவதற்காகவே இந்நூல் வெளியிடப்படுகிறது.
”காமராஜரின் சாதனைகள்” என்னும் இந்த நூலினைக் காமராஜர் நூற்றாண்டு விழா, ஆண்டிலே வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கதும், பெருமைக்கு உரியதுமாகும்.
பெருந்தலைவர் காமராஜர் சாதனைகளைப் பிள்ளைகள் மட்டுமின்றிப் பெரியவர்களும் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய ஆசை.
முதலமைச்சராகக் காமராஜர் தமிழகத்தில் ஒன்பது ஆண்டுகாலம் நல்லாட்சி புரிந்தார். கல்விக்கும், தொழிலுக்கும்,காங்கிரஸ் கட்சிக்கும் அவர் செய்த சாதனைகள் கணக்கில் அடங்காதவைகளாகும்.
விருதுநகரிலே ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, போதிய கல்வி கற்கவும் வசதியற்ற சூழ்நிலையிலே வளர்ந்து, வாழ்ந்து, பின்னர் அரசியலிலே தொண்டராக ஒரு மாபெரும் கட்சியிலே இணைந்து, தனது உழைப்பால், தொண்டால் படிப்படியாக உயர்ந்தவர் தான் பெருந்தலைவர் காமராஜர். அவரது சாதனைகள் யாவுமே சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவைகள்.

செவ்வாய், 21 ஜூன், 2016

பன்னாட்டு யோகா நாள் (International Yoga Day)

பன்னாட்டு யோகா நாள் (International Yoga Day) ஆண்டுதோறும் சூன் 21 ஆம் நாள் கொண்டாடப்படும் என ஐக்கிய நாடுகள் அவை அறிவித்துள்ளது.
ஐயாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்தயோகா கலையின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்யும் வகையில் சர்வதேச யோகா நாளாக ஆண்டின் ஒரு நாளை ஐக்கிய நாடுகள் சபை அறிவிக்க வேண்டும் . என இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ஐநா பொதுச்சபையில்  2014 செப்டம்பர் 27 அன்று வலியுறுத்தி உரையாற்றியிருந்தார். சூன் 21 ஆம் நாளை அவர் இதற்காகப் பரிந்துரைத்திருந்தார். இரண்டு கதிர்த்திருப்பங்களில் ஒன்று நிகழும் இந்நாள்,வடக்கு அரைக்கோளத்தில் மிக நீண்ட நாளாகவும் உள்ளது. பல உலக நாடுகளில் இந்நாள் ஒரு குறிப்பிடத்தக்கதாகவும் உள்ளது என அவர் தெரிவித்தார். அமெரிக்கா,கனடா, சீனா உட்படப் பல உலக நாடுகள் நரேந்திர மோதியின் பரிந்துரையை ஆதரித்தன.
2014 டிசம்பர் 11 அன்று 193-உறுப்பினர்கள் கொண்ட ஐக்கிய நாடுகள் பொதுச் சபை சூன் 21 ஆம் நாளை 'பன்னாட்டு யோகா நாளாக' அறிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது.

திங்கள், 20 ஜூன், 2016

உலக அகதி நாள் (World Refugee Day)

உலக அகதி நாள்
உலக அகதி நாள் (World Refugee Day), ஆண்டுதோறும் ஜூன் 20-ம் நாளன்று நினைவுகூரப்பட்டு வருகின்றது.
2000 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள்பொதுச்சபையின் சிறப்புத் தீர்மானமொன்றின்படி, அகதிகளுக்கான தமது ஆதரவினை வெளிப்படுத்தும் முகமாக, உலக அகதிகள் தினமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆபிரிக்க அகதிகள் நாள் ஜூன் 20 இல் கொண்டாடப்படுவதால் இந்நாள் உலக அகதிகள் நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. பல்வேறு மோதல்களுக்குள் சிக்கி அகதிகளாக தாம் வசிக்கும் நாட்டினுள், பிற நாடுகளிலென இடம்பெயர்ந்து பல்வேறு துன்பங்களுக்குள்ளாகி வாழ்ந்துவரும் அகதிகள் பற்றிய விழிப்புணர்வினை உலக மக்களிடத்தில் ஏற்படுத்துவதே இந்நாளின் முக்கியமான நோக்கமாகும்.
அன்றைய நாள் உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெறும் பல்வேறு போர்களால் அரசியல், சமூகச் சூழல்களால் அகதிகளாக அல்லலுறும் அகதிகளை நினைவு கூரும் வகையில் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், கருத்தரங்குகள், இசை நிகழ்ச்சிகள், நினைவஞ்சலி நிகழ்வுகளெனப் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் (UNHCR) ஒவ்வோர் ஆண்டும் இந்நிகழ்வுகளுக்கான கருப்பொருளைத் தீர்மானிக்கிறது.

ஞாயிறு, 19 ஜூன், 2016

தந்தையர் தினம் 

தந்தையர் தினம் என்பது தந்தையர்களைகெளரவிப்பதற்காக கொண்டாப்படும் ஒரு நாளாகும். உலகின் 52 நாடுகளில் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமையிலும் வேறுபகுதிகளில் பிற நாட்களிலிலும் இந்த தினம் கொண்டாப்படுகிறது. அன்னையர்களைகெளரவிப்பதற்காக கொண்டாப்படும் அன்னையர் தினத்தை இந்த தினம் முழுமையடையச் செய்கிறது.

புதன், 15 ஜூன், 2016

உலக காற்று தினம் (Global Wind Day)

காற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு நாளாக உலக காற்று தினம் அனுசரிக்கப்படுகிறது. இது ஆண்டுதோறும் நடைபெறும் உலகளாவிய நிகழ்ச்சியாகும். இதை ஐரோப்பிய காற்று ஆற்றல் ஆணையமும், உலகளாவிய காற்று ஆற்றல் மன்றமும் ஒழுங்குப்படுத்தி வருகின்றது.

செவ்வாய், 14 ஜூன், 2016

உலக இரத்ததானம் செய்வோர் தினம்

இரத்தப் பிரிவுகளை வகைப்படுத்தி, நோபல் பரிசு பெற்ற ஆஸ்திரிய உயிரியல் வல்லுநர் கார்ல் லேண்ட்ஸ்டெய்னர் (KarlLandsteiner) பிறந்த தினம் இன்று (ஜூன் 14). உலக சுகாதார ஸ்தாபனம், செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சர்வதேச சம்மேளனம், இரத்ததானமளிப்போர் அமைப்புக்களின் சர்வதேச நிறுவனம், இரத்தப் பரிமாற்றல் சர்வதேச கழகம் எனும் நான்கு பிரதான அமைப்புக்களினால் ஜூன் மாதம் 14ம் திகதி உலக இரத்ததானம் செய்வோர் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது. இத்தினமானது இன்று 13 ஆண்டு நிறைவை அனுஷ்டிக்கிறது.

சனி, 21 மே, 2016

பிளேட்டோ

பிளேட்டோ: (Plato, கிமு 427 - கிமு 347 ) பெரும் செல்வாக்குள்ள கிரேக்கத் தத்துவஞானியாவார்.இவர் சாக்கிரட்டீசின்சீடர், அரிஸ்டாட்டிலின் குரு. பிளாட்டோ தலைசிறந்த கிரேக்க தத்துவஞானி, கணிதவியல் அறிஞராவார். சாக்ரடீஸின் மாணவரான இவர் தத்துவ தர்க்கங்களை எழுதியுள்ளார். இவர் மேற்கு உலகின் முதல் கல்விக் கூடமாக ஏதென்ஸ் நகரில் அகாடமியை நிறுவினார். இவர் தனது ஆதரவாளர் சாக்ரடீஸ் மற்றும் தனது மாணவர் அரிஸ்டாட்டிலின் உடன் இணைந்து மேற்குலகின் தத்துவம் மற்றும் அறிவியலுக்கான அடிக்கல்லை நாட்டினார். இவரைப்பற்றி ஆய்வாளரான ஏ. என். ஒயிட்ஹெட் பின்வருமாறு கூறியுள்ளார்.

பிளாட்டோ ஒரு சிறந்த எழுத்தாளர் என்பது அவர் எழுதியுள்ள சாக்ரடீஸின் கேள்வி பதிலில் இருந்து தெரிகிறது. இதில் முப்பத்தாறு உரையாடல், பதிமூன்று கடிதங்களை இவர் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. பிளாட்டோவின் எழுத்துக்கள் பல வடிவங்களில் வெளியிடப்பட்டுள்ளன. இதன் காரணமாக பிளாட்டோ எழுதியவற்றுக்கு பெயரிடுதல் மற்றும் குறிப்பிடுதலை பற்றி விவாதிக்கும் பல்வேறு கூட்டங்கள் நடைபெற வழிவகுத்தது. பிளாட்டோவின் உரையாடல்கள் தத்துவம், தர்க்கம், நெறிமுறைகள், சொல்வளம் மற்றும் கணிதம் உள்ளிட்ட பல துறைகளை கற்பிக்க பயன்பட்டது.

வெள்ளி, 20 மே, 2016

கியூபா விடுதலைப் போராட்டம் (1902–1959)

விடுதலைப் போராட்டம் (1902–1959)

அமெரிக்க அரசின் பொம்மை அரசாங்கமாக கியூபாவில் இருந்த ஆட்சியாளர்கள் செயல்பட்டு வந்தனர். அவ்வபோது ஏற்பட்ட போராட்டங்களை பொம்மை அரசாங்கம் அமெரிக்காவின் துணையோடு நசுக்கி வந்தது. எசுபானிய அமெரிக்க போருக்கு பிறகு பாரிஸ் உடன்படிக்கை (1898) கையெழுத்திடப்பட்டது.அதன்படி $ 20 மில்லியன் பணம் கொடுத்து ஐக்கிய அமெரிக்கா போர்டோ ரிகோ, பிலிப்பைன்ஸ், மற்றும் குவாம் ஆகிய பகுதிகளை விட்டுக்கொடுத்தனர். கியூபா மே 20, 1902 இல் அமெரிக்காவிடமிருந்து சுதந்திரம் பெற்று கியூபா குடியரசு என பெயர் மாற்றப்பட்டது. 1924 ல், ஜெரார்டோ மசாடோ ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது நிர்வாகத்தின் போது, சுற்றுலா குறிப்பிடத்தக்களவில் அதிகரித்துள்ளது, மற்றும் அமெரிக்கர்களுக்குச் சொந்தமான விடுதிகள் மற்றும் உணவகங்கள் சுற்றுலா பயணிகள் வருகைக்கேற்பக் கட்டப்பட்டன.

ஞாயிறு, 8 மே, 2016

அன்னையர் தினம்

அன்னையர் தினம் 2016 இன் முக்கியத்துவம்
  அன்னையர் தினம் மே இரண்டாவது ஞாயிறன்று ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ஒரு விடுமுறை ஆகும். அது தாய்மை நினைவுபடுத்துவதற்கிறது எல்லா தாய்மார்களையும் மற்றும் அம்மா புள்ளிவிவரங்கள் (பாட்டி, பெரிய-பாட்டி, மாற்றாந்தாய்கள், மற்றும் வளர்ப்பு தாய்மார்கள் உட்பட) அதே போல் சமூகத்தின் தங்கள் பங்களிப்பை ரசிப்பான் என்று ஒரு நாள்.

அன்னையர் தின வரலாறு


          2016 தேதிகள் மீண்டும் ஐக்கிய அமெரிக்கா பெண்களின் அமைதி குழுக்கள் அடிக்கடி அமைதிக்கு ஆதரவாக மற்றும் போருக்கு எதிரான விடுமுறை மற்றும் வழக்கமான நடவடிக்கைகள் நிறுவ முயன்ற போது 19 ஆம் நூற்றாண்டில், அம்மா தின வரலாறு. ஒரு பொதுவான வழக்கமான நடவடிக்கை யாருடைய மகன்கள் அமெரிக்க உள்நாட்டுப் போரில் சண்டையிட்டு அல்லது இறந்து விட்டதாக தாய்மார்களின் குழுக்களின் கூட்டம் இருந்தது.


1868 ஆம் ஆண்டில், ஆன் ஜார்விஸ், உள்நாட்டு போரின் போது பிரிக்கப்பட்டுள்ளது என்று குடும்பங்கள் மீண்டும் பொருட்டு ஒரு "அன்னையர் நட்பு தினம்" நிறுவ ஒரு குழு உருவாக்கப்பட்டது. 1870 கள் மற்றும் 1880 ல் பல வரையறுக்கப்பட்ட அனுஷ்டிப்புகளுக்கு இருந்தன, ஆனால் யாரும் அந்த அப்பால் அங்கீகாரம் பெற்றது. அந்த நேரத்தில், அமெரிக்காவில் பிராட்டஸ்டன்ட் பள்ளிகள் ஏற்கனவே பல கொண்டாட்டங்கள் நடைபெற்றது மற்றும் நியூயார்க் நகர, ஜூலியா வார்டு ஹோவே இப்போதெல்லாம் அன்னையர் என அழைக்கப்படும் ஒரு விடுமுறை சேர்ந்து பிரிவின் ஜூன் 2, 1872 அன்று ஒரு போர் எதிர்ப்பு கடைபிடித்தல் (அமைதிக்கான அன்னையர் தினம்) தலைமையிலான தின அறிவிப்பானது.

பல ஆண்டுகளுக்கு பின்னர் மே 13 ம் தேதி ஒரு அன்னையர் தினம் அனுசரிக்கப்படுகிறது, 1877 ஆல்பியன், மிச்சிகன் கலக்கமடைந்த வெளி மைரோன் Daughterty என்ற பிரசங்கம் முடிக்க முடுக்கிவிடப்பட்டு யார் ஜூலியட் கேல்ஹம் Blakeley கொண்டாடுகிறது தன்னடக்கம் இயக்கம் தொடர்பான பிரச்சினையால் ஏனெனில் அவரது நடவடிக்கைகளை நடைபெற்றது மற்றும் இருந்தது , அவரது மகன்கள் ஒவ்வொரு ஆண்டும் அவரது அஞ்சலி செலுத்தினர் மற்றும் அவர்களின் தாய்மார்கள் புகழ தூண்டப்படுவார்கள்.

1880 களின் முற்பகுதியில், ஆல்பியன் உள்ள மெத்தொடிஸ்ட் எபிஸ்கோபல் ஒதுக்கி இரண்டாவது ஞாயிறு மே அன்னையரின் சிறப்பு பங்களிப்புகளை அங்கீகரிக்க அமைக்க. அதன் தற்போதைய வடிவத்தில், அன்னையர் தினம் மே 9-ம் தேதி அவரது தாயார், ஆன் ஜார்விஸ், இறப்பை தொடர்ந்து ஜான் Wanamaker உதவியுடன் அன்னா ஜார்விஸ் நிறுவப்பட்டது, 1905 உத்தியோகபூர்வ சேவை அடுத்த ஆண்டு நாள் மே 10, 1908 இல் இருந்தது, மற்றும் பரவலாக நியூயார்க் கொண்டாடப்படுகிறது வேண்டும் அறிவிக்கப்பட்டது.

பின்னர் ஜார்விஸ் சர்வதேச விடுமுறை ஒரு அமெரிக்கா தேசிய விடுமுறை தினமாக அன்னையர் தினத்தை நிறுவுவதற்கு பின்னர் பிரச்சாரம். விடுமுறை, 1910-ல் மேற்கு வர்ஜீனியா மாநிலத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது, மற்றும் நாடுகளுடன் விரைவாக வெளியிடப்பட்டது.

அன்னையர் தினம் 2016 வழக்கங்கள்
அன்னையர் தினம் 2016 மரபுகள் ஒரு பகுதியாக, குழந்தைகள் தங்களது தாய் எண்ணிக்கை அட்டைகள் அல்லது பரிசுகளை அனுப்ப அல்லது அவரது வருகை ஒரு முயற்சி எடுக்கிறார்கள். அவர்கள் தங்கள் நன்றியைக் காட்டுவதற்கான ஒரு பண்டிகை மதிய அல்லது இரவு தங்கள் தாய்மார்கள் எடுத்து. சில குழந்தைகள் கூட இதனால் அவர்களின் தாய்மார்கள் குடும்பத்திற்கு உணவு தயாரித்து ஒரு இடைவெளி கொடுத்து, அவர்களது தாய்மார்கள் பெருமளவில் மற்றும் விரிவான உணவைச் சமைக்கலாம் அனைத்து வழியில் செல்ல.

தாயின் நாள் தாய்மார்கள் தாக்கல் செய்யப்பட்ட அதிகாரபூர்வ மலர் சிவப்பு கார்னேஷன் ஆனால் ஒரு நபர் தான் பூ எந்த பற்றி கொடுக்க அதை ஏற்று உள்ளது. மற்றொரு பாரம்பரியம் இறந்த தாய்மார்கள் கல்லறையில் வெள்ளை நிற இளஞ்சிவப்பு பூக்கள் காட்சிக்கு வைப்பதை. மற்ற பொதுவான அன்னையர் தினம் பரிசு போன்ற ஒரு ஸ்பா ஒரு அழகு சிகிச்சை அல்லது பயணம் மலர்கள், சாக்லேட், ஆடை, நகை மற்றும் விருந்தளித்து, உள்ளன. நாட்கள் மற்றும் அன்னையர் தினத்தில் முன்னணி வாரங்களில், பல பள்ளிகள் தங்கள் மாணவர்களுக்கு அவர்களது தாய்மார்கள் ஒரு கையால் அட்டை அல்லது சிறிய பரிசு தயார் செய்ய உதவும்.

போது அன்னையர் தினம் 2016 ஆகும்


அன்னையர் தினம் ஒரு கூட்டாட்சி விடுமுறை இல்லை மற்றும் மே இரண்டாவது ஞாயிறன்று விழுகிறது. விடுமுறை தேதி ஒவ்வொரு ஆண்டும் மாற்றுகிறது ஆனால் எப்போதும் ஒரு ஞாயிறன்று உள்ளது......