ஓய்வு பெற்ற நீதிபதி திருமதி, ரஞ்சனா பிரகாஷ் தேசாய், தலைமையிலான எல்லை வரையறை ஆணையம், தலைமை தேர்தல் ஆணையர் திரு சுஷில் சந்திரா, முன்னிலையில் ஜம்மு காஷ்மீரை ஜூலை 6ம் தேதி முதல் 9ம் தேதிவரை பார்வையிட முடிவு செய்துள்ளது.
இந்த பயணத்தின் போது, அரசியல் கட்சிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாக அதிகாரிகள், 20 மாவட்டங்களின் துணை ஆணையர்களுடன், எல்லை வரையறை ஆணைய அதிகாரிகள் கலந்துரையாடுவர்.
இதில் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் 2019-ன் படி எல்லை வரையறை தொடர்பான முதல் கட்ட தகவல்கள் பெறப்படும்.
இந்த எல்லை வரையறை ஆணையம் 2020 மார்ச் மாதம் உருவாக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் 3வது உறுப்பினர் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் மாநில தேர்தல் ஆணையர். இந்த சந்திப்பில் அனைத்து தரப்பினரும் மதிப்புமிக்க ஆலோசனைகளை தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக