சனி, 13 பிப்ரவரி, 2021

மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் முழுமையாக நிறைவு பெறாத சூழலை மனதில் கொண்டு அப்பணிகளை உடனடியாக முடிக்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு மெட்ரோ ரயில் நிர்வாகத்தை கேட்டுக் கொள்கிறேன்.- கே.எஸ். அழகிரி


சென்னை மாநகர மக்கள் நெரிசலை தவிர்ப்பதற்காக, டாக்டர் மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில் அன்றைய தமிழக முதலமைச்சர் திரு. மு. கருணாநிதி அவர்களது கோரிக்கையின் பேரில், ரூபாய் 14 ஆயிரம் கோடி முதலீட்டில் முதற்கட்டமாக மெட்ரோ ரயில் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டு திட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் முதற்கட்டமாக சென்னை விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரை செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் நீட்சியாக வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரை நீட்டிக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் திட்டத்தை நாளை பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருக்கிறார். 

தமிழக அரசே உச்சநீதிமன்றத்தை அணுகி கூடுதல் கால அவகாசம் பெற்று இரு எம்.டெக்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அடுத்த ஒரு மாதத்திற்குள் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.-DR.S.ராமதாஸ்

 இரு எம்.டெக்., படிப்புகள் நிறுத்தம்: பிடிவாதம் பிடிக்கும் அண்ணா

பல்கலை மீது நடவடிக்கை தேவை - DR.S.ராமதாஸ்

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் இட ஒதுக்கீட்டு பிரச்சினை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இரு எம்.டெக்., படிப்புகளின் மாணவர் சேர்க்கையை  மீண்டும் தொடங்க உச்ச நீதிமன்றத்தை அணுகும்படி சென்னை உயர்நீதிமன்றம் ஆலோசனை வழங்கியும்  அதை ஏற்க அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் மறுத்திருக்கிறது. மாணவர்களின் நலனை பாதிக்கக் கூடிய அண்ணா பல்கலைக் கழகத்தின் இந்த அணுகுமுறை கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் 13,190 தடுப்பூசிகள் இதுவரை பயனற்றுப் போய் உள்ளன - உடனடியாகப் பாதிக்கப்பட்டவர்களுக்குப் போடப்பட முடியாததால் என்பது மிகவும் அதிர்ச்சிக்கும், வருத்தத்திற்கும் உரியதல்லவா? - கி.வீரமணி

கரோனா தடுப்பூசிகள் 13,000 வீணாகலாமா?

காத்திருப்போருக்குப் பயன்பட்டிருக்க வேண்டும்.- கி.வீரமணி

தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் இன்று ஒரு தகவலைக் கூறியிருக்கிறார்.

கரோனா தடுப்பூசி என்பதை உடனடியாகப் பயன்படுத்தாவிட்டால் அது வீணாகி பயனற்றுப் போய் விடும் என்பது மருத்துவத்துறையும், ஆட்சியாளரும் அறிந்ததே!

ஜவுளித்துறையில் ஏற்றுமதி மற்றும் வேலை வாய்ப்பை அதிகரிக்க ரூ.6,000 கோடி மதிப்பிலான சிறப்பு நிதி உதவி திட்டத்துக்கும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.- திருமதி. ஸ்மிருதி இரானி


 மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திருமதி. ஸ்மிருதி இரானி மக்களவையில் எழுத்துப் பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:

* கொவிட் தொற்று காலத்தில் பிபிஇ உடைகள், என்-95 முகக் கவசங்கள்  உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்டன. 

கடந்தாண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை, 6 கோடி பிபிஇ உடைகள், 15 கோடி என்-95 முகக் கவசங்கள் தயாரிக்கப்பட்டன. பிபிஇ உடைகள் தயாரிப்புக்கு 1100 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன.

வெள்ளி, 12 பிப்ரவரி, 2021

''அடக்குமுறைச் சட்டங்களும் கொடுங்கோல் முகமும்'': அரசியல் பழி தீர்க்கும் ஆட்டம் ஆரம்பம்.- கே.எஸ்.அழகிரி

சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டம் (Unlawful Activities (Prevention) Act )  மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின்  124  A  (தேசத்துரோக குற்றச்சாட்டு) ஆகியவை, மக்கள் ஆட்சிக் கோட்பாட்டுக்கு எதிரானவை. இத்தகைய அடக்குமுறைச் சட்டங்கள், அடிப்படை மனித உரிமைகளைப் பறித்து, குற்றம்சாட்டப்பட்டவர்களை வாழ்நாள் முழுமையும் முடக்கும் தன்மை கொண்டவை. இவற்றைப் பயன்படுத்தி, மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு, மக்களுக்காகப் போராடுகின்றவர்களையும்,  அரசின் கொள்கைகளுக்கு எதிராக மாற்றுக் கருத்துக் கொண்டவர்களையும் கைது செய்யும் போக்கு அண்மைக் காலத்தில் வளர்ந்து வருகின்றது.