ஞாயிறு, 21 பிப்ரவரி, 2021

ஜவுளித்துறையின் நூல் பற்றாக்குறைக்குத் தீர்வு காணுங்கள் : மத்திய அமைச்சர் ஸ்ம்ருதி இராணிக்கு தலைவர் ராகுல் காந்தி, எம்.பி . கடிதம்:


நூல் விலை உயர்வு மற்றும் இந்திய தொழில்துறையில் ஏற்பட்டுள்ள எதிர்விளைவுகள் தொடர்பாக இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

கொரோனோ பரவல் ஜவுளி விநியோகச் சங்கிலியைப் பெரிதும் பாதித்துள்ளது. கொரோனா பொது முடக்கத் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதிலும், குறைந்த அளவிலான உற்பத்தி காரணமாக காட்டன் நூல் உற்பத்தி குறைந்துள்ளது. படிப்படியாக உற்பத்தி அதிகரித்து வரும் நிலையில், நூல் விலை உயர்வும், விநியோக வீழ்ச்சியும் சேர்ந்து குறு, சிறு, நடுத்தர தொழில்துறையைப் பாதிப்படையச் செய்துள்ளது. இந்தியாவில் நூல் தட்டுப்பாடு இருந்தபோதிலும், வியட்நாம், வங்காள தேசம் மற்றும் பெரு ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் நூல், பொது முடக்கத்துக்குப் பிறகு அதிகரித்துள்ளது.

குறைந்த விலையில்  உற்பத்தி  செய்யும் வியட்நாம்,வங்காளதேசம் உள்ளிட்ட பிற நாடுகளின் ஏற்றுமதியாளர்களுடனான இந்திய தொழில் நிறுவனங்களின் போட்டி அதிகரித்துக் கொண்டே போகிறது. பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி காரணமாகப் பாதிக்கப்பட்ட இந்த தொழில்துறை, இன்னும் அதிலிருந்து மீளவில்லை.

இதன் காரணமாக, நமது ஏற்றுமதி தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் நான் திருப்பூருக்குச் சென்றபோது, தங்கள் ஆர்டர்களை செய்து முடிப்பதற்குப் போராட வேண்டியிருப்பதாக ஏற்றுமதியாளர்கள் தெரிவித்தனர்.

உள்ளூரில் நிலையான விலையில் கிடைப்பதற்காக நூல் ஏற்றுமதியை ரத்து செய்யுமாறு அவர்கள் கேட்டுக் கொண்டனர். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் அமைப்பு என்னிடம் கொடுத்த கடிதத்தின் பிரதியை இத்துடன் இணைத்துள்ளேன்.

இந்தச் சூழலில், தொழில்துறையில் உள்ள நமது சகோதர, சகோதரிகளுக்கு ஆதரவுக் கரம் நீட்டி, உலகச் சந்தையில் அவர்கள் வலுவாக இருப்பதற்குத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக