சனி, 13 பிப்ரவரி, 2021

தமிழ்நாட்டில் 13,190 தடுப்பூசிகள் இதுவரை பயனற்றுப் போய் உள்ளன - உடனடியாகப் பாதிக்கப்பட்டவர்களுக்குப் போடப்பட முடியாததால் என்பது மிகவும் அதிர்ச்சிக்கும், வருத்தத்திற்கும் உரியதல்லவா? - கி.வீரமணி

கரோனா தடுப்பூசிகள் 13,000 வீணாகலாமா?

காத்திருப்போருக்குப் பயன்பட்டிருக்க வேண்டும்.- கி.வீரமணி

தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் இன்று ஒரு தகவலைக் கூறியிருக்கிறார்.

கரோனா தடுப்பூசி என்பதை உடனடியாகப் பயன்படுத்தாவிட்டால் அது வீணாகி பயனற்றுப் போய் விடும் என்பது மருத்துவத்துறையும், ஆட்சியாளரும் அறிந்ததே!

தமிழ்நாட்டில் 13,190 தடுப்பூசிகள் இதுவரை பயனற்றுப் போய் உள்ளன - உடனடியாகப் பாதிக்கப்பட்டவர்களுக்குப் போடப்பட முடியாததால் என்பது மிகவும் அதிர்ச்சிக்கும், வருத்தத்திற்கும் உரியதல்லவா?

மத்திய அரசிடம் வயதான மூத்தகுடி மக்களுக்குப் தடுப்பூசி போடுவதற்கு அனுமதி கேட்டுள்ளோம் என்று கூறியுள்ளார். சுகாதாரத்துறை செயலாளர்.

இந்தத் துறை Concurrent List என்ற ஒத்திசைவுப் பட்டியலில் மத்திய, மாநில அரசுகள் இரண்டுமே அதிகாரம் பெற்ற துறையாகும். இருந்தும் தடுப்பூசி மருந்துகளை அனுப்பிய பிறகு, அந்தந்த மாநில அரசும், சுகாதரத்துறையும் அதன் தேவை முன்னுரிமை வாய்ப்புப்படி பயன்படுத்திடும் உரிமையை மத்திய அரசு அனுமதித்திருந்தால் இந்த13,190 தடுப்பூசிகள் - வீணாகியிருக்குமா?

இதற்குக் காரணம் ஆட்சியாளரின் அணுகுமுறையில் உள்ள கோளாறுகளே! 

எங்களைப் போன்ற மூத்த குடி மக்கள் பலரும் பதிவு செய்து பல வாரங்கள் காத்திருப்பு ஒருபுறம் - வீணாகும் தடுப்பூசிகள் இன்னொருபுறம் என்பது நியாயந்தானா?

இப்போதாவது உடனடியாக விரும்பும், விண்ணப்பித்த மூத்த குடியினருக்குக் கரோனா தடுப்பூசி போடுவதை அனு மதித்து, தாமதிக்காமல் செயல்படுவது நல்லது; யோசிக்குமா அரசு?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக