வெள்ளி, 19 பிப்ரவரி, 2021

தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களுக்கு உள்ள நிலங்கள் அனைத்தையும் எச்.ராஜா-வின் “தாத்தா”எழுதி வைத்ததைப் போலவும் அதை மீட்க வந்த “பேரன்” போலவும் பேசி வருகிறார்.- சாமி. நடராஜன்



 கோவில் நிலங்கள் எச்.ராஜாவின் தாத்தா எழுதி வைத்தவையா?
- சாமி. நடராஜன், மாநில அமைப்பாளர், 
தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர்
பாதுகாப்பு சங்கம்

தமிழகம் முழுவதும் கோவில், மடம், அறக்கட்டளைகள், வக்ஃபோர்டு, தேவாலயங்கள் என சமயம் சார்ந்தவற்றின் இடங்களில் குடியிருப்பவர்கள், சாகுபடி செய்யும் விவசாயிகள், சிறுகடை வைத்து வாழ்க்கை நடத்துபவர்கள் 95% பேர் இந்து மக்களே. 

இவர்களுக்கு பட்டா கொடுப்பதைத்தான் இந்து மக்களின் நலன்களுக்காக உள்ள கட்சி என தன்னை காட்டிக் கொள்ளும் பாஜகவும் அதனுடைய தேசியச் செயலாளர் எச்.ராஜா, அர்ஜூன் சம்பத் போன்றவர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர். 

தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களுக்கு உள்ள நிலங்கள் அனைத்தையும் எச்.ராஜா-வின் “தாத்தா”எழுதி வைத்ததைப் போலவும் அதை மீட்க வந்த “பேரன்” போலவும் பேசி வருகிறார்.

மேலும் ஒரு படி மேலே சென்று அறநிலையத்துறையே இருக்கக்கூடாது, கோவிலையும், அதன் சொத்துக்களையும் எங்களிடமே ஒப்படைக்க வேண்டும் என உளறிக் கொண்டு இருக்கிறார். கோவில் இடங்களை பயன்படுத்தும் ஏழை, எளிய இந்து மக்களின் வாழ்வாதாரத்திற்கு எதிராக செயல்படும் இவர்களின் முகத்திரையை மக்கள் கிழித்தெறிவார்கள்.

1 கருத்து: