வியாழன், 3 மார்ச், 2022

நட்பு நாடுகளின் கடற்படைகளுடன் இணைந்து இந்திய கடற்படை மேற்கொள்ளும் கூட்டுப் பயிற்சி வங்க கடல் பகுதியில் கடந்த 1ம் தேதி தொடங்கியது.


 நட்பு நாடுகளின் கடற்படைகளுடன் இணைந்து இந்திய கடற்படை மேற்கொள்ளும் கூட்டுப் பயிற்சி வங்க கடல் பகுதியில் கடந்த 1ம் தேதி தொடங்கியது.

இதில் மொத்தம் 26 போர்கப்பல்கள், 21 விமானங்கள் மற்றும் ஒரு நீர்மூழ்கி கப்பல் ஆகியவை பங்கேற்கின்றன.  மார்ச் 4ம் தேதி வரை நடைபெறும் கூட்டுப் பயிற்சியில் பலவிதமான நவீன கடல்சார் பயிற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கடல் பகுதியில் நடைபெறும் பயிற்சிகள் தொடங்கும் முன் நடந்த கூட்டத்துக்கு இந்திய கடற்படையின் கிழக்கு கட்டுப்பாட்டு மைய தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் சஞ்சய் பல்லா தலைமை தாங்கினார். இதில் நட்பு நாடுகளின் கடற்படை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த மிலன் கூட்டுப் பயிற்சியில் சிறந்த நடைமுறைகள் பகிர்ந்து கொள்ளப்பட்டு,  கடற்படைகளின் செயல் திறன் மேம்படுத்தப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக