வியாழன், 3 மார்ச், 2022

நட்பு நாடுகளின் கடற்படைகளுடன் இணைந்து இந்திய கடற்படை மேற்கொள்ளும் கூட்டுப் பயிற்சி வங்க கடல் பகுதியில் கடந்த 1ம் தேதி தொடங்கியது.


 நட்பு நாடுகளின் கடற்படைகளுடன் இணைந்து இந்திய கடற்படை மேற்கொள்ளும் கூட்டுப் பயிற்சி வங்க கடல் பகுதியில் கடந்த 1ம் தேதி தொடங்கியது.

வாழ்க்கையை எளிதாக்க தொழில்நுட்பத்தை அதிகபட்சம் பயன்படுத்துவது எவ்வாறு என்பதற்கு நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.- பிரதமர் திரு.நரேந்திர மோடி

 


பட்ஜெட்டின் கோட்பாடுகளை ஒரு கால வரம்புக்குள் முழுமையாக அமலாக்க சம்பந்தப்பட்டவர்களை ஊக்கப்படுத்தவும், அவர்களுடன் கலந்தாலோசிக்கவும் பட்ஜெட்டுக்குப் பிந்தைய தொடர்ச்சியான இணையவழி கருத்தரங்குகளில் ஏழாவது கருத்தரங்கில் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். இந்தக் கருத்தரங்குகளின் முக்கியத்துவத்தை விவரித்த அவர், “பட்ஜெட்டின் வெளிச்சத்தில் இதில் உள்ள அம்சங்களில் விரைவாகவும், தடையின்றியும், அதிகபட்ச பயனுடனும் நாம் எவ்வாறு அமலாக்க முடியும் என்பதை உறுதி செய்வதற்கான கூட்டு முயற்சியாகும் இது” என்றார்.

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்புடன் நாட்டுக்கு அழைத்து வரப்படுவார்கள். - குடியரசு துணைத் தலைவர் திரு.எம்.வெங்கையா நாயுடு நம்பிக்கை


 உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்புடன் நாட்டுக்கு அழைத்து வரப்படுவார்கள் என்றும், இந்த திசையில் அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது என்றும் குடியரசு துணைத் தலைவர் திரு.எம்.வெங்கையா நாயுடு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

விஜயவாடாவில் இன்று நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய அவர், போர் பகுதியில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்கு மேற்கொள்ளப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் பற்றி பிரதமர் திரு.நரேந்திர மோடி, வெளியுறவு அமைச்சர் திரு.எஸ்.ஜெய்சங்கர் ஆகியோர் தம்மிடம் எடுத்துரைத்திருப்பதாக கூறினார்.

ஒருவர் எத்தனை மொழிகளை கற்றாலும் தாய்மொழிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.- குடியரசுத் துணைத் தலைவர் திரு. எம் .வெங்கையா நாயுடு


 இளைய தலைமுறையினரிடையே நமது மதிப்பு வாய்ந்த கலாச்சார பாரம்பரியம் குறித்த பெருமையை விதைக்கும் வகையில் இந்திய கண்ணோட்டத்தோடு இந்திய வரலாற்று பாடப் புத்தகங்களை மறு ஆய்வு செய்ய குடியரசுத் துணைத் தலைவர் திரு. எம் .வெங்கையா நாயுடு வலியுறுத்தினார்.

ஆந்திரப் பிரதேசத்திலுள்ள ஏலூருவில் சர் சி. ஆர். ரெட்டி கல்வி நிலையங்களின் 75-வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில் பேசிய அவர், ஒருகாலத்தில் உலகத்துக்கே குருவாக இந்தியா விளங்கியது என்றும் நமது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை பாதுகாப்பதற்காக நமது வேர்களுக்கு மீண்டும் செல்ல வேண்டும் என்றும் மாணவர்களுக்கு அவர் எடுத்துரைத்தார்.

புதன், 2 மார்ச், 2022

பாட்டாளி மக்கள் கட்சி வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை முக்கிய அம்சங்கள்

பாட்டாளி மக்கள் கட்சி வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை

முக்கிய அம்சங்கள்

1. தமிழ்நாட்டில் வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பல ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருவதன் பயனாக, முதன் முறையாக கடந்த ஆண்டில் வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக 2022-23 ஆண்டும் வேளாண் நிதிநிலை அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்யவுள்ளது. தமிழக அரசின் முதல் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடத்தக்க வகையில் சிறப்புத் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாத நிலையில், நடப்பாண்டின் நிதிநிலை அறிக்கையிலாவது சிறப்புத் திட்டங்கள் இடம்பெற வேண்டும் என்று பாமக விரும்புகிறது. அதை உறுதி செய்யும் வகையில், இந்த ஆண்டிற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் 15ஆவது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை சிறப்பு கவனத்துடன் தயாரிக்கப்பட்டிருக்கிறது.