தொழில்துறை மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தகத்துறை (டிபிஐஐடி) ஏற்பாடு செய்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழி கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். பிரதமரால் உரை நிகழ்த்தப்பட்ட பட்ஜெட்டுக்குப் பிந்தைய எட்டாவது இணையவழிக் கருத்தரங்காகும் இது. இந்தக் கருத்தரங்கிற்கு உலகத்துக்காக இந்தியாவில் உற்பத்தி என்பது மையப் பொருளாக இருந்தது.