திங்கள், 1 நவம்பர், 2021

எதிர்காலத்தில் குறைந்த அளவிலான கார்பன் வெளியேற்றத்தை உருதி செய்வதற்கான நடவடிக்கைகளுக்கு உரிய ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்.- திரு பூபேந்தர் யாதவ்


 கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் ஐ.நா பருவநிலை மாற்ற மாநாட்டில், பிரேசில், தென்னாப்ரிக்கா, இந்தியா மற்றும் சீனா நாடுகளை உள்ளடக்கிய BASIC அமைப்பின் சார்பில், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் அறிக்கை தாக்கல் செய்தார்.

COP26 சுமார் ஓராண்டு காலம் தாமதமாக நடைபெற்றாலும், இதில் சம்பந்தப்பட்ட நாடுகள் ஏற்கனவே, தங்களது நாட்டில் தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகளை செயல்படுத்த தொடங்கிவிட்டதை சுட்டிக்காட்டிய அவர். பாரீஸ் உடன்படிக்கை விதிமுறைப் புத்தகம் COP26-ல் முடிவுக்கு வருவதாக தெரிவித்தார்.

டேராடூனில் உத்தராகண்டின் முதல் இணையதள நிலையம்: மத்திய அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் தொடங்கி வைத்தார்


 டேராடூனில் உத்தராகண்டின் முதல் இணையதள நிலையத்தை மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப இணை அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர், புதுதில்லியிலிருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.  இந்திய தேசிய இணையதள  நிலையத்தின்(நிக்சி) 10-வது நிலையம் உத்தராகண்டில்  இணையதளம் மற்றும் பிராட்பேண்ட் சேவைகளை மேம்படுத்த உதவும். இந்நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் திரு ராஜீவ் சந்திர சேகர் பேசியதாவது

உரத் தட்டுப்பாடு குறித்த வதந்திகளுக்கு மத்திய ரசாயனம் & உரத்துறை அமைச்சர் திரு மன்சுக் மான்டவியா விளக்கம்


 நாட்டில் உரத் தட்டுப்பாடு நிலவுவதாக வெளியான வதந்திகளுக்கு,  மத்திய ரசாயனம் & உரத் துறை அமைச்சர் திரு மன்சுக் மான்டவியா மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்த தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு மாறானவை என்று கூறியுள்ள மத்திய அமைச்சர், நவம்பர் மாதத்திற்கான உர உற்பத்தி இலக்கு குறித்து அதிகாரிகாரிகளுடன் ஆய்வு செய்ததாக குறிப்பிட்டுள்ளார். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தேவையை விட, உற்பத்தி அதிகமாக இருக்கும். யூரியா உரத்தின் தேவை 41 லட்சம் மெட்ரிக் டன்னாக உள்ள நிலையில், 76 லட்சம் மெட்ரிக் டன் யூரியா உற்பத்தி செய்யப்பட உள்ளது. அதேபோன்று, டிஏபி உரம் 17 லட்சம் மெட்ரிக் டன் தேவைப்படுமென மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், 18 லட்சம் மெட்ரிக் டன் டிஏபி உரம் உற்பத்தி செய்யப்படவுள்ளது. என்பிகே உரங்கள் 15 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு தேவைப்படும் நிலையில் 30 லட்சம் மெட்ரிக் டன் விநியோகிக்கப்பட உள்ளது.

மருத்துவ தொழிலில் மனிதவள பற்றாக்குறைப் பிரச்சனைக்கு அவசர தீர்வுகாண வேண்டியது அவசியம்.- திரு எம். வெங்கைய நாயுடு


 மருத்துவத் தொழிலில் மனிதவளப் பற்றாக்குறை பிரச்சணைக்கு அவசரத்தீர்வு காணவேண்டியது அவசியம் என குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கைய நாயுடு வலியுறுத்தியுள்ளார். நமது சுகாதார கட்டமைப்பை, தொடக்க நிலை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலைக்கு விரிவுபடுத்த வேண்டியதன் தேவையை கொவிட் 19 பெருந்தொற்று உணர்த்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை மீட்டெடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு உண்டு.- DR.S.ராமதாஸ்



வன்னியர் இட ஒதுக்கீட்டு சட்டம் ரத்து பெரும் ஏமாற்றம்: சமூகநீதியை மீட்க சட்ட, அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்க!.- DR.S.ராமதாஸ்

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்கி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் மிக, மிக பின்தங்கிய நிலையில் உள்ள வன்னியர்களின் சமூக, கல்வி மேம்பாட்டிற்காக போராடிப் பெறப்பட்ட இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டிருப்பது  பேரதிர்ச்சி அளிக்கிறது.