செவ்வாய், 8 மார்ச், 2022

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ஹைட்ரஜன் மற்றும் மின்சார வாகனங்களில் தொழில்துறையின் பங்களிப்பும் முதலீடுகளும் அவசியம்.- திரு பியூஷ் கோயல்


 பருவநிலை வீரர்களுக்கு மூன்று செயல்திட்டங்களை மத்திய வர்த்தகம், தொழில்கள், நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் வழங்கினார்.

பருவநிலை தொழில்முனைதலை ஒரு இயக்கமாக மேற்கொள்ளுமாறு பருவநிலை வீரர்களுக்கு அழைப்பு விடுத்த அவர், பருவநிலை நீதிக்கான புதிய விடியலை இருபத்தி ஓராம் நூற்றாண்டின் கண்டுபிடிப்புகள் உருவாக்குவதை உறுதி செய்யுமாறு அவர்களைக் கேட்டுக்கொண்டார்.

கரி வாயிக்கள் உமிழ்வில் இருந்து வளர்ச்சி மீள வேண்டும் என்றும்புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ஹைட்ரஜன் மற்றும் மின்சார வாகனங்களில் தொழில்துறையின் பங்களிப்பும் முதலீடுகளும் அவசியம் என்றும் அவர் கூறினார். மூன்றாவதாக, வீட்டிலிருந்து மாற்றம் உருவாக வேண்டும் என்றும் இந்தியா முழுவதும் உள்ள குடும்பங்கள் நிலைத்தன்மை மிக்க, இயற்கையான பொருட்களைத் தங்களது தினசரி வாழ்க்கையில் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

"ஒரே ஒரு பூமி- சூழலியல் குறித்த விவாதம்" என்ற சிறப்பு உரையாடலில் பேசிய அமைச்சர் இவ்வாறு கூறினார். எக்ஸ்போ 2020 கண்காட்சியில் இந்தியா அரங்கு மற்றும் பாம்லா பவுண்டேஷன் ஆகியவை இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.

உயிரி எரிபொருட்களைப் பொருத்தவரை இந்தியா வழிகாட்டலாம் என்று கூறிய அவர், நாட்டிற்கான நிலைத்தன்மைமிக்க எதிர்காலத்தை உருவாக்குவதற்கான அரசின் உறுதிக்குச் சான்றாக 2002-ம் ஆண்டு மத்திய பட்ஜெட் அமைந்துள்ளது என்று கூறினார்.

பின்பற்றக்கூடிய திட்டமாக இந்தியாவின் உஜாலா இயக்கம் அமைந்துள்ளது என்று அவர் கூறினார் மேலும் பேசிய திரு கோயல், பருவநிலை தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் 2.1 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான முதலீடுகளை ஈர்த்துள்ளன என்று அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக