வியாழன், 25 பிப்ரவரி, 2021

சுகாதாரம் தொடர்பான அனைத்து விஷயங்களுக்கும் இந்தியாவில் தீர்வு வழங்கப்படும் என்ற நம்பிக்கையை ஒட்டுமொத்த மருத்துவ சூழலியல், உலக நாடுகளுக்கு வழங்க வேண்டும்.- பியூஷ் கோயல்


 

இந்திய மருந்தியல் மற்றும் சுகாதாரத் துறையில் உயர்ந்த தரத்தை நிலைநாட்டுவதற்கான வசதி, உறுதித்தன்மையில் சிறந்த வழிமுறைகளை பின்பற்றுமாறு மத்திய ரயில்வே, வர்த்தகம் மற்றும் தொழில், நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் திரு பியூஷ் கோயல் கேட்டுக்கொண்டுள்ளார்.

 மருந்தியல் மற்றும் மருத்துவ உபகரணங்கள் துறை பற்றிய 6-வது சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அவர், நாட்டில் சிறந்த தயாரிப்பு முறைகள் மேற்கொள்ளப்படுவதை நாம் அனைவரும் இணைந்து உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

 சுகாதாரம் தொடர்பான அனைத்து விஷயங்களுக்கும் இந்தியாவில் தீர்வு வழங்கப்படும் என்ற நம்பிக்கையை ஒட்டுமொத்த மருத்துவ சூழலியல், உலக நாடுகளுக்கு வழங்க வேண்டும்.

கட்டுப்பாடுகள் மற்றும் சிறந்த தயாரிப்பு முறைகள், சான்றுகள், ஒப்புதல்கள் போன்றவை, பொருட்களின் எண்ணிக்கையை அதிகரித்து, விலைகளைக் குறைக்க உதவிகரமாக இருக்கும் என்று திரு கோயல் கூறினார்.

 கடந்த சில ஆண்டுகளாக சுகாதாரத்துறையில் பொன்னான நாட்களை இந்தியா எதிர்கொண்டதாகக் கூறிய அமைச்சர், அடுத்த தசாப்தத்தில் இந்தியாவின் தரங்களை உலக நாடுகள் பின்பற்றும் வகையில் இந்திய தசாப்தமாக உருவாக்குவதற்காக நாம் பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் அதிக எண்ணிக்கையிலான நாடுகளுக்கு சமமான அளவில் மருந்துகள் கிடைப்பதற்கு வழி செய்யும் வகையில் டிரிப்ஸ் விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்க நாடுகள் முன்வைத்ததை நினைவுகூர்ந்த அமைச்சர், உலக வணிக அமைப்பின் 57 உறுப்பினர்கள் தற்போது இந்த முடிவிற்கு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக