வியாழன், 1 ஜூலை, 2021

சமையல் எரிவாயு விலை ரூ.25 உயர்வு, கொரோனா பாதிப்பால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த விலை உயர்வு நியாயமல்ல. - DR.S.ராமதாஸ்


 சமையல் எரிவாயு விலை ரூ.25 உயர்வு ஏழைகளை பாதிக்கும்: மத்திய, மாநில அரசுகள் விலையை குறைக்க வேண்டும்! - DR.S.ராமதாஸ்

மானியத்துடன் கூடிய சமையல் எரிவாயு உருளையின் விலை மீண்டும் ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 5 மாதங்களில் ஐந்தாவது முறையாக சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த விலை உயர்வு நியாயமல்ல.

இந்தியாவில் கொவிட் தடுப்பூசிகளை சரியான நேரத்தில் விநியோகிக்க டிஜிட்டல் தொழில்நுட்பம் விரிவாக பயன்படுத்தப்பட்டது.- DR.ஹர்ஷ் வர்தன்


 ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின்(எஸ்சிஓ) சுகாதாரத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் டாக்டர் ஹர்ஷ் வர்தன் காணொலி காட்சி மூலம் பேசியதாவது:

எஸ்சிஓ உறுப்பு நாடுகளின் சுகாதார அமைச்சர்களை சந்திப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கொவிட்-19 பொது சுகாதார அவசரநிலையாக அறிவிக்கப்பட்டு 18 மாதங்கள் ஆகிவிட்டன. இது வளர்ந்த நாடுகள் உட்பட ஒட்டு மொத்த உலகத்தையும் உலுக்கிவிட்டது.

ஜம்மு காஷ்மீர் செல்கிறது ஓய்வு பெற்ற நீதிபதி திருமதி. ரஞ்சனா பிரகாஷ் தேசாய், தலைமையிலான எல்லை வரையறை ஆணையம்


 ஓய்வு பெற்ற நீதிபதி திருமதி, ரஞ்சனா பிரகாஷ் தேசாய், தலைமையிலான எல்லை வரையறை ஆணையம், தலைமை தேர்தல் ஆணையர்  திரு சுஷில் சந்திரா, முன்னிலையில் ஜம்மு காஷ்மீரை ஜூலை 6ம் தேதி முதல் 9ம் தேதிவரை பார்வையிட  முடிவு செய்துள்ளது.

இந்த பயணத்தின் போது, அரசியல் கட்சிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாக அதிகாரிகள், 20 மாவட்டங்களின் துணை ஆணையர்களுடன், எல்லை வரையறை ஆணைய அதிகாரிகள் கலந்துரையாடுவர்.

ஜெய்ஹிந்த் என்ற உணர்வு முழக்கம் ஒரு கட்சிக்கு சொந்தமானது அல்ல. நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவானது.- E.R.ஈஸ்வரன் MLA


 தமிழக சட்டமன்றத்தில் இரண்டு ஆட்சிகளில் நிகழ்த்திய ஆளுநர் உரையில் உள்ள முரண்பாட்டை சுட்டிக்காட்டி முந்தைய அரசு பாரதிய ஜனதா கட்சியினுடைய கட்டுப்பாட்டில் இருந்ததையும், இப்போதைய அரசு யாருக்கும் கட்டுப்படாத தலைநிமிர்ந்த அரசாகவும் செயல்படுவதை குறிப்பிட்டிருந்தேன். ஒன்றிய அரசோடு உறவுக்கு கை கொடுப்பது வேறு. தன்னை காப்பாற்றிக் கொள்ள தலைகுனிவது வேறு. ஆட்சியாளர்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள தலைகுனிந்து இருந்த தமிழக அரசு மே 2-ஆம் தேதிக்கு பிறகு தலைநிமிர்ந்து இருக்கிறது என்று பலராலும் சொல்லப்பட்ட உண்மைதான் நான் குறிப்பிட்டேன். 

வீரதீர செயல்களுக்கான விருதுகள் வென்றவர்களை மையமாகக் கொண்ட மெய்நிகர் அருங்காட்சியகத்தை உருவாக்கும் முயற்சியில் பாதுகாப்பு அமைச்சகம் ஈடுபட்டுள்ளது.


 75-வது சுதந்திர ஆண்டை நாடு கொண்டாடவிருக்கும் தருணத்தில், இந்தியாவின் துணிச்சல் மிக்க வீரர்களை கௌரவிக்கும் வகையில் வீரதீர செயல்களுக்கான விருதுகள் வென்றவர்களை மையமாகக் கொண்ட மெய்நிகர் அருங்காட்சியகத்தை உருவாக்கும் முயற்சியில் பாதுகாப்பு அமைச்சகம் ஈடுபட்டுள்ளது.

எந்தவிதமான நிதி தாக்கமும் இல்லாமல் இந்திய ராணுவ தளவாட உற்பத்தியாளர்கள் சங்கம், இந்திய தொழில்துறை கூட்டமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து பாதுகாப்பு அமைச்சகம் இந்தத் திட்டத்தை அமல்படுத்தும். இதற்கான அனுமதி கடிதத்தை பாதுகாப்புச் செயலாளர் டாக்டர் அஜய்குமார், இந்திய ராணுவ தளவாட உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு ஜெயந்த் டி பாட்டிலிடம் இன்று (ஜூன் 30, 2021) புதுதில்லியில் வழங்கினார். இந்தத் திட்டம் விரைவில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.